Search
  • Follow NativePlanet
Share
» »மணிப்பூர் காடுகளில் மறைந்திருக்கும் மர்மங்களைத் தெரிந்து கொள்வோம்!

மணிப்பூர் காடுகளில் மறைந்திருக்கும் மர்மங்களைத் தெரிந்து கொள்வோம்!

உலகை சுற்றி பறக்க யாருக்குதான் ஆசை இல்லாமல் இருக்கும். நமக்கு மட்டும் சிறகு இருந்திருந்தால், உலகின் தலை சிறந்த சுற்றுலா பயணியாக இருந்திருப்போமல்லவா. இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லாம் அலைந்து திரிந்த

By Udhaya

உலகை சுற்றி பறக்க யாருக்குதான் ஆசை இல்லாமல் இருக்கும். நமக்கு மட்டும் சிறகு இருந்திருந்தால், உலகின் தலை சிறந்த சுற்றுலா பயணியாக இருந்திருப்போமல்லவா. இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லாம் அலைந்து திரிந்து விரும்பிய இடங்களுக்கெல்லாம் சென்று குளிரையும் மழையையும் காற்றையும் புத்துணர்ச்சியையும் உணர்ந்து தெளிந்து முகர்ந்து உறைந்து அழகியல்களை கண்களால் கவர்ந்து வந்திருப்போம் தானே. ஒரு வேளை உங்களுக்கு சிறகு இல்லை என்று கவலை படுவீர்களாயின், மறந்து விடுங்கள். இப்போதே புறப்படுங்கள் மணிப்பூர் மாநில காடுகளில் பொய்ச் சிறகை விரித்து பயணிக்க... வாருங்கள் ஒரே மூச்சில் சென்று வருவோம் சென்னையிலிருந்து மணிப்பூருக்கு....

பறப்பதற்கு முன்னர் மேலே இருக்கும் மணி குறியீட்டை தொட்டு நமது இணைய பக்கத்தின் தொடர் வாசிப்பாளராகிவிடுங்கள். இனி எங்களது அனைத்து பதிவுகளும் உங்கள் கணினித் திரையைத் தட்டும்.

சென்னை - இம்பால்

சென்னை - இம்பால்

சென்னையிலிருந்து இம்பால் செல்வதென்பது 3153 கிமீ தூரம் பயணிக்க வேண்டிய 64 மணி நேர பயணம். எளிதில் நம்மைச் சோர்வடையச் செய்யும் இந்த பயணத்தை விமானம் அல்லது ரயிலில் தொடர்வதுதான் பரிந்துரைக்கத்தக்கது.

சென்னையிலிருந்து மணிப்பூருக்கு ரயில்கள்

இம்பாலிற்கு உள்ளே மற்றும் வெளியே என எங்கும் இரயில் நிலையங்கள் கிடையாது. இம்பால் நகரத்திலிருந்து 208 கிமீ தொலைவில் திமாபூர் இரயில் நிலையம் உள்ளது. இந்த இரயில் நிலையத்திலிருந்து புது டெல்லி, கௌகாத்தி, கொல்கொத்தா மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் இரயில்கள் சென்று வருகின்றன. இம்பாலில் இருந்து டாக்ஸிகள் வழியாகவும் திமாபூர் இரயில் நிலையத்தை அடைந்திட முடியும்.

சென்னையிலிருந்து திமாபூருக்கு இருக்கும் ரயில்கள்

திப்ருகர் எக்ஸ்பிரஸ் - காலை 9 மணி

எஸ்வந்த்பூர் திப்ருகர் - மாலை 4 மணி

திப்ருகர் எக்ஸ்பிரஸ் - மாலை 3. 20 மணி

திப்ருகர் எக்ஸ்பிரஸ் - மதியம் 1. 45 மணி

இதுகுறித்த மேலும் தவல்களுக்கு நமது தளத்தின் ரயில் தகவல் பக்கத்தை பார்க்கவும்.

 இம்பால் பள்ளத்தாக்கு

இம்பால் பள்ளத்தாக்கு

மணிப்பூரிலுள்ள மலைகளிலிருந்து கீழ் நோக்கியவாறு சில சிறிய நதிகளும் பாய்ந்து வருகின்றன. இம்பால் பள்ளத்தாக்கில் இந்த நதிகளில் சில வறண்டு போய் இந்த பள்ளத்தாக்கிற்கு ஓவல் வடிவத்தை தருகின்றன. அழகும் பசுமையும் நிறைந்து காணப்படும் இந்த பள்ளத்தாக்கை தன் வாழ்நாளில் ஒரு முறையாவது நம் ஒவ்வொருவரும் சென்று காணவேண்டும்.

Herojit th

இம்பால் பற்றிய மிக முக்கிய பத்து விசயங்கள்

இம்பால் பற்றிய மிக முக்கிய பத்து விசயங்கள்

1. இம்பால் பள்ளத்தாக்கின் பரப்பளவு 1443 சகிமீ ஆகும்

2.மணிப்பூரில் பத்தில் ஒரு பங்கு அளவுக்கு இம்பால் பள்ளத்தாக்கு பரவி காணப்படுகிறது.

3.இந்த மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர் இந்த இம்பால் பள்ளத்தாக்கில்தான் வாழ்ந்து வருகின்றனர்

4. நதிகள் - இம்பால் நதி, குகா நதி, ஐரில் நதி, தௌபல் நதி, சேக்மே நதி

5. லோக்டாக் ஏரி எனப்படும் மிதக்கும் ஏரி இதன் சிறப்பாகும்.

6.மிதக்கும் ஏரி தான் இந்தியாவின் மிகப் பிரம்மாண்டமான நன்னீர் ஏரியாகும்.

7. காங்லா அரண்மனை - காங்க்லா என்றால் வறண்ட இடம் என்று பொருள். இங்கு இருக்கும் அரண்மனை அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக இருந்திருக்கிறது.

8. காங்க்லா கோட்டை சில காலம் சிறைச்சாலையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

9.மணிப்பூர் மாநில அரசு அருங்காட்சியததில் தொல்லியல், மானிட உறவியல், இயற்கை வரலாறு, ஜல்லன் மற்றும் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.

10.ஹியாங் ஹிரென் அரசரின் படகு என்ற 78 அடி நீளமுள்ள படகு இங்குள்ள திறந்தவெளி காட்சியத்தில் வைக்கப் பட்டிருப்பது தான் இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பாகும்.

Dirklaureyssens

ஹயாங் நீர்வீழ்ச்சி | சுற்றுலா அம்சங்கள் | செய்யவேண்டியவை

ஹயாங் நீர்வீழ்ச்சி | சுற்றுலா அம்சங்கள் | செய்யவேண்டியவை

இந்திய மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மணிப்பூரின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி

இதன் மறுபெயர் டெலி நீர்வீழ்ச்சி என்பதாகும்.

இதன் உயரம் 754 அடி ஆகும்

இது அதிகம் பேரால் அறியப்படாத ஒரு நதி என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நதியைக் காண்பதற்கு 3 நாட்கள் வரை காத்திருந்து செல்லவேண்டும்.

சாகச விரும்பிகள் டிரெக்கிங் செல்ல விரும்புபவர்களுக்கு இந்த நீர்வீழ்ச்சி மிகவும் பிடித்துபோகும்

முழுமையாக திட்டமிடாமல் இங்கு டிரெக்கிங் செல்வது அறிவுரைக்கத்தக்கது அல்ல. தயவு செய்து முன் அனுபவம் இல்லாதவர்களுடன் பயணிக்க வேண்டாம்.

Aaddeek

தரோன் குகை | ஈர்க்கும் இடங்கள் | செய்யவேண்டியவை

தரோன் குகை | ஈர்க்கும் இடங்கள் | செய்யவேண்டியவை

தரோன் குகை தெமங்லாங்கிலிருந்து 27 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

இது 655 மீ நீளம் கொண்டாக இருக்கிறது.

இந்த குகைகளுக்கு 34 இணைப்புகள் இருக்கின்றன

பண்டைய ஹோபினியன் கலாச்சாரம் இந்த குகையில் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன

குகைக்கு செல்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த குகையின் வரைபடம், வழிகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

சாகச விரும்பிகள் மிகவும் விரும்பும் இடமாக இந்த குகைகள் இருக்கின்றன

Alfie

Read more about: travel manipur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X