Search
  • Follow NativePlanet
Share
» »ஐரோப்பிய பெண்கள் சூரிய குளியல் கொள்ளும் அழகிய சுற்றுலாத் தளம் இந்தியாவில்!

ஐரோப்பிய பெண்கள் சூரிய குளியல் கொள்ளும் அழகிய சுற்றுலாத் தளம் இந்தியாவில்!

ஐரோப்பிய பெண்கள் சூரிய குளியல் கொள்ளும் அழகிய சுற்றுலாத் தளம் இந்தியாவில்!

கோவளம் கடற்கரைப்பரப்பின் தெற்குப்பகுதியில் இந்த லைட் ஹவுஸ் பீச் அமைந்துள்ளது. நகரத்திற்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளதால் இது அதிகமாக சுற்றுலாப்பயணிகள் புழங்கும் ஸ்தலமாக காணப்படுகிறது. இங்குள்ள லைட் ஹவுஸ் பெயரால் இந்த கடற்கரை அடையாளம் காணப்படுகிறது. கோவளத்துக்கு பயணம் செல்ல நீங்கள் விரும்பினால், கண்டிப்பாக உங்கள் விருப்பப்பட்டியலில் லைட் ஹவுஸ் பீச்சையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வாருங்கள் பீச் பற்றி காண்போம்.

எங்கே அமைந்துள்ளது

திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து சரியாக 10 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த கடற்கரை. கோவளம் கடற்கரையில் ஒரு பகுதிதான் இந்த லைட் ஹவுஸ் கடற்கரை ஆகும்.

விழிஞ்சம் லைட் ஹவுஸ்

முற்காலத்தில் இந்த கடற்கரைக்கு அருகிலுள்ள குன்றின்மீது விழிஞ்சம் லைட் ஹவுஸ் என்ற கலங்கரை விளக்கம் கட்டப்பட்டுள்ளது.
இது துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு வழிகாட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்தது.

ஐரோப்பிய பயணிகள்

இந்த கலங்கரை விளக்கத்தை அடையாளமாக கொண்ட இக்கடற்கரைக்கு ‘லைட் ஹவுஸ் பீச்' என்று துவக்க காலத்தில் இங்கு விஜயம் செய்த ஐரோப்பியப்பயணிகள் பெயர் வைத்துள்ளனர்.

அழகு கடற்கரை


அதிர்ஷ்டவசமாக, காலத்தின் தாக்கமோ, இயற்கையின் சீற்றமோ இந்த கலங்கரை விளக்கத்தை பாதிக்காமல் இது இன்னமும் கம்பீரமாக வீற்றிருக்கிறது. இரவு நேரத்தில் இந்த கலங்கரை விளக்கத்திலிருந்து வரும் வெளிச்சக்கீற்றுகள் கடற்கரையின் எழிலுக்கு இன்னும் கூடுதல் கவர்ச்சியை அளிக்கின்றன.

இரவில் குவியும் சுற்றுலா பயணிகள்

இக்காட்சியை கண்டு ரசிப்பதற்காகவே இரவு நேரத்தில் இந்த ஸ்தலத்துக்கு ஒரு முறை வருவது சிறந்தது. இந்த கடற்கரையின் நீர் தூய்மையாக காணப்படுவதால் பயணிகள் இங்கு நீந்திக்குளித்து மகிழலாம். ஜனவரி மாதக்குளிரிலும் இங்கு கடற்கரை நீர் வெதுவெதுப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அருகிலுள்ள கடற்கரை

இந்த ஹவா பீச் கடற்கரை ‘ஈவ்ஸ் பீச்' என்று பிரசித்தமாக அறியப்படுகிறது. அக்காலத்தில் ஏராளமான ஐரோப்பிய பெண் சுற்றுலாப்பயணிகள் இங்கு மேலாடையின்றி சூரியக்குளியலில் ஈடுபடும் வழக்கத்தை கொண்டிருந்ததால் இப்பெயர் வந்துள்ளது. இருப்பினும் தற்போது இந்த வழக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

தெளிந்த நீர் கடல்


ஸ்படிகம் போன்ற நீர்ப்பரப்பு மற்றும் பின்னணியில் பசுமையான தென்னந்தோப்புகள் ஆகியவற்றுடன் பிரமிக்கவைக்கும் இயற்கை எழிலை இக்கடற்கரை கொண்டுள்ளது. இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் இப்பிரதேசத்தின் அழகானது சொர்க்கம் போன்ற மயக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் காட்சியளிக்கிறது. பொதுவாகவே இரவு நேரத்தில் இக்கடற்கரை முற்றிலும் வேறுபட்ட அழகுடன் மிளிர்கிறது.

காணவேண்டிய இடங்கள்

கோவளம் ஜம்மா மசூதி

அஷாகா பீச் அருகில் இந்த மசூதி அமைந்துள்ளது.

அருவிக்கரா

திருவனந்தபுரத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலுள்ள இந்த கிராமத்தின் வழியாக கரமனா எனும் ஆறு ஓடுகிறது. இங்குதான் அருவிக் கரா அமைந்துள்ளது

ஹவா பீச்

ஈவ்ஸ் பீச் என்று அழைக்கப்படும் அழகிய கடற்கரை இது.

வேளாண் கல்லூரி

திருவனந்தபுரம் வேளான் கல்லூரி கோவளம் அருகில் அமைந்துள்ளது.

விழிஞ்சம் பாறைக் குகைக் கோவில்

கோவளம் கடற்கரை அருகில் அமைந்துள்ள விழிஞ்சம் கிராமத்தில் இருக்கும் குகைக் கோவில்

சௌரா

கோவளம் கடற்கரையிலிருந்து 6 கிமீ தூரத்திலிருக்கும் ஒரு சிறிய கிராமம்

அழகிய புகைப்படங்கள்

அழகிய புகைப்படங்கள்

அழகிய புகைப்படங்கள்

அழகிய புகைப்படங்கள்

அழகிய புகைப்படங்கள்

அழகிய புகைப்படங்கள்

அழகிய புகைப்படங்கள்

அழகிய புகைப்படங்கள்

அழகிய புகைப்படங்கள்

அழகிய புகைப்படங்கள்

அழகிய புகைப்படங்கள்

அழகிய புகைப்படங்கள்

அழகிய புகைப்படங்கள்

அழகிய புகைப்படங்கள்

அழகிய புகைப்படங்கள்

அழகிய புகைப்படங்கள்

அழகிய புகைப்படங்கள்

அழகிய புகைப்படங்கள்

Read more about: travel beaches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X