Search
  • Follow NativePlanet
Share
» »மலப்புறம் - செழுமையான கேரள மாவட்டம்!!!

மலப்புறம் - செழுமையான கேரள மாவட்டம்!!!

By

கேரளாவிலேயே பணக்கார மாவட்டமாக மலப்புறம் மாவட்டம் அறியப்படுகிறது. இதற்கு காரணம் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அரபு நாடுகளில் வேலை செய்து அதிக அளவில் பொருளீட்டி வருவதே.

மேலும் மலப்புறம் மாவட்டத்தில் வற்றாத ஜீவ நதிகளாக ஓடிக் கொண்டிருக்கும் சாளியாறு, பாரதப்புழா, கடலுண்டி ஆகிய மூன்று நதிகளும் மலப்புறத்தின் மண் வளத்துக்கும், கலாச்சார மேன்மைக்கும் முக்கிய காரணங்களாக திகழ்ந்து வருகின்றன.

இப்படியாக பொருட்செல்வமும், இயற்கைச் செல்வமும் கைகோர்த்து காட்சியளிக்கும் அற்புதமொன்று உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது! எப்போது வரப்போகிறீர்கள் மலப்புறத்துக்கு?!!

மலப்புறத்தின் சுற்றுலாத் தலங்கள்

மலப்புறத்தின் சுற்றுலாத் தலங்கள்

மலப்புறத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக கடலுண்டி பறவைகள் சரணாலயம், கேரளதேஷ்புரம் கோயில், திருநாவாயா கோயில், நீலம்பூர், நெடுங்காயம், ஆகியவை அறியப்படுகின்றன. மேலும் மலப்புறம் ஜூம்மா மஸ்ஜித், அடயன்பாறா நீர்வீழ்ச்சி, மன்னூர் சிவன் கோயில், வேட்டக்கொருமகன் கோயில், கோட்டக்குன்னு ஹில் கார்டன், பீயம் ஏரி, ஷாந்திதீரம் ரிவர்சைட் பார்க் உள்ளிட்ட பகுதிகளும் நீங்கள் மலப்புறம் மாவட்டத்துக்கு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.

படம் : Dhruvaraj S

கடலுண்டி பறவைகள் சரணாலயம்

கடலுண்டி பறவைகள் சரணாலயம்

மாவட்டத்தில் அழகிய சிறு சிறு தீவுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் கடலுண்டி பறவைகள் சரணாலயம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாப் பகுதி. இந்த பறவைகள் சரணாலயம் கடலுண்டி எனும் எழில் கொஞ்சும் குக்கிராமத்தில், கடலுண்டி ஆறு அரபிக் கடலோடு சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது.

படம் : Dhruvaraj S

கடலுண்டி பாலம்

கடலுண்டி பாலம்

கடலுண்டி நதியின் மீது கட்டப்பட்டுள்ள கடலுண்டி பாலம்.

படம் : Navaneeth KN

கொள்ளை அழகு!!!

கொள்ளை அழகு!!!

கடலுண்டி பறவைகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

படம் : Dhruvaraj S

நீலம்பூர்

நீலம்பூர்

மலப்புறம் மாவட்டத்திலுள்ள நீலம்பூர், ‘தேக்கு மரத்தோட்டங்களின் பூமி' என்ற புகழுடன் அறியப்படும் ஒரு நகரமாகும். பரந்த காடுகள், மயக்கும் இயற்கை எழில், வித்தியாசமான காட்டுயிர் அம்சங்கள், கண்ணைக்கவரும் நீர்நிலைகள் என வளம் கொழிக்க சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது நீலம்பூர் நகரம்.

படம் : Kamaljith K V

டீக் மியூசியம்

டீக் மியூசியம்

நீலம்பூர் நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் 1995-ஆம் ஆண்டு கேரள வனத்துறை ஆராய்ச்சி மைய வளாகத்துக்குள்ளேயே கட்டப்பட்டுள்ள டீக் மியூசியம் இந்தியாவிலேயே இது போன்ற ஒரே ஒரு அருங்காட்சியகம் என்பது குறிப்பிடத்தக்கது. 480 வருடங்கள் பழமையான ஒரு பிரம்மாண்ட தேக்கு மரத்தின் அடிப்பகுதியையும் இந்த மியூசியத்தின் உள்ளே காணலாம். பலவகையான வண்ணத்துப்பூச்சி சேகரிப்புகள், அந்துப்பூச்சிகள் போன்றவற்றுடன் மரங்கள் சாயும் ஓவியக்காட்சிகள், பல்வேறு புகைப்படங்கள் மற்றும் புராதன அறுவடைக்கருவிகள் போன்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

படம் : Reji Jacob

ஆடியன்பாறா அருவி

ஆடியன்பாறா அருவி

நீலம்பூர் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள குரும்பலங்கோட் எனும் இடத்தில் ஆடியன்பாறா என்ற இந்த அழகிய அருவி அமைந்துள்ளது. நீலம்பூரிலிருந்து ஊட்டி செல்லும் நெடுஞ்சாலை வழியாக இந்த இடத்துக்கு சென்றடையலாம்.

படம் : Sidheeq

கனோலி பிளாட்

கனோலி பிளாட்

நீலம்பூர் நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் கனோலி பிளாட் எனப்படும் இந்த பழமையான தேக்குத்தோட்டம் அமைந்துள்ளது.

படம் : PP Yoonus

தொங்குபாலம்

தொங்குபாலம்

கனோலி பிளாட் பகுதியில் ஆற்றைக் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மரத்தொங்குபாலம்.

படம் : Dpradeepkumar

நெடுங்காயம்

நெடுங்காயம்

நீலம்பூர் நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள நெடுங்காயம் பகுதி அதன் அடர்த்தியான மழைக்காடுகளுக்காக பிரசித்திபெற்றுள்ளது. நெடுங்காயம் வனப்பகுதியில் யானைகள், காட்டெடுருமைகள், புலி, முயல், நீலக்குரங்கு, கரடி, காட்டுப்பூனை மற்றும் மான் போன்ற விலங்குகள் வசிக்கின்றன. பாதுகாக்கப்பட்ட இடம் என்பதால், வனத்துறையினரின் முன் அனுமதி பெற்றுத்தான் இந்த காட்டினுள் பயணிகள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நெடுங்காயத்தில் உள்ள யானைப்பயிற்சி முகாம் ஒன்று ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பயணிகளை ஈர்த்து வருகிறது.

படம் : Dhruvaraj S

சம்ரவட்டம் பாலம்

சம்ரவட்டம் பாலம்

பாரதப்புழா நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மிக நீண்ட பாலமான சம்ரவட்டம் பாலம்.

படம் : Danyprasad

பொன்னானி

பொன்னானி

மலப்புறம் மாவட்டத்தில் பாரதப்புழா நதிக்கரையின் மேற்கே பிரம்மாண்ட அரபிக் கடல் சூழ அழகே உருவாய் அமைந்திருக்கிறது பொன்னானி நகரம். இந்த நகரம் கடற்கரைகளுக்காகவும், எண்ணற்ற மசூதிகளுக்காகவும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரசித்தம்.

படம் : Sharada Prasad CS

வல்லம் களி

வல்லம் களி

பொன்னானியிலுள்ள பீயம் உப்பங்கழியில் நடத்தப்படும் 'வல்லம் களி' எனப்படும் படகுப்போட்டி.

படம் : Riyaz Ahamed

ஃபெர்ரி

ஃபெர்ரி

பொன்னானியிலிருந்து, குட்டாயி எனும் இடத்துக்கு ஃபெர்ரி படகு மூலம் பயணிகள் செல்லலாம். இந்த குட்டாயி பகுதியில் பாரதப்புழா நதி கடலோடு சங்கமமாகும் காட்சியை நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.

படம் : Shahinmusthafa

வளமங்கலம்

வளமங்கலம்

மலப்புறம் நகரிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள வளமங்கலம் எனும் அழகிய ஊர்.

படம் : Dhruvaraj S

சாளியாறு

சாளியாறு

மலப்புறம் மாவட்டத்தின் வளமைக்கு காரணமான நதிகளில் ஒன்றான சாளியாறு.

படம் : Dhruvaraj S

திருமந்தம்குன்னு கோயில்

திருமந்தம்குன்னு கோயில்

மலப்புறம் மாவட்டத்தில் உள்ள அங்காடிபுரம் எனும் கிராமத்தில் திருமந்தம்குன்னு கோயில் அமைந்துள்ளது. இது கேரளத் தலைநகர் திருவனந்தபுரம், சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து முறையே 352, 606, 339 கி.மீ தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது. இந்தக் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதியில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 'மாங்கல்ய பூஜை' என்ற பெயரில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இப்பூஜையில் கலந்துகொள்வோருக்கு விரைவிலேயே மணவாழ்வு கிட்டும் என்று நம்பப்படுகிறது. மேலும் வழக்கமாக விநாயககருக்கு இடது பக்கம் நின்று வணங்கும் பக்தர்கள், இந்தப் பூஜையின்போது நேராக நின்று வணங்கவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

படம் : Rojypala

திருமந்தன்குன்னு

திருமந்தன்குன்னு

மலப்புறம் மாவட்டத்தில் உள்ள அங்காடிபுரம் பகுதியில் அமைந்துள்ள திருமந்தன்குன்னு எனும் திருக்கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகள்.

படம் : Dhruvaraj S

வல்லிக்குன்னு

வல்லிக்குன்னு

மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமமான வல்லிக்குன்னுவில் ஒரு சூரிய உதயத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

படம் : Navaneeth KN

கோட்டக்கல்

கோட்டக்கல்

புகழ்பெற்ற கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையின் தலைமையிடமான கோட்டக்கல் நகரம். இந்த நகரம் மலப்புறம் மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.

படம் : Mohammedshafit

தனூர்

தனூர்

மலப்புறம் மாவட்டத்தில் உள்ள திரூர் நகருக்கு வடக்கே அமைந்துள்ள சிறிய நகரமான தனூர்.

படம் : Akkukp

துஞ்சன் பரம்பு

துஞ்சன் பரம்பு

கேரள மொழியின் தந்தையாக கருதப்படும் துஞ்சத்து எழுத்தச்சன் அவர்களின் பிறந்த இடம்தான் துஞ்சன் பரம்பு. இது மலப்புறம் மாவட்டத்தில் உள்ள திரூர் ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்காக 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

படம் : Shahinmusthafa

அரிம்பரா மலா

அரிம்பரா மலா

மினி ஊட்டி என்று அழைக்கப்படும் அரிம்பரா மலா, மலப்புறம் மாவட்டத்திலுள்ள கொண்டோட்டி நகரில் அமைந்துள்ளது.

படம் : Dhruvaraj S

மஞ்சேரி

மஞ்சேரி

மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய நகரமான மஞ்சேரி.

படம் : Dhruvaraj S

More News

Read more about: மலப்புறம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+