Search
  • Follow NativePlanet
Share
» »அலெக்ஸாண்டரின் படைவீரர்களின் சந்ததிகள் இன்றும் இந்தியாவில் வசிக்கும் இடத்தை பற்றி தெரியுமா ?

அலெக்ஸாண்டரின் படைவீரர்களின் சந்ததிகள் இன்றும் இந்தியாவில் வசிக்கும் இடத்தை பற்றி தெரியுமா ?

மாவீரர் அலெக்சாண்டரின் படையில் இருந்த வீரர்களின் சந்ததிகள் இன்றும் இந்தியாவில் ஹிமாச்சல பிரதேசத்தில் வெளி உலகுடன் எந்த தொடர்பும் இன்று வாழ்ந்துவருகின்றனர். தங்களுக்குள் தங்களுக்கென ஒரு தனி ராஜ்யத்தையே நடத்திவரும் அவர்களின் கிராமத்தினுள் வெளி ஆட்கள் நுழைவதும் குதிரை கொம்பு தான்.

மிகவும் விச்சித்திரமான இந்த கிராமத்திற்கு சுவாரஸ்யம் நிறைந்த ஒரு பயணம் செல்லலாம் வாருங்கள்.

மலானா :

மலானா :

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள குல்லு பள்ளத்தாக்கிற்கு வட கிழக்கே உலகத்தோடு தொடர்பற்று இருக்கிறது மலானா என்னும் குக்கிராமம்.

Vikram Singh

மலானா :

மலானா :

குக்கிராமமாக இருந்தாலும் தனெக்கென தனி கலாச்சாரம், பண்பாடு, சமூக கட்டமைப்பு மற்றும் மொழி போன்றவற்றை கொண்டிருக்கிறது.

இந்த சிறிய கிராமத்திற்கு பின்னால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட ஒரு சுவாரஸ்யமான வரலாறு புதைந்திருக்கிறது. அது பற்றி அடுத்தடுத்த பக்கங்களில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

morisius cosmonaut

மலானா :

மலானா :

கிரேக்கத்தில் இருந்து கிளம்பி தான் கால்பதித்த நாடுகளையெல்லாம் வெற்றிகொண்டு வீரவாகை சூடிவந்த அலெக்சாண்டரின் கனவு இந்திய தேசத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது தான்.

இந்தியாவின் மன்னாக வேண்டும் என்பதை தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டிருந்திருக்கிறார் மாவீரர் அலெக்சாண்டர்.

Parthiv Haldipur

மலானா :

மலானா :

பெர்சிய நாட்டை வென்றெடுத்த கையேடு பஞ்சாப் வழியாக இந்தியாவினுள் நுழைய திட்டமிட்ட அலெக்சாண்டருக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

ஜீலம் நதிக்கரையில் பஞ்சாபின் அரசனான போருஸ் மன்னனுடன் நிகழ்ந்த போரில் பெருந்த சேதங்களுக்கு பிறகு வெற்றிபெறுகிறார்.

Sajith T S

மலானா :

மலானா :

போரில் அலெக்சாண்டர் வெற்றிபெற்றாலும் ஆண்டுக்கணக்கில் போர் செய்து கடுமையாக சோர்வுற்றிருந்த அவரின் படை வீரர்களின் வற்புறுத்தலால் படையெடுப்பை கைவிட்டுவிட்டு தனது நாட்டுக்கு திரும்ப முடிவெடுக்கிறார்.

அந்த சமயத்தில் அவரின் படையில் இருந்த வீரர்கள் சிலர் இந்தியாவிலேயே தங்கிவிடுகின்றனர்.

genobz

மலானா :

மலானா :

இந்த படைவீரர்கள் வந்து தங்கிய இடம் தான் இந்த மலானா என்றும் அவர்களின் சந்ததிகள் தான் இன்றும் இங்கே வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Sajith T S

மலானா :

மலானா :

இதற்கு சான்றாக இருப்பது மலானா கிராமத்தில் உள்ள மக்களால் மட்டுமே பேசப்படும் 'கனாஷி' என்ற மொழி தான்.

இந்த மொழியானது 'சைனோ-திபெத்திய' மொழி குடும்பத்தில் உள்ள எல்லா மொழிகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. இந்த மொழியானது கிரேக்க-சமஸ்கிரத மொழிகளின் கலவையாக இருக்கக்கூடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Sajith T S

மலானா :

மலானா :

மேலும் இந்த மலானா கிராமம் தனக்கென பிரத்யேகமான சமூக கட்டமைப்பை கொண்டு இயங்குகிறது. உலகில் முதன்முதலாக ஜனநாயக முறைப்படி ஆட்சி அமைப்பு இயங்கியது இந்த கிராமத்தில் தான் என்று சொள்ளப்படுகிறது.

Sajith T S

மலானா :

மலானா :

இன்றும் வெளயுலகுடன் அதிக தொடர்பின்றி இருக்கும் இந்த கிராமத்தினுள் வெளியாட்கள் யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது.

கிராம ஆட்சியாளர்களிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே மலானாவினுள் நுழைய முடியும். வெளியாட்கள் இக்கிராமத்தில் இருக்கும் எந்தவொரு பொருளையோ, சுவரையோ தொட அனுமதியில்லை.

Sajith T S

மலானா :

மலானா :

மீறி தொட்டால் அந்த தீட்டை கழிக்க தங்கள் சொந்த செலவில் ஆடு ஒன்றை வாங்கி பலிகொடுக்க வேண்டும் என்பது இங்கு கடைபிடிக்கப்படும் விதியாகும்.

Sajith T S

மலானா :

மலானா :

புதுமையான மனிதர்கள் மற்றும் கலாச்சாரங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வமுடைவர்கள் இந்த மலானா கிராமத்திற்கு நிச்சயம் ஒருமுறை சென்றுவாருங்கள்.

RuckSackKruemel

More News

    Read more about: hill stations adventure trekking
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+