» »மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!!

Written By: Staff

மீனாட்சி அம்மன் கோவில் - மதுரையின் பெருமை, அடையாளம். ஆனால், நம்மில் எத்தனை பேருக்கு மீனாட்சி அம்மன் கோவிலின் சிறப்புகளைப் பற்றி தெரிந்திருக்கும். அப்படி சில சுவாரஸ்யமான துளிகளைப் பகிரலாம்.

temple

Photo Courtesy : Jorge Royan

NDTV எடுத்த கருத்துக்கணிப்பில் இந்தியாவின் ஏழு அதிசயங்களில் மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்று.

நம்புங்கள்!! மீனாட்சி அம்மன் கோவிலில் மொத்தம் 33000 சிற்பங்கள் இருக்கிறது.

மீனாட்சி அம்மன் கோவிலின் சிறப்பம்சம் எத்திசையில் இருந்தும் பக்தர்கள் வரலாம்; ஆம், நான்கு திசைகளிலும் கோவில் வாசல் இருக்கிறது. தமிழ் நாட்டில் வெகு சில கோவில்களுக்கே இது போல் நான்கு வாசல்கள் இருக்கிறது.

sculptures

Photo Courtesy : Reji Jacob

தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே மிகப்பெரும் கோவில் வளாகம் கொண்ட கோவில்களில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒரு முக்கிய இடமுண்டு.

2000 வருடங்கள் பழமைவாய்ந்தது மீனாட்சி கோவில். ஆனால், மாலிக் கஃபூர் என்ற மன்னன் மதுரையை கைப்பற்றி கோவிலின் 14 கோபுரங்களை சாய்த்த பின்னர், விஸ்வநாத நாயக்கர் என்ற மன்னர் 16'ஆம் நூற்றாண்டில் திரும்பவும் கோவிலை கட்டினார் என்ற வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.

wedding

Photo Courtesy : Suresh

கோவிலின் கட்டுமானம் திராவிட‌ விஜயநகர பாதிப்பில் கட்டப்பட்டிருக்கிறது.

வருடந்தோறும், ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கும் மீனாட்சி திருக்கல்யாண விழாவிற்கு பத்து லட்சம் பேர் வருவதாக கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது.

pond

Photo Courtesy : Iramuthuswamy

கோவிலில் இருக்கும் பொற்தாமரை குளத்தின் சிறப்பு இங்கு பூக்கும் தாமரைகள் பொன் நிறத்தில் இருப்பது.

நாள்தோறும், சராசரியாக, 15000 பேரும், வெள்ளிகிழமைகளில் 25000 பேர் வரை பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்களின் காணிக்கை மட்டும் வருடம் தோறும் ஆறு கோடியைத் தாண்டுகிறது.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்