Search
  • Follow NativePlanet
Share
» »இரண்டே நாட்களில் மதுரை - ராமேஸ்வரம் - கன்னியாகுமரி டூர் : இந்த ரூட்ல போயிருக்கீங்களா?

இரண்டே நாட்களில் மதுரை - ராமேஸ்வரம் - கன்னியாகுமரி டூர் : இந்த ரூட்ல போயிருக்கீங்களா?

மதுரை - ராமேஸ்வரம் - கன்னியாகுமரி : இந்த குறுக்கு பாதையில் போயிருக்கீங்களா?

By Udhaya

வடநாட்டவர் முதல் வெளிநாட்டவர் வரை அனைவருக்கும் ஒரு விசயம் தென்னிந்தியா சுற்றுலாவுக்கு வந்தால் மறக்காமல் சென்றுவிடவேண்டிய தளங்களாக விளங்குவதும் இவைதான். மதுரை ராமேஸ்வரம் கன்னியாகுமரி.

உள்ளூர் மக்களுக்கு இது பெரிய விசயமாக இருக்காது. ஆனால் வெளியூரிலிருந்து வரும் மக்கள் இந்த மூன்று இடங்களுக்கு செல்வதற்குள் திக்குமுக்காடி திணறிவிடுவார்கள். சரியான நேரத்துக்கு ரயில் இல்லை. பேருந்தில் சென்றால் அதிக நேரம், அதிக கட்டணம் என்று சலித்துப்போவார்கள். ஒருவேளை நல்ல யோசனையுடன் செல்பவர்கள், எல்லா இடங்களுக்கும் சென்றாலும், அவர்களால் குறுகிய காலத்தில் செல்லமுடியமால் இருக்கும். இதனாலேயே மதுரை அல்லது ராமேஸ்வரம் அல்லது கன்னியாகுமரியில் ஏதோ ஒரு சிரமத்தை அனுபவிப்பார்கள்.

சூரிய உதயம் காணமுடியாமல் போய்விடும். ராமேஸ்வரம் நடை திறக்காமல் இருக்கும். அல்லது மதுரையில் சரியான நேரத்துக்கு ரயில் அமையாது. இதையெல்லாம் தீர்க்கும் வகையில், உங்களுக்கு சிறப்பான வழிகாட்டியாக வருகிறது தமிழ் நேட்டிவ் பிளானட். தமிழின் முன்னணி சுற்றுலா இணையதளம். சரி முதலில் மிகக் குறுகிய வழியைப் பற்றி பார்க்கலாமா?

மதுரைக்கு எப்படி செல்லலாம்?

மதுரைக்கு எப்படி செல்லலாம்?

நம்மில் பலருக்கும் மதுரைக்கு செல்வதென்பது முன் அனுபவம் இருந்திருக்கும். எனினும், அறியாதவர்களுக்காக சென்னையிலிருந்து மதுரைக்கு எப்படி செல்லலாம் என்று பார்க்கலாம்.

பொதுவாகவே மதுரைக்கு சுற்றுலா வரும் சென்னையிலிருந்து கிளம்புகிறார்கள்.

சென்னையிலிருந்து மதுரை ரயில், பேருந்து மற்றும் விமான வழிகளில் எளிதாக சென்றடைய முடியும்.

விமானம் அல்லது ரயில் மூலமாக

விமானம் அல்லது ரயில் மூலமாக

விமானம் மூலம் மதுரை செல்வதென்றால், சென்னை விமான நிலையத்திலிருந்து நிறைய விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவை 1200 முதல் 2500 வரை வசதிகளுக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. மேலும் நிறைய சலுகைகளும் தரப்படுகின்றன.

விமானங்களை தேர்ந்தெடுக்க இங்கு கிளிக் செய்யவும்.

ரயில் மூலம் பயணிக்க விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைகிறது. திருநெல்வேலி, நாகர்கோயில், திருவனந்தபுரம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி என நிறைய ஊர்களுக்கு செல்லும் ரயில் இந்த வழியாகத்தான் செல்கிறது.

குறைந்தபட்சம் 8 மணி நேரங்களிலும், அதிகபட்சம் 12 மணி நேரங்களிலும் செல்லும்படியாக ரயில்கள் அமைகின்றன.

சிலருக்கு, இப்படி ஒரு திட்டம் இருக்கும்,. ரயில் வழியாக மதுரை வந்து பின் ராமேஸ்வரம் சென்று அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி செல்வது. இப்படி செல்லும் திட்டம் உங்களிடம் இருந்தால் குறைந்த நேரம் குறைந்த செலவு குறைந்த பயணத்தில் திருப்தியாக அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம் வாருங்கள்.

TAMIZHU

மதுரை - ராமேஸ்வரம் - கன்னியாகுமரி

மதுரை - ராமேஸ்வரம் - கன்னியாகுமரி


மதுரை - ராமேஸ்வரம், ராமேஸ்வரம் - கன்னியாகுமரி, கன்னியாகுமரி - மதுரை என இந்த பயணம் ஒரு முக்கோணத்தை ஒத்திருப்பதை நம் வரைபடம் மூலம் காணமுடியும். அப்படி ஒரு பயணத்தை நாம் கற்பனை செய்து பார்த்தால், மதுரையிலிருந்து திட்டமிட்டு ராமேஸ்வரம் ரயில் ஏறி அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு, பின் அங்கிருந்து திட்டமிட்டு, கன்னியாகுமரியை அடைவதற்குள் போதும்போதுமென்று ஆகிவிடும்.

அப்படி உங்களின் பயணம் கடுமையானதாக இல்லாம்ல இருக்கவேண்டுமா கவலைய விடுங்க நாங்க இருக்கோம். தமிழ் நேட்டிவ் பிளானட் உங்களுக்கு சிறந்த பயண வழிகாட்டியாக வருகிறது.

எது சிறந்த வழி

எது சிறந்த வழி

நேரடியாக கன்னியாகுமரி வந்து அங்கிருந்து ராமேஸ்வரம் சென்று பின் மதுரை செல்வது ஒரு திட்டம்.

அல்லது நீங்கள் மதுரை கன்னியாகுமரி வழியாக ராமேஸ்வரம் வந்தடைந்து பின் மறுபடியும் மதுரை சென்று அங்கிருந்து உங்கள் சொந்த ஊருக்கு பயணிக்கலாம். நாங்கள் எல்லா வழிகளையும் உங்களுக்கு தருகிறோம். உங்களுக்கு எது எளிமையாக படுகிறதோ அதைத் தேர்ந்தெடுங்கள்.

முதல் வழித்தடம் - கன்னியாகுமரி - ராமேஸ்வரம் - மதுரை

இரண்டாவது வழித்தடம் மதுரை கன்னியாகுமரி ராமேஸ்வரம்

மூன்றாவது மதுரை ராமேஸ்வரம் கன்னியாகுமரி

கன்னியாகுமரி - ராமேஸ்வரம்

கன்னியாகுமரி - ராமேஸ்வரம்

கன்னியாகுமரி - ராமேஸ்வரம் மூன்று வழித்தடங்களில் செல்லலாம். அவைகளில் குறுகிய வழியில் 309கிமீ பயணம் செய்தும், நெடுவழியில் 326கிமீ பயணம் செய்தும் அடையமுடியும்.

எனினும் கன்னியாகுமரி - திருச்செந்தூர் - தூத்துக்குடி வழியாக ராமேஸ்வரம் அடைவதே சிறந்த பயணமாக இருக்கும். ஏனெனில் வங்கக்கடலின் அழகை இந்த பயணம் கண்முன்னே காட்டிச்செல்லும்.

ஒருவேளை நீங்கள் நேரத்தை மிச்சப்படுத்த விரும்பினால், திருச்செந்தூருக்கு வராமல், திருநெல்வேலி தூத்துக்குடி வழியாகவும் பயணிக்கலாம்.

கன்னியாகுமரியிலிருந்து பயணிக்கும்போதே அருகில் வட்டகோட்டை, கூடங்குளம், உவரி, திருச்செந்தூர், காயல்பட்டினம், தூத்துக்குடி, உத்திரகோசமங்கை என நிறைய இடங்களை கண்டுவிட்டு நாம் ராமேஸ்வரத்தை அடையலாம்.

ராமேஸ்வரம் - மதுரை

ராமேஸ்வரம் - மதுரை

ராமேஸ்வரத்திலிருந்து மதுரை 3 மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது. பரமக்குடி வழியாக பயணிக்கும்போது 200கிமீ வரை தூரம் கொண்டாக உள்ளது இந்த வழித்தடம்.

ஆசிய நெடுஞ்சாலை 43 வழியாக பயணம் செய்யும்போது வழியில் மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய முக்கிய இடங்களைத் தொட்டு செல்லவேண்டியிருக்கும்.

சுற்றுலா வழிகாட்டி

சுற்றுலா வழிகாட்டி


நேரடியாக கன்னியாகுமரி வருகை தாருங்கள். மாலை 5 மணிக்கெல்லாம் கன்னியாகுமரியை அடையும்படி திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

உங்களின் பொன்னான நேரத்தை சேமித்து எல்லா இடத்தையும் சுற்றிக்காட்டுகிறோம் வாருங்கள்.

மாலை 5 மணிக்கு கன்னியாகுமரியில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் எங்கே செல்லவேண்டும் தெரியுமா?

சூரிய மறைவு

சூரிய மறைவு

மாலை 6 மணி தாண்டியதும் சூரியன் மறையும். குளிர் காலங்களில் ஆறு முப்பது மணியளவில் மறையக்கூடும். இது கோடைக்காலங்களில் இன்னும் அதிக நேரம் எடுக்கலாம். ஏனெனில் கோடைக்காலங்களில் பகலின் நேரம் அதிகம்.

ஒரே நேரத்தில் சூரிய மறைவையும் சந்திர உதயத்தையும் பெரும்பாலான நேரம் காணமுடியும்.

சிலசமயங்களில் ஏமாற்றமும் நிகழலாம். மழைக்காலங்களில் கன்னியாகுமரி வருபவர்களுக்கு சூரிய மறைவை காணமுடியாமல் போக வாய்ப்பிருக்கிறது

பின் அங்கேயே சுற்றிப்பார்க்க நிறைய இடம் இருந்தாலும் இரவு சமயங்களில் கடற்கரையில் மின்னிய ஒளியில் அலங்கரிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை. விவேகானந்த மண்டபம் ஆகியவற்றைக் கண்டு மகிழலாம். இளைப்பாற கடற்கரையில் நடைபோட்டு அமரலாம்.

அதிகாலை

அதிகாலை

அதிகாலையில் சூரிய உதயம் காண சீக்கிரமாகவே வந்துவிடுங்கள். சூரிய உதயம் சிறப்பாக காட்சியளிக்கும். இதைத் தொடர்ந்து அங்கிருந்து பொடிநடைபோட்டு காந்தி மண்டபம் அருகில் வந்தால், நிறைய கடைகள், சிற்றுண்டிகள் காலை உணவுடன் காத்திருக்கும்.

காலை உணவை சிற்றுண்டி அல்லது உணவகங்களில் வசதிக்கேற்ப முடித்துவிட்டு, பின் நீங்கள் தாராளமாக படகு பயணம், காந்தி நினைவகம், அரசினர் தோட்டம் என உள்ளூரில் சுற்றித்திரியலாம். பின் நண்பகலுக்கு முன்னர் கன்னியாகுமரியிலிருந்து புறப்படவேண்டும். ராமேஸ்வரத்துக்கு ரயில் கட்டணம் 272 உடன் வரியும் கொஞ்சம் வரும். அதே நேரத்தில் ரயில் நேரம் நமக்கு சாதகமாக இருந்தால் நன்றாக இருக்கும்.

தென்னக ரயில்வேயை பொறுத்தவரையில், கன்னியாகுமரியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு உள்ள ரயில்களின் விவரங்கள் இங்கே காணலாம்.

கன்னியாகுமரியில் காணவேண்டிய இடங்கள்

கன்னியாகுமரியில் காணவேண்டிய இடங்கள்

கன்னியாகுமரி கோயில், காந்தி நினைவகம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தப் பாறை, வட்டகோட்டை என குமரியில் முக்கியமான இடங்களைத் தவற விடாதீர்கள்.

 ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

ஒருவேளை ரயில் பயணம் ஒத்துவரவில்லை என்றால் நீங்கள் பேருந்தில் பயணிக்கலாம்.

கன்னியாகுமரி பேருந்து நிலையத்திலிருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் பயணிக்கும் போது சரியாக 6 மணி நேரம் ஆகின்றது. உங்கள் சுய வாகனத்தில் பயணித்தால் ஒரு மணி நேரத்தை மிஞ்சப்படுத்தலாம்.

மொத்தம் 312கிமீ தூரம் பயணிக்கவேண்டிவரும். காலை வேளையில் பயணத்தைத் தொடங்கினால் உங்களுக்கு ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் நேரத்தை பொறுத்து திட்டமிடல் வேண்டும்.

ராமநாதசுவாமி கோயில்

ராமநாதசுவாமி கோயில்

இந்த கோயில் புனித தலமான ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் 22 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்களும் அமைந்துள்ளது. இந்த கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இங்கு மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருகார்த்திகை முதலான நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த கோயிலின் நடை காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8.30மணி வரையிலும் திறந்திருக்கும். எனவே நீங்கள் ஆறு மணி நேர பயணத்தை கடந்து மாலை வேளையில் இந்த கோயிலை அடைந்துவிட முடியும்.

Vinayaraj

 ராமேஸ்வரத்தில் என்ன செய்யலாம்?

ராமேஸ்வரத்தில் என்ன செய்யலாம்?

நீர்பறவை சரணாலயம், நம்பு நாயகி அம்மன் கோயில், அக்னி தீர்த்தம். அரியமான் கடற்கரை, உத்திரகோசமங்கை, ராமலிங்கவிலாசம் அரண்மனை, ஆதாம் பாலம், தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்கள் நீங்கள் கட்டாயம் காணவேண்டியவை ஆகும்.

பாம்பன் பாலம்

பாம்பன் பாலம்

இராமேஸ்வரத்தின் பாக் ஜலசந்தியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள திறந்து மூடும் வகையிலாக நீண்டிருக்கும் புகழ் பெற்ற பாம்பன் பாலத்தின் அலுவல் ரீதியான பெயர் அன்னை இந்திரா சாலை பாலம் என்பதாகும்.

இந்த பாலம் தான் இராமேஸ்வரத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே பாலமாகும். கடல் மீது கட்டப்பட்டுள்ள பாலங்களில் இதுதான் முதல் பாலமாகும். 2.3 கிமீ நீளமுள்ள இந்த பாலம் நாட்டிலேயே இரண்டாவது பெரிய கடற்பாலமாக உள்ளது.

இந்த பாலம் தென்னக இரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியாகவே கட்டப்பட்டுள்ளது. 1887-ம் ஆண்டு துவங்கப் பட்ட இந்த பாலம் 1912-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

இந்த பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த போதே இந்த பணியில் ஈடுபட்டிருந்த வேலையாட்கள், ஏழு வட்ட வடிவ முகடுகளையுடைய நீல்-மந்திர் என்ற புகழ் பெற்ற கோவிலையும் அருகில் கட்டினார்கள்.

இதை கட்டியவர்களின் கடின உழைப்புக்கு சான்றாகவும், உறுதியாகவும் காலத்தை கடந்து இந்த பாலம் நின்று கொண்டுள்ளது. இந்த பாலத்தின் தூக்கி மூடும் வசதியால் இந்த பாலத்திற்கடியில் கப்பல்களும் சென்று வர முடிகிறது.

ஜடா தீர்த்தம்

ஜடா தீர்த்தம்

இரமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 3.5 கிமீ தொலைவில் ஜடா தீர்த்தம் அமைந்துள்ளது. தனுஷ்கோடிக்கு செல்லும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஜடா தீர்த்தத்திலும் நீராடி செல்வார்கள். ஸ்ரீ இராமருடன் நெருங்கிய தொடர்புடைய இடமான இந்த தீர்த்தத்தில், இராவணனை கொன்று சீதா தேவியை மீட்டுக் கொண்டு அயோத்திக்கு செல்லும் வழியில் இராமர் நின்று சென்றதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இராமர் உருவாக்கி பூஜித்த லிங்கம் 'இராமலிங்கம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் இராமர் தனது ஜடா என்ற சடைமுடியை அலசி பிராமண வதம் செய்த பாவத்தை களைந்தார். தனது பாவங்களை கழுவி சுத்தம் செய்த பின்னர் தான் இராமர் சிவலிங்கத்தை வணங்கினார்.

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

இராமேஸ்வரம் தீவில் உள்ள தனுஷ்கோடி இந்த தீவின் தெற்கு எல்லையில் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இடமாகும். இலங்கையின் தலைமன்னார் பகுதியிலிருந்து சுமார் 31 கிமீ தொலைவிலேயே இந்த கிராமம் அமைந்துள்ளது. இராவணனின் தம்பியான விபீஷணர் இராமரிடம் சேது பாலத்தை உடைத்து விடுமாறு கேட்டுக்கொண்டதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வேண்டுகோளுக்கிணங்க இராமர் தன்னுடைய வில் அல்லது தனுசின் ஒரு முனையை கொண்டு சேதுவில் தட்டி அதனை உடைத்தார். இந்த வரலாற்று சம்பவம் நிகழ்ந்த இடமாக இன்றைய தனுஷ்கோடி உள்ளதால் அதற்கு இந்த பெயர் கிடைத்துள்ளது. உண்மையில் இன்றும் கூட இராமரின் மேற்பார்வையில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் சுவடுகளை தனுஷ்கோடியில் காண முடியும்.

இராமலிங்கவிலாசம் அரண்மணை

இராமலிங்கவிலாசம் அரண்மணை

சேதுபதி வம்ச மன்னர்களில் புகழ் பெற்ற ஒருவரான கிழவன் சேதுபதி என்பவர் 1674 முதல் 1710-ஆம் ஆண்டுகளில் இராமநாதபுரம் பகுதியினை ஆண்டு வந்த போது இராமலிங்க விலாசம் என்ற அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனைக்குள் இருக்கும் மிகப்பெரிய தர்பார் ஹாலில் தான் மன்னர், தனது குடிமக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளைத் தீர்த்து வந்தார். தர்பார் செல்லும் வழியிலுள்ள இராஜ குடும்பத்திற்கான குடியிருப்புகள் மிகவும் அற்புதமாக கட்டப்பட்டிருக்கின்றன. இந்த அரண்மனை சுவர்களில் வரையப்பட்டுள்ள சுவரோவியங்கள் மன்னர் சேதுபதி குடும்பத்தின் இராஜவாழ்க்கையை சித்தரிப்பவையாக உள்ளன. இந்த சுவரோவியங்களில் மராத்தியர்களுடன் செய்யப்பட்ட போர்க் காட்சிகளும் வரையப்பட்டுள்ளன. இந்த சுவரோவியங்கள் ஐரோப்பிய வியாபாரிகளுக்கும், சேதுபதிகளுக்கும் இருந்த வாணிபத் தொடர்பையும் பிரதிபலிப்பதாக உள்ளன. எனவே இந்த சுவரோவியங்கள் கலைகளின் வளர்ச்சியில் முக்கியமானவையாக உள்ளன

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள்

முதல் நாள் இரவு மற்றும் அடுத்தநாள் காலையை கன்னியாகுமரியில் கழித்துவிட்டு, பின் அடுத்தநாள் மாலைக்குள் ராமேஸ்வரத்தில் சுற்றியாகிவிட்டது. பின் இரவோடு இரவாக பயணத்தைத் தொடர்வோம். அப்படியே மதுரைக்கு சென்று சுற்றலாம்.

ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு 188கிமீ தொலைவு ஆகும். சராசரியான பேருந்துகளில் அதிகபட்சம் 4மணி நேரம் ஆகின்றது. ஆனால் சில தனியார் பேருந்துகள் 3 மணி நேரத்துக்கும் குறைவான பயணத்தில் உங்களை மதுரைக்கு கடத்திவிடுகின்றனர்.

அப்படி செல்லும்போது அதிகாலையிலேயே நீங்கள் மதுரையை அடைந்துவிடுவீர்கள். ஒருவேளை ரயிலில் செல்ல திட்டமிட்டால், காலை 5.30 மணி, 8.30 மணி, 11.20மணி என காலை நேர ரயில்கள் உங்களுக்கு ஏதுவாக இருக்கும். ஒருவேளை இரவு நேரப் பயணத்தை விரும்பினால், 10.15க்கும் 11 மணிக்கும் மொத்தம் 4 ரயில்கள் இருக்கின்றன.

மேலும் ரயில் தொடர்பான விவரங்கள் மற்றும் ரயில் புக் செய்ய இதை சொடுக்குங்கள்

 மீனாட்சியம்மன் கோயில்

மீனாட்சியம்மன் கோயில்


மதுரையில் நீங்கள் கட்டாயம் காணவேண்டியது மீனாட்சியம்மன்கோயில். இந்த கோயிலின் நடுவில் தாமரை வீற்றிருக்கிறது. இதைச் சுற்றி கோயில் அமைந்திருப்பது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள சிவபெருமான் சொக்கநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஊஞ்சல் உற்சவம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகிய கோயில் திருவிழாக்கள் மீனாட்சி அம்மன் கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
இந்த கோயிலில் ஆயிரம் தூண்கள் இருந்தன. எனினும் அவற்றில் ஒன்றிரண்டு தற்போது குறைவாகவே இருப்பதாக தெரிகிறது.

KARTY JazZ

சுற்றியுள்ள இடங்கள்

சுற்றியுள்ள இடங்கள்

இங்கு சுற்றியுள்ள இடங்களாக அருங்காட்சியகம், கூடல் அழகர் கோயில், கோரிப்பாளையம் தர்கா, காந்திமியுசியம், திருமலை நாயக்கர் அரண்மனை உள்ளிட்ட இடங்கள் கட்டாயம் காணவேண்டியவையாக அறியப்படுகின்றன.

மேலும், உங்கள் பயணம் சுயவாகனத்தில் என்றால், நாகர்கோயில் கன்னியாகுமரி வழித்தடத்தில் வரும் சுசீந்திரம் கோயில், கன்னியாகுமரி தூத்துக்குடி வழித்தடத்தில் வரும் திருச்செந்தூர் கோயில், கன்னியாகுமரி மதுரை வழித்தடத்தில் நெல்லையப்பர் கோயில் போன்றவற்றை காண மறந்துவிடாதீர்கள்.

Read more about: travel temple madurai rameshwaram
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X