Search
  • Follow NativePlanet
Share
» »மணிப்பூர் மாநிலம் முழுமைக்கும் சுற்றித் திரிவோம் வாருங்கள்! #StateTravel 2

மணிப்பூர் மாநிலம் முழுமைக்கும் சுற்றித் திரிவோம் வாருங்கள்! #StateTravel 2

உலகம் முழுமையும் சுற்றித்திரிய விரும்புபவர்களுக்கும், சுற்றுலாவை விரும்புபவர்களுக்கும் மணிப்பூரில் தனித்தன்மையான அனுபவங்கள் ஏராளம் காத்துக்கிடக்கின்றன. ஷிருயி லில்லி, சங்காய் மான்கள், லோக்டாக் ஏரியில்

By Udhaya

உலகம் முழுமையும் சுற்றித்திரிய விரும்புபவர்களுக்கும், சுற்றுலாவை விரும்புபவர்களுக்கும் மணிப்பூரில் தனித்தன்மையான அனுபவங்கள் ஏராளம் காத்துக்கிடக்கின்றன. ஷிருயி லில்லி, சங்காய் மான்கள், லோக்டாக் ஏரியில் மிதக்கும் தீவுகள், முடிவில்லாத பசுமை விரிப்புகள் , அதன் மிதவெப்பமான பருவநிலை மற்றும் பழங்குடியினங்கள் ஆகியவை இந்த வடகிழக்கு மாநிலத்தின் தனித்துவமான வியக்கத்தக்க குணாதிசயங்களாக உள்ளன. இந்த இடத்திற்கு சுற்றுலாப் பயணம் வருவது உங்களுக்கு ஆர்வமூட்டுவதாகவும், மிகவும் விருப்பமானதாகவும் இருக்கும். மணிப்பூரின் வடக்கில் நாகலாந்தும், தெற்கில் மிஸோரமும், மேற்கில் அஸ்ஸாமும் மற்றும் கிழக்கில் பர்மாவும் எல்லைகளாக விளங்குகின்றன. மணிப்பூர் மாநிலத்தில் என்ன என்ன செய்யலாம், எங்கு எங்கு செல்லலாம், எதையெல்லாம் வாங்கலாம், எப்படியெல்லாம் பயணிக்கலாம் எனும் முழு தொகுப்பையும் இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

 மணிப்பூரில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய சுற்றுலாத் தளங்கள்

மணிப்பூரில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய சுற்றுலாத் தளங்கள்


மணிப்பூரின் முக்கிய நகரங்களான இம்பால், சண்டேல், தௌபல், உக்ருள், சூரசந்த்பூர், சேனாபதி ஆகிய இடங்களையும், அவற்றில் இம்பால், சண்டேல், தமெங்லாங், உக்ருள், பிஷ்ணுபூர் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள காட்டுயிர் வாழ்க்கை பற்றியும் இந்த பதிவில் காண்போம். மணிப்பூரின் தலைநகரம் இம்பால் கண்கவரும் இயற்கையழகு மற்றும் வனவிலங்குகளை காண ஏற்ற சிறந்த சுற்றுலா தலமாகும். புகழ் பெற்ற போலோ விளையாட்டின் தாயகம் இம்பால் என்பதை அறியும் போது உங்களின் புருவம் ஆச்சரியமாக உயருவதை தவிர்க்க முடியாது. மேலும், இம்பாலில் எண்ணற்ற பழமையான நினைவுச் சின்னங்கள், கோவில்கள் மற்றும் வரலாற்று சின்னங்களும் உள்ளன. இரண்டாம் உலகப்போரின் போது நடைபெற்ற இம்பால் போர் மற்றும் கோஹிமா போர்களினால் இம்பாலின் பெயர் சரித்திரத்தில் இடம்பெற்றது.

எப்படி செல்வது?

நீங்கள் விமானத்தில் பயணிக்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் ஐந்து மணி நேர பயணத்தில் சென்னையிலிருந்து இம்பால் சென்றடையலாம். 6000ரூபாய் சராசரியாக பயணக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஒருவேளை நீங்கள் ரயிலில் பயணிக்கிறீர்கள் என்றால், சென்னையிலிருந்து இம்பாலுக்கு நேரடி ரயில்கள் இல்லை. எனவே மாற்றுவழியில் பயணிக்கவேண்டும். அல்லது புவனேஸ்வர் சென்று அங்கிருந்து பயணிக்கலாம்.

Meghroddur

இம்பாலைச் சுற்றியுள்ள இடங்கள்:

இம்பாலைச் சுற்றியுள்ள இடங்கள்:

வட கிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூரின் தலைநகரம் இம்பால் ஒரு சந்தடியில்லாத சிறு நகரமாகும். இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த போது இம்பால் முக்கியத்துவம் பெறத் துவங்கியது. இரண்டாம் உலப்போரின் வரலாற்றில் நடைபெற்ற இம்பால் போர் மற்றும் கோஹிமா போர் ஆகியவற்றின் போது தான் ஆக்ரோஷமான ஜப்பானிய படைகள் ஆசிய மண்ணில் முதன்முறையாக தோற்கடிக்கப்பட்டன.

இம்பாலில் மாடெய் தோட்டம், இமா கெய்தல் எனப்படும் பெண்கள் சந்தை,. போர்வீரர்களின் கல்லறைகள், சம்பல் லெய் செக்பில் தோட்டம், அனுமான் கோயில், இம்பால் பள்ளத்தாக்கு, மணிப்பூர் மாநில அருங்காட்சியகம், காங்லா அரண்மனை, மணிப்பூர் விலங்கியல் தோட்டங்கள், போலோ மைதானம், வாங்கெய் மற்றும் கோவிந்தாஜீ கோயில் ஆகியன இம்பாலின் முக்கியமான தலங்களாகும்.

Mongyamba

மணிப்பூரில் எங்கெல்லாம் சுற்றலாம்?

மணிப்பூரில் எங்கெல்லாம் சுற்றலாம்?

இவை மட்டுமல்லாமல் மேலும் பல சுற்றுலாதலங்களையும் தன்னகத்தே கொண்டு, மணிப்பூர் மாநிலம் சுற்றுலாவில் பெரும்பங்கு வகிக்கிறது. மியான்மர் நாட்டின் நுழைவாயிலாக இருக்கும் சன்டெல் என்ற மாவட்டமும் மணிப்பூர் மாநில சுற்றுலாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. மாறுபட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகளையுடை சன்டெல் மற்றும் தெமங்லாங் மாவட்டங்கள் மணிப்பூரின் உயிர்-பன்முகதன்மைக்கு எடுத்துக் காட்டுகளாக திகழ்கின்றன. சன்டெலில் உள்ள மோரெ மணிப்பூரின் பிரசித்தி பெற்ற வணிக மையமாகும். மேலும், தெமங்லாங்கில் நடத்தப்படும் ஆரஞ்சு திருவிழாவும், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் ரசனைக்கேற்ப நடத்தப்படும் சுவைமிகுந்த பழத் திருவிழாவாக அறியப்படுகிறது.

சண்டெல் மற்றும் தெமங்லாங்:

மணிப்பூரின் ஒன்பது மாவட்டங்களில் ஒன்றான சண்டேல் இந்தோ-மியான்மார் எல்லையில் அமைந்து அருகில் உள்ள பல இடங்களுக்கு நுழைவு வாயிலாக இருந்து வருகின்றது. சண்டேல் நகரமாக இருக்கும் சண்டேல் மாவட்டத்தில் மோரே, சக்பிகரொங் சண்டேல் மற்றும் மாச்சி போன்ற உட்பிரிவுகளை கொண்டுள்ளது. சண்டேல் மாவட்டத்தின் தெற்கே மியான்மாரும், கிழக்கில் உக்ரல், மேற்கில் மற்றும் தெற்கில் சூரசந்த்பூர் மற்றும் வடக்கில் தவ்பால் போன்ற மாவட்டங்கள் அமைந்திருக்கின்றன. தெமங்லாங் மாவட்டம் மலைகளும், பள்ளத்தாக்குகளும் மற்றும் மலைத்தொடர்களும் புடைசூழ நிற்கும் ஒரு மலை மாவட்டமாகும். இந்த அழகிய மாவட்டம் மணிப்பூர் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் ஒன்றாகும். இயற்கை மற்றும் கலாச்சார மாறுபாடுகள் நிரம்பிய மாவட்டமாக தெமங்லாங் உள்ளது

எங்கெல்லாம் செல்லலாம்:

தமெங்கலாங்கில் நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய தலங்களாக தரோன் குகை, புனிங் புல்வெளிகள், ஸேய்லாட் ஏரி, பாரக் நதி, ஏழு நீர்வீழ்ச்சிகள், ஆரஞ்சு திருவிழா ஆகியன நீங்கள் கட்டாயம் கண்டு ரசிக்கவேண்டியவை ஆகும்.

Dangmei

 சேனாபதி

சேனாபதி


தனித்தன்மையுடன் சிறு சிறு கிராமங்களை குழுக்களாக கொண்டிருக்கும் சேனாபதி மணிப்பூரின் சுற்றுலாவை பெருமைப்படுத்தும் இடமாக உள்ளது. வரலாற்றைப் பேசிக்கொண்டிருக்கும் மரம் குல்லென், மக்ஹெல் மற்றும் லாங்குல்லென் ஆகிய இடங்களும், மணிப்பூரின் மாநிலத்தின் நுழைவாயிலாக இருக்கும் மாவோ மற்றும் டாவ்டு நிலமாக இருக்கும் புருல் ஆகிய விளையாட்டுக்களும் மணிப்பூரின் அடையாளங்களாக விளங்குகின்றன. ஏரிகள், தோட்டங்கள் மற்றும் சிகரங்கள் மற்றும் பல... உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் ஏரியான பிஷ்னுபூரின் லோக்டாக் ஏரி புமிடிஸ் அல்லது மீனவர்கள் வசிக்கும் மிதக்கும் தீவுகளுடன் மணிப்பூரின் மதிப்பு வாய்ந்த சுற்றுலா தலமாக உள்ளது. லோக்டாக் ஏரியில் உள்ள சென்ட்ரா தீவு சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பார்க்கப்பட்ட இடமாகும். இந்த ஏரியிலிருந்து தெரியும் கெய்புல் லாம்ஜாவோ தேசிய பூங்காவில் பாதுகாக்கப்பட்ட அரிய வகை உயிரினமான சங்காய் மான்களையும் சுற்றுலாப் பயணிகள் பார்த்திட முடியும்.

எப்படி செல்லலாம்:

தமெங்லாங்கிலிருந்து சண்டெல் போகும் பாதை முழுக்க முழுக்க மலைப்பாதை என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். மேலும் இதற்கு இடையில் இருக்கும் இம்பால், தௌபல், மமாங்க் ஆகிய இடங்களைக் கடந்துதான் சண்டெல்லுக்கு செல்லமுடியும். தௌபல் மற்றும் உக்ரள்ளையும் தெரிந்துகொள்வோம்.

Houruoha

தௌபல் மற்றும் உக்ருள்

தௌபல் மற்றும் உக்ருள்

தெமங்லாங் மாவட்டத்திலுள்ள ஸெய்லாட் ஏரி கண்கவரும் சுற்றுச் சூழலுடனும் மற்றும் சாகசம் செய்ய தூண்டுவதாகவும் உள்ள அதே வேளையில், தௌபல் மாவட்டத்தில் உள்ள வைய்தௌல் ஏரியும் சிறப்பு மிக்க காட்சிகளை காட்ட வல்லதாக உள்ளது. மணிப்பூரின் விவசாய மாவட்டமான தௌபல் கண்கவரும் நெல் வயல்களை அதன் அப்பழுக்கில்லாத தெளிந்த அழகின் ஒரு பகுதியாக கொண்டிருக்கிறது.

ஏரிகளும் நீர்வீழ்ச்சிகளும்:

ஐகோப் ஏரி, லௌசி ஏரி, பும்லென் ஏரி ஆகியவை தௌபல் மாவட்டத்திலுள்ள மற்ற சில ஏரிகளாகும். உக்ருள்-ல் உள்ள காசௌபுங் ஏரியின் இயற்கையாகவே உருவாகியுள்ள நீர்ப்பரப்புகளாக அதன் அருகிலுள்ள காயாங் நீர்வீழ்ச்சி உள்ளன. சூரசந்த்பூரில் இருக்கும் ங்கலாய் நீர்வீழ்ச்சி மற்றும் குகா அணைக்கட்டு ஆகிய இடங்களும் சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற இடங்களாக அறியப்படுகின்றன.

அழகிய காட்சிகள்:

உக்ருள்-ல் இருக்கும் ஷிருய் காசுங் சிகரத்தில் ஷிருய் லில்லி பூக்கள் கோடைகாலத்தில் பூத்துக் கிடப்பது கண்கவரும் காட்சியாக இருக்கும் அதே நேரத்தில், சன்டெலில் உள்ள புனிங் புல்வெளிகளும் அதன் மேடுபள்ளமான மற்றும் முடிவில்லாத புல்வெளிகள் வானுடன் கலக்கும் வியக்க வைக்கும் காட்சிகளும், அந்த புல்வெளி முழுமையும் காட்டு லில்லி பூக்கள் மற்றும் ஆர்கிட் பூக்கள் கோடைக்காலத்தில் பூத்து கிடப்பதை காண்பதும் மறக்க முடியாத காட்சிகளாக உங்கள் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும். எனவே, சுற்றுலாப் பயணங்களைப் பொறுத்த வரையில், மணிப்பூரில் உள்ள இடங்கள் உங்களுக்கு வேண்டியதை தாராளமாக அள்ளிக் கொடுக்கும் வல்லமை பெற்ற இடங்களாகும்.

Zingkhai

Read more about: travel summer tour manipur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X