Search
  • Follow NativePlanet
Share
» »பிச்சாவரத்துக்கு டஃப் கொடுக்கும் புதுச்சேரி மாங்குரோவ் காடுகள் பற்றி இதெல்லாம் தெரியுமா?

பிச்சாவரத்துக்கு டஃப் கொடுக்கும் புதுச்சேரி மாங்குரோவ் காடுகள் பற்றி இதெல்லாம் தெரியுமா?

சென்னைக்கு அருகில் உள்ள சதுப்பு நிலக்காடுகள் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பிச்சாரவரம் காடுகள் தான். ஆனால் சென்னைக்கு அருகில் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மினி மாங்குரோவ் காடு உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? வழக்கமாக புதுச்சேரிக்கு சுற்றுலா செல்பவர்கள் பீச், மியூசியம், ஆரோவில், தேவாலயம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில் போன்ற இடங்களுக்கு சென்று விட்டு திரும்பி விடுவார்கள்.

Mangrove Forest Puducherry Must visit hidden tourist place in South India

உலகின் இரண்டாவத மிகப் பெரிய சதுப்பு நிலக் காடான பிச்சாவரம், சிதம்பரத்திற்கு அருகில் உள்ளது. ஆனால் இதற்கே டஃப் கொடுப்பது போல் அவ்வளவு அழகு நிறைந்த மினி மாங்குரோவ் காடுகள் புதுச்சேரியில் உள்ளது. புதுச்சேரியில் பலருக்கும் தெரியாத கிட்டதட்ட பிச்சாவரத்துக்கு இணையான சதுப்பு நிலக்காடு உள்ளது. பிரெஞ்சு ஆளுமையின் கீழ் இருந்த புதுச்சேரியின் முருங்கப்பாக்கம் ஆறு மற்றும் கடல் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள மாங்குரோவ் காடு அட்வென்ச்சர் விரும்பிகள் தவறவே விடக் கூடாத ஒரு இடம்.

பிச்சாவரம் செல்ல முடியாதவர்கள் இந்த மினி மாங்குரோவ் காட்டிற்கு சென்று படகு சவாரி செய்தபடியே சுற்றி உள்ள இயற்கை அழகை ரசிக்கலாம். கூகுள் மேப்பில் Art and Craft Village என தேடினால் இந்த இடத்தை அடையலாம். பெயருக்கு ஏற்ப, கைவினை பொருள் கலைகளின் கிராமமாக இந்த பகுதி திகழ்கிறது. இங்குள்ள கைவினை பொருட்கள் கண்காட்சி மையத்தில் கார், பைக் போன்றவற்றை நிறுத்த வசதி உள்ளது. அங்கிருந்து நடந்தால் கைவினைப் பொருட்கள் கடைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை கடந்து சென்றால் போட் ஹவுஸ் உள்ளது. அங்கே டிக்கெட் எடத்துக் கொண்டு படகில் சவாரியை துவங்கலாம்.

Mangrove Forest Puducherry Must visit hidden tourist place in South India

சதுப்பு நிலக் காடுகளில் சுற்றிலும் மரங்களுக்கு இடையில் வன பறவைகளின் கீச்சிடும் சத்ததுடன் பயணம் செய்வது அலாதி இன்பமாக இருக்கும். அரிக்கமேடு மீன்பிடி துறைமுகம் வழியாக சென்று கடலையும் நதியையும் இணைக்கும் ரிவர் மவுத் பகுதி ஆகிய இடங்களை படகில் அமர்ந்தபடியே சுற்றி வரலாம். சுமார் ஒன்றரை மணி நேரம் வரை காட்டுக்குள் சென்று வரும் இந்த அட்வென்ச்சர் பயணத்திற்கு ஒரு நபருக்கு ரூ.500 முதல் ரோ.700 வரை வசூலிக்கிறார்கள். சதுப்பு நிலக் காடுகளுக்குள் படகில் பயணிக்கும் அனுபவமே சிலிப்பானதாக இருக்கும்.

சதுப்பு நிலக்காடுகளை பார்த்து விட்டு திரும்பும் வழியில் உணவகம் ஒன்றில் படகை நிறுத்துகிறார்கள். சுற்றிலும் தண்ணீர், நடுவில் தான் இந்த உணவகமே உள்ளது. இயற்கை அழகை ரசித்த படியே இங்கு உணவு உண்ணும் வாய்ப்பு வேறு எங்கு சென்றாலும் கிடைக்காஐ. அங்கேயே தங்குவதற்கான அறைகளும் அமைப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகத்திற்கு அருகே ஸ்க்யூபா டைவிங்கும் உள்ளது. படகில் செல்பவர்களின் பாதுகாப்பிற்காக லைஃப் ஜாக்கெட்டும் கொடுக்கப்படுகிறது.

அடுத்த முறை புதுச்சேரி சென்றால் இந்த மினி மாங்கரோவ் காட்டிற்கு அவசியம் ஒருமுறை சென்று விட்டு வாங்குங்கள். புதுச்சேரிக்கு சென்னையில் இருந்து ஒரு நாள் டிரிப் பிளான் செய்பவர்கள், கோடை விடுமுறைக்கு செல்ல திட்டமிடுபவர்கள் இங்கு சென்று விட்டு வரலாம். இங்கு சென்று வர செலவும் குறைவு என்பதால் குடும்பத்துடன் செல்வதற்கும், குழந்தைகளை ஜாலி டிரிப் அழைத்து செல்வதற்கும், நண்பர்களுடன் சென்று வரவும் ஏற்ற இடமாக இந்த சதுப்பு நில காடுகள் இருக்கும்.

More News

Read more about: puducherry
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+