
பசுமை உங்களை எப்போதும் ஈர்த்து வந்துள்ளது எனில், உக்ருள்' நீங்கள் பார்வையிட வேண்டிய முக்கியமான நகரம் ஆகும். உக்ருள், மனதை மயக்கும் அழகான மற்றும் வசீகரிக்கும் இயற்கை காட்சிகளுக்கு பெயர் பெற்றது. ஜனநெருக்கடியில் இருந்தும், கார்களின் அருவருப்பான ஒலியிலிருந்தும், உயரமான மற்றும் நெருக்கடியான கட்டிடங்களிருந்தும் இந்த சிறிய நகரம் பல மைல்கள் விலகி இருக்கிறது. இங்கு நீங்கள் வரும்போது சொர்கத்தின் வாசனையை கட்டாயம் உணர்வீர்கள்.

அல்லி!
உள்ளூர் மக்கள் சிரொய் அல்லிப் பூவை `கஸ்ஹொங்வொன்' என அழைக்கின்றனர். இது பெரும்பாலும் `சிரொய் கஸ்ங்',அல்லது சிரொய் மலை உச்சியில் காணப்படுகிறது.
Zingkhai

போர்க்கலை
உக்ருளின் குடிமக்கள் போர்க்கலையில் வல்லவர்களான, `டங்க்ஹுல்' நாகா பழங்குடியினரின் இருப்பிடமான, உக்ருள் ஒரு வளமான பண்பாட்டு மையமாக திகழ்கிறது. இங்கு நடை பெறும் புகழ் பெற்ற உக்ருள் திருவிழா அனைவரின் கவனத்தையும் கவர்ந்த ஒன்றாகும்.
Ritezh Thoudam

மலைக் குன்றுகள்
இந்த மாவட்டத்தில் நாம் நம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மலைகள், மலைக் குன்றுகள், மற்றும் பசுமையை கண்டு ரசிக்கலாம். டங்க்ஹுல் பழங்குடியின மக்களின் பாரம்பரிய உடை மிகவும் புகழ் பெற்றது. ஆண்கள் 'ஹவுரா' எனும் ஒரு சால்வையையும், பெண்கள் 'கஸான்' என்கிற ஆடையையும் அணிகின்றனர். இங்கு டங்க்ஹுல் பழங்குடியின மக்கள் தங்களுடைய பாரம்பரிய உடை அணிந்து தெருக்களில் சர்வ சாதரணமாக நடமாடுகின்றனர். அது இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் வியப்பை அளிக்கிறது.
Mutum

கல்வியறிவு
உக்ருளின் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம், மக்களின் படிப்பறிவு ஆகும். இதன் மக்கள் தொகையில், சுமார் 90 சதவீத மக்கள், கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். வட கிழக்கு மாநிலத்தில் உள்ள பழங்குடி இனத்தில் இருந்து, மதிப்புமிக்க தில்லி பல்கலைக்கழகத்தில் பணியில் அமர்ந்த முதல் பேராசிரியர் 'ஹொராம்', உக்ருளை சேர்ந்தவராவார்.
Ac apam

உக்ருள் மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்
உக்ருளில் சுற்றுலா பயணிகளை கவரும் ஏராளமான இடங்கள் உள்ளன. இது நமக்கு ஒர் உண்மையான சுற்றுலா அனுபவத்தை தருகின்றன. உக்ருளை சுற்றி பிரபலமான பூங்காக்கள், சிகரங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சிரொய் கஸ்ங் மலை உச்சியானது மே மற்றும் ஜூன் மாதத்தின் போது, பூத்துக்குலுங்கும் அல்லி மலர்களால் நிறைந்து காணப்படும். தொல்லியல் துறை ஆர்வலர்களின் கவனத்தை இங்குள்ள `ஹங்ஹுய் மங்க்சோர்' குகை பெரிதும் கவர்கிறது.
Khangrah

உக்ருளை எவ்வாறு சென்றடைவது?
உக்ருளை விமானம், சாலை, மற்றும் ரயில் மூலம் எளிதாக அணுகலாம். உக்ருளுக்கு சுற்றுலா செல்ல சிறந்த பருவம் உக்ருளுக்கு சுற்றுலா செல்ல கோடை காலம் மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது.
Thanreichan