Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவே திரும்பிப்பார்க்கச் செய்த 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள இடம் எது தெரியுமா? #NPH 2

இந்தியாவே திரும்பிப்பார்க்கச் செய்த 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள இடம் எது தெரியுமா? #NPH 2

இந்தியாவே திரும்பிப்பார்க்கச் செய்த 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள இடம் எது தெரியுமா?

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வந்ததிலிருந்தே, புதிய இந்தியா பிறக்கவுள்ளதாக கூறி பல அதிரடி திட்டங்களை அவசரமாக கொண்டுவந்துகொண்டிருக்கின்றனர். அதன்படி, இந்தியாவில் முதன்முறையாக 200 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சின்னத்தில் இருக்கும் கோபுரத்தின் அட்டகாசமான வரலாறு தெரியுமா?தமிழ்நாடு அரசு சின்னத்தில் இருக்கும் கோபுரத்தின் அட்டகாசமான வரலாறு தெரியுமா?

முன்னதாக நவம்பர் 8, 2016 இல் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, பின் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் கொண்டுவரப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மிகக்கடுமையான பணப்புழக்கத் தட்டுப்பாடு நிலவியது.

இதன் காரணமாக, 200 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட 500 ரூபாய் நோட்டில் டெல்லி செங்கோட்டையும், 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் விண்கலம் படமும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், 200 ரூபாய் நோட்டில் இருக்கும் படம் எதனுடையது என்று பலருக்கு தெரிந்திருக்கவில்லை. அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடம். அதுகுறித்து பார்க்கலாம் வாருங்கள்.

 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள இடம்!

200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள இடம்!

200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ளது மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் உள்ள சாஞ்சி ஸ்தூபிகள் ஆகும். இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க பகுதி. மேலும், பழமை விரும்பிகளும், வரலாற்று ஆர்வமுடைய சுற்றுலாப் பயணிகளும் வந்து குவியும் சுற்றுலாத் தளமாகும்.

Abhinav Saxena

 அசோகர் தூண்

அசோகர் தூண்

இந்த ஸ்தூபிகள் மற்றும் குவிமாடங்கள் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். கி.மு 3ம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தி இந்த ஸ்தூப மாடத்தில் உள்ள ஆதார தூணை நிறுவினார்.

Tom Maloney

 புத்த சமய பண்பாட்டின் நுழைவாயில்!

புத்த சமய பண்பாட்டின் நுழைவாயில்!

மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரெய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் சஞ்சி ஆகும். மிகச் சிறிய கிராமமாக இருந்தாலும், புத்த சமய நினைவிடங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் உறைவிடமாக சஞ்சி விளங்கி வருகிறது.

Tom Maloney.

 ஆர்ப்பரிக்கும் சுற்றுலாத் தளம்

ஆர்ப்பரிக்கும் சுற்றுலாத் தளம்


சஞ்சியில் ஏராளமான புத்த ஸ்துபாக்கள், புனிதத் தளங்கள், புத்த மடாலயங்கள் மற்றும் புத்த நினைவுத் தூண்களைக் காணலாம். சஞ்சியில் இருக்கும் புத்த சமய நினைவிடங்களில், புத்த சமய கல்வெட்டுகள், பண்பாட்டு சிறப்புகள் மற்றும் புத்த சமய புராணங்கள் போன்றவற்றைப் பார்க்க முடியும். இதனால் பழமை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர்.

solarisgirl

 சஞ்சியின் வரலாற்று சிறப்பு!

சஞ்சியின் வரலாற்று சிறப்பு!


சஞ்சியில் ஏராளமான புத்த சமய நினைவிடங்கள் அமைந்திருப்பதால், புத்த பெருமான் அவர்கள் சஞ்சியில் நெடுங்காலம் தங்கி இருந்திருக்கலாம் என்று சுற்றுலா பயணிகள் நினைக்கலாம்.

Nagarjun Kandukuru

 வந்ததே இல்லை

வந்ததே இல்லை

ஆனால் புத்தர் தன் வாழ்நாளில் ஒரு பொழுதுகூட இந்த சஞ்சிக்கு வருகை தரவில்லை. பிற புத்த சமய மையங்களைவிட சஞ்சி கிராமத்தில் நிலவும் அமைதியான சூழல், புத்த பெருமானின் உடனிருப்பை பயணிகள் அனுபவிக்க மிகவும் உதவி செய்யும்.

solarisgirl

 விதிஷாகிரி

விதிஷாகிரி

பண்டைய காலத்தில் சஞ்சி, விதிஷாகிரிக்கு பிரிசித்தி பெற்று இருந்தது. அதாவது பணக்கார வணிகர்களின் மையமாக சஞ்சி விளங்கி வந்தது. தற்போதும் இந்த பணக்கார வணிகர்கள் சஞ்சியில் இருக்கும் புத்த சமய நினைவிடங்களுக்கு தங்களுடைய பொருளுதவிகளை வழங்கி வருகின்றனர்.

Nagarjun Kandukuru

 காதல் கோட்டை

காதல் கோட்டை

அதோடு சஞ்சி ஒரு அழகிய பெண்மனியான தேவி என்வரின் உண்மையான காதலை எடுத்துச் சொல்லும் இடமாகவும் விளங்கி வருகிறது. அதாவது தேவி என்ற அழகான பெண்மனி, புத்தரின் தீவிர பக்தை ஆவார். பேரரசரான அசோகர் இந்த பேரழகியான தேவி மீது தீராத காதல் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த காதலைப் பயன்படுத்தி சாஞ்சியில் ஏராளமான புத்த நினைவிடங்களை எழுப்புமாறு, அசோகரை தேவி ஊக்கப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது.

Anandajoti Bhikkhu

 மண்ணுக்குள் இருந்த புத்தர்

மண்ணுக்குள் இருந்த புத்தர்


கிபி 1818-ல் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஹீனயான புத்த சமயத்தைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற புத்த மையத்தை தோண்டி கண்டுபிடித்தனர். சஞ்சியில் இருக்கும் புத்த ஸ்துபிகள் பார்ப்பதற்கு மிகவும் பரவசமாக இருக்கின்றன. எனவே இந்தியாவில் உள்ள புத்த சமய தளங்களில் சஞ்சி மிகவும் முக்கிய ஒன்றாக இருக்கிறது என்று நம்பலாம்.

Nagarjun Kandukuru

 சஞ்சியைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

சஞ்சியைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

சஞ்சி பல பிரபலமான சுற்றுலாத் தலங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக புத்த சமய விகாரா, சஞ்சி ஸ்துபியின் நானகு நுழை வாயில்கள், சஞ்சி அருங்காட்சியகம், மிகப் பெரிய கிண்ணம், குப்த ஆலயம், அசோகத் தூண் மற்றும் சஞ்சி ஸ்துபி போன்றவை சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய மிக முக்கிய இடங்களாகும். ஆன்மீகத் தளங்களைத் தவிர்த்து சஞ்சியின் இயற்கை எழிலை சுற்றுலாப் பயணிகள் மிக அழகாக ரசிக்க முடியும்.

Nagarjun Kandukuru

 சஞ்சிக்கு எவ்வாறு செல்வது?

சஞ்சிக்கு எவ்வாறு செல்வது?

சஞ்சிக்கு மிக அருமையான போக்குவரத்து வசதிகள் உள்ளன. சஞ்சிக்கு அருகில் உள்ள போபாலில் ராஜா போஜ் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திற்கு டில்லி, மும்பை, ஜபல்பூர், இந்தூர் மற்றும் குவாலியர் போன்ற நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்திலிருந்து வாடகை டாக்ஸிகளை எடுத்துக் கொண்டு சஞ்சியை மிக எளிதாக அடையலாம்.

Nagarjun Kandukuru

 ரயில்

ரயில்

போபாலில் மிகப் பெரிய ரயில் நிலையமும் அமையப்பெற்றுள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து தினமும் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Nagarjun Kandukuru

 சஞ்சி செல்ல தகுந்த காலம்

சஞ்சி செல்ல தகுந்த காலம்


நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் சஞ்சியில் புத்த சமய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சஞ்சிக்கு செல்ல சிறந்த காலம் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ஆகும்.

R Barraez D´Lucca

சஞ்சி ஸ்துபா

சஞ்சி ஸ்துபா

சஞ்சியில் அமைந்திருக்கும் சஞ்சி ஸ்துபா ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இந்த ஸ்துபா போபாலிலிருந்து 46 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. மொத்தம் 3 சஞ்சி ஸ்துபாக்கள் உள்ளன. இந்த ஸ்துபாக்கள் நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

Pooja Arya

 புத்த விகாரா

புத்த விகாரா

புத்த விகாரா, சஞ்சியிலிருந்து சில கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. மேலும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாகவும் இந்த விகாரா கருதப்படுகிறது. இந்த விகாராவில் சத்தாரா ஸ்துபாவின் எச்சங்களும் இருக்கின்றன. மேலும் இந்த விகாராவின் ஒரு பகுதியில் பண்டைய காலப் பொருள்களும் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன.

Abhinav Saxena

 மிகப் பெரிய கிண்ணம்

மிகப் பெரிய கிண்ணம்


த கிரேட் பவல் என்று அழைக்கப்படும் ஒரு மிகப் பெரிய கிண்ணம் சஞ்சியில் அமைந்துள்ளது. இந்த கிண்ணம் மத்தியப்பிரதேசத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாகக் கருதப்படுகிறது. புத்த சமய ஏடுகளில் இந்த பெரிய கிண்ணம் இடம் பெறுவதால், புத்த சமய மறுமலர்ச்சியின் தொட்டிலாக இந்த கிண்ணம் பார்க்கப்படுகிறது.

இந்த கிண்ணத்தில் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அதுபோல் ஒரு காலத்தில் இந்த கிண்ணத்தில் உணவு பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டன. இந்த கிண்ணத்திலிருந்து புத்த துறவிகளுக்கு உணவு பரிமாறப்பட்டன. இந்த கிண்ணம் ஒரு மிகப் பெரிய பாறைக் கல்லால் செய்யப்பட்டது. தற்போது இந்த கிண்ணம் புத்த சமயப் பண்பாட்டை எடுத்து இயம்பும் ஒரு முக்கிய தளமாக விளங்கி வருகிறது.

Anandajoti Bhikkhu

 சஞ்சி ஸ்துபாவின் 4 நுழைவாயில்கள்

சஞ்சி ஸ்துபாவின் 4 நுழைவாயில்கள்

சஞ்சி ஸ்துபாவின் 4 நுழைவாயில்களின் உச்சியில் சிங்கங்களின் 4 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்துபாவைக் கட்டத் திட்டமிடும் போது அந்த திட்டத்தில் இந்த நுழைவாயில்கள் சேர்க்கப்படவில்லை. ஆனால் ஸ்துபாவைக் கட்டத் தொடங்கியவுடன் நுழைவாயில்களையும் சேர்த்துக் கொண்டனர். இந்த 4 நுழைவாயில்களும் ஸ்துபாவிற்கு அழகு சேர்க்கின்றன.

ஒவ்வொரு நுழைவாயிலும் மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக இருக்கின்றது. இந்த 4 நான்கு நுழைவாயில்களும் கிமு முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் நுழைவாயில் மிக முக்கிய வாயிலாகக் கருதப்படுகிறது. இந்த வாயில்தான் முதலில் கட்டப்பட்டது. அதற்கு பின்பு வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு வாயில்கள் ஏற்படுத்தப்பட்டன. தெற்கு நுழைவாயிலில் இருக்கும் கதவுகளில் கௌதம புத்தரின் பிறப்புக் காட்சிகளும், அசோகரின் வாழ்க்கைக் குறிப்புகளும் பொறிக்கப்பட்டுள்ளன.

Nagarjun Kandukuru

 அசோகத் தூண்

அசோகத் தூண்

சஞ்சியில் அமைந்திருக்கும் அசோகத் தூண் மத்தியப்பிரதேச மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற மிக முக்கிய சுற்றுலாத் தலமாகும். இந்த தூணின் உச்சியில் 4 சிங்கங்களின் சிலைகள் காணப்படுகின்றன. இந்த நான்கு சிங்கங்களும் முகமுகமாகப் பார்க்காமல், பின்புறமாக அமைந்திருக்கும் நிலையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தூண் கிமு 3-வது நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாகும்.

commons.wikimedia.org

Read more about: travel history trip best of 2017
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X