Search
  • Follow NativePlanet
Share
» »மால்டா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

மால்டா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

மால்டா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஆங்கில பஜார், அங்க்ரேஜி பஜார் என்றும், மாம்பழ நகரம் என்றும் அழைக்கப்படும் மால்டா மேற்கு வங்காளத்தின் வட பகுதியில், டார்ஜிலிங் மற்றும் சிலிகுரி ஆகிய நகரங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. வட மேற்கு வங்காளத்தின் வடக்குப்பகுதியில் இரண்டாவது பெரிய நகரமான மால்டாவில் பெண்களுக்கான பிரத்யேக நீதிமன்றம் இயங்குகிறது. மால்டா சுற்றுலா பெரிதும் நம்பியுள்ள மாஹானந்தா நதிக்கரையில் இந்நகர் அமைந்துள்ளது. இங்கு நிலவும் வெப்பமண்டல வானிலை ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் உள்ளது

மால்டா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

B.saptarshi1984

மால்டாவிற்கு அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

மால்டா அருங்காட்சியகம் இங்கு முக்கியமான சுற்றுலா தளமாக கருதப்படுகிறது. மேலும் உத்தர் தினஜ்பூர், தக்‌ஷின் தினஜ்பூர், முர்ஷிதாபாத் மற்றும் தாராபித் ஆகிய நகரங்களுக்கு அருகில் உள்ளது மால்டா.

சுவையான பெங்காலி உணவுவகைகளை பறிமாறும் ஏராளமான உணவகங்கள் இங்கு உள்ளன. சுற்றுலா பயணிகள் முடிந்தவரை அனைத்து உணவுகளையும் ருசித்துப் பார்ப்பது சிறப்பு. ஏற்கனவே இங்கு செயல்பட்டு வந்த விமான்நிலையம் இப்போது இடமாற்றம் செய்யப்படுவதால், பயணிகள் சிலிகுரி, பக்தொரா ஆகிய விமானநிலையங்களை உபயோகிக்கலாம்.

மால்டா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Amitabha Gupta

மால்டாவில் உள்ள பொருட்காட்சிகளும் திருவிழாக்களும்

காலி புவா, ஈத்-உல்-ஃபித்ர், கிறித்துமஸ் போன்ற ஏராளமான இந்து, இஸ்லாமிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இவ்விழாக்களின் போது இந்நகரகத்தை சுற்றிப்பார்ப்பது சிறப்பு. இந்தியப் பிரிவினையின்போது மால்டா நகரம் எதனுடன் இணைக்கப்படுவதென்பதில் சிக்கல் நிலவியது.

மால்டா அடைவது எப்படி?

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கெளர் மற்றும் பண்டுவா ஆகிய நகரங்களுக்கிடையில் மால்டா உள்ளது. சைக்கிள் ரிக்‌ஷாக்கள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மற்றும் உள்ளூர் பேருந்துகளும் பயணிகளின் வசதிக்கு உண்டு.

இங்கு 1500 ஆண்டுகளுக்கு முந்தைய களிமண் பொருட்கள், எழுத்துருக்கள், ஓவியங்கள், டெர்ரகோட்டா வேலைப்பாடுகள், பீங்கான் சாமான்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் சிறப்பாக பராமரிக்கப்படும் இந்த அருங்காட்சியகம் கலை ஆர்வலர்களுக்கு பெரும் விருந்தாக அமைகிறது.

Read more about: west bengal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X