Search
  • Follow NativePlanet
Share
» »மந்த்ராலயம் - குரு ராகவேந்திர சுவாமியின் பிருந்தாவனம்!!!

மந்த்ராலயம் - குரு ராகவேந்திர சுவாமியின் பிருந்தாவனம்!!!

By Super Admin

ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்டத்தில் அமைந்துள்ள மந்த்ராலயம் நகரம், கர்நாடக எல்லையில், துங்கபத்ரா நதிக்கரையோரம் ஆன்மிக மனம் பரப்பி வருகிறது. இது 'மன்ச்சாலே' என்ற பெயராலும் பிரபலமாக அழைக்கப்படுகிறது.

மந்த்ராலயம் நகரத்தின் குன்றா புகழுக்கு பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் குரு ராகவேந்திரா சுவாமியின் சமாதி கோயிலே முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது.

அதிகம் படித்தவை: மதுரைக்குப் போய் இதை பார்க்காமல் இருக்காதீர்கள்!

தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட ராகவேந்திர சுவாமிகள், அந்த சமாதியான பிருந்தாவனத்துக்குள் சென்ற பிறகு, தான் 700 ஆண்டுகள் அதனுள்ளேயே வாழ்வேன் என்று தன் பக்தர்களிடம் தெரிவித்தார்.

அதன்படி 340 ஆண்டுகள் கழித்துவிட்ட நிலையில், மேலும் 360 ஆண்டுகள் ராகவேந்திரர் அதில் வாழ்வார் என்று பக்தர்கள் நம்பி வருகின்றனர்.

இசையோவியம்

இசையோவியம்

குரு ராகவேந்திரசுவாமிகள் நடுவில் வீற்றிருக்க அவரைச் சுற்றி புரந்தரதாசர் உள்ளிட்ட இசை விற்பன்னர்கள் இசை கச்சேரி நிகழ்த்துவது போன்று தீட்டப்பட்டிருக்கும் ஓவியம். இந்த ஓவியம் ராகவேந்திரசுவாமி கோயில் உள்ளே காணப்படுகிறது.

பாம்பின் மீது நடனமாடும் கிருஷ்ணர்

பாம்பின் மீது நடனமாடும் கிருஷ்ணர்

ஸ்ரீ குரு ராகவேந்திரசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள காளிங்கன் என்ற பாம்பின் மீது நடனமாடும் ஸ்ரீ கிருஷ்ணரின் சிலை.

சுவாமி தரிசனம்

சுவாமி தரிசனம்

சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் எல்லோரும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்.

மந்த்ராலயம் நுழைவாயில்

மந்த்ராலயம் நுழைவாயில்

மந்த்ராலயம் நகரின் நுழைவாயில் பரபரப்பில்லாமல் காணப்படும் காட்சி.

ஸ்ரீ குரு ராகவேந்திரசுவாமி கோயில்

ஸ்ரீ குரு ராகவேந்திரசுவாமி கோயில்

பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ குரு ராகவேந்திரசுவாமி கோயிலின் நுழைவாயில்.

மன்ச்சாலே அம்மன்

மன்ச்சாலே அம்மன்

ஸ்ரீ குரு ராகவேந்திரசுவாமி கோயில் செல்வதற்கு முன் இந்த மன்ச்சாலே அம்மனை தரிசித்துவிட்டு செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இந்த அம்மனின் பெயர் காரணமாகத்தான் மந்த்ராலயம் நகரம் 'மன்ச்சாலே' என்று அறியப்படுகிறது.

சிவன் கோயில்

சிவன் கோயில்

ஸ்ரீ குரு ராகவேந்திரசுவாமி கோயிலுக்கு அருகே அமைந்துள்ள சிவன் கோயில்.

தரிசனத்துக்கு பிறகு...

தரிசனத்துக்கு பிறகு...

ராகவேந்திரசுவாமிகளின் தரிசனம் முடித்துவிட்டு கொஞ்ச நேரம் கோயிலில் அமர்ந்திருக்க விரும்புவர்கள் இங்கு வரலாம்.

சேவா புக்கிங் மற்றும் நன்கொடை கவுண்டர்

சேவா புக்கிங் மற்றும் நன்கொடை கவுண்டர்

அர்ச்சனை, அபிஷேகம் செய்ய விரும்புவர்கள் இங்கே அதற்கான ரசீதை இங்கே பெற்றுக்கொள்ளலாம். அதோடு நன்கொடை வழங்க விரும்புபவர்கள் இந்த கவுண்டரில் அதைச் செலுத்தலாம்

துலாபாரம்

துலாபாரம்

சுவாமிக்கு எடைக்கு எடை நவதானியங்கள், பழங்கள், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை வழங்க விரும்வுபர்கள் இந்த இடத்தில்தான் துலாபாரத்தில் அமர வேண்டும். .

யாக சாலை

யாக சாலை

ஸ்ரீ குரு ராகவேந்திரசுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள யாக சாலை.

அங்கப்பிரதக்ஷணம்

அங்கப்பிரதக்ஷணம்

சுவாமியை வேண்டிக்கொண்டு அந்த வேண்டுதல் நிறைவேறும் பொருட்டு பக்தர்கள் இந்த வழியில்தான் அங்கப்பிரதக்ஷணத்தில் ஈடுபடுவார்கள்.

முன்புறத் தோற்றம்

முன்புறத் தோற்றம்

ஸ்ரீ குரு ராகவேந்திரசுவாமி கோயிலின் முன்புறத் தோற்றம்.

வெள்ளத்துக்கு முந்தைய தோற்றம்

வெள்ளத்துக்கு முந்தைய தோற்றம்

2009 அக்டோபர் மாதம் துங்கபத்திரை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒட்டுமொத்த ராகவேந்திரசுவாமி கோயிலும் பாதிப்புக்குள்ளானது. அந்த வெள்ளம் ஏற்படும் முன் கோயில் நுழைவாயிலின் தோற்றம்.

படம் : Vedamurthy J

மூல உத்சவர்

மூல உத்சவர்

ஊர்வலத்துக்கு முன் மூல உத்சவருக்கு செய்யப்படும் பூஜை.

படம் : Mohan Krishnan

ஊர்வலம்

ஊர்வலம்

ஊர்வலம் செல்வதற்காக மூல உத்சவர் விக்ரகம் யானை மீது ஏற்ற தயாரான நிலையில் உள்ளது.

படம் : Mohan Krishnan

காலணி வைக்கும் இடம்

காலணி வைக்கும் இடம்

ஸ்ரீ குரு ராகவேந்திரசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள காலணி வைக்கும் இடம்.

நாகதேவதை கோயில்

நாகதேவதை கோயில்

ராகவேந்திரசுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நாகதேவதை கோயில்.

துங்கபத்திரை நதி

துங்கபத்திரை நதி

ஸ்ரீ குரு ராகவேந்திரசுவாமி கோயில் அருகே பாய்ந்தோடும் துங்கபத்திரை நதி சலனமில்லாமல் காட்சியளிக்கிறது.

சுஷமிந்திர தீர்த்தா

சுஷமிந்திர தீர்த்தா

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தின் முன்னாள் பீடாதிபதி சுஷமிந்திர தீர்த்தா.

சுதமிந்திர தீர்த்தா

சுதமிந்திர தீர்த்தா

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தின் முன்னாள் பீடாதிபதி சுதமிந்திர தீர்த்தா.

சுர்வதிந்திர தீர்த்தா

சுர்வதிந்திர தீர்த்தா

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தின் முன்னாள் பீடாதிபதி சுர்வதிந்திர தீர்த்தா.

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

மந்த்ராலயம் நகரின் மையத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. அதோடு மந்த்ராலயம் நகருக்கு ஆந்திராவின் பிற பகுதிகளிலிருந்து நிறைய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் மந்த்ராலயத்திலிருந்து 263 கி.மீ தொலைவில் உள்ள ஹைதராபாத் விமான நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+