Search
  • Follow NativePlanet
Share
» »ஒரு பக்கம் கடல் இன்னொரு பக்கம் நதி நடுவில் ஒரு சாலை .. அடடே இப்படியும் ஒரு ஊர்!

ஒரு பக்கம் கடல் இன்னொரு பக்கம் நதி நடுவில் ஒரு சாலை .. அடடே இப்படியும் ஒரு ஊர்!

ஒரு பக்கம் கடல் இன்னொரு பக்கம் நதி நடுவில் ஒரு சாலை .. அடடே இப்படியும் ஒரு ஊர்!

கர்நாடகாவின் மிக அழகான கடற்கரைகளில் முக்கியமானதாக கருதப்படும் மரவந்தே கடற்கரை உடுப்பியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இயல்பிலேயே கேரளத்தைப் போல மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் அமைந்துள்ள பகுதிகளும், அருகே கடற்கரைகளும் இருக்கும் இடங்களும் கர்நாடக மாநிலத்திலும் அதிக சுற்றுலா ஈர்ப்புகளைக் கொண்டிருக்கும். அந்த வகையில் மரவந்தே கடற்கரையும் அதிக அளவில் சுற்றுலாவுக்கு பயணிகளை தன்னுள்ளே அழைத்துக்கொண்டு இருக்கிறது.

சாகச விளையாட்டுகள்

இந்த வெள்ளை மணற்பரப்பை கொண்ட கடற்கரை ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெல்லிங் போன்ற நீர் விளையாட்டுகளுக்காக மிகவும் பிரசித்தி பெற்றது. நீங்கள் இங்கு சென்றால் நிச்சயம் இதை தவறவிடக் கூடாது.

ஆபத்தில்லா கடற்கரை


மரவந்தே கடற்கரைக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது மிகச் சிறப்பு. அவர்களுக்கு மிகவும் இந்த கடற்கரை பிடிக்கும். இது தவிர மரவந்தேவின் அமைதியான, ஆபத்தில்லாத கடலில் நீங்கள் நீந்தவும் செய்யலாம்.

ஆன்மீக பயணம்


அதோடு இங்கு வரும் பயணிகள் மரவந்தேவுக்கு அருகில் உள்ள சௌபர்ணிகா நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் கோயிலுக்கும் சென்று கடவுளை தரிசிக்கலாம்.

அருகிலுள்ள அற்புதங்கள்

கொடச்சத்ரி குன்றும், தென்னஞ்சோலைகளும் மரவந்தேவின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

எப்போது செல்லலாம்

மரவந்தே கடற்கரைக்கு சுற்றுலா வர ஆகஸ்ட் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்கள் சிறப்பானதாக இருக்கும்.

குந்தபுரா

மரவந்தே வரும் பயணிகள் சூரிய நகரம் என்று அழைக்கப்படும் குந்தபுராவுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற குந்தேஸ்வரா கோயில் உள்ளது. இந்த நகரத்தை 16-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய மற்றும் ஜேர்மன் நாடுகளை சேர்ந்த மதப் பிரச்சார குழுக்கள் நிர்மாணித்ததாக சொல்லப்படுகிறது.

தீபகற்பம்

ஒரு காலத்தில் பைந்தூர் மன்னர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய குந்தபுராவை, திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்கு பின் ஆங்கிலேயர்கள் நிரவகித்து வந்தனர். இதன் வடப்புறம் பஞ்சகங்கவலி ஆறும், கிழக்கில் கலகர் நதியும், மேற்கே அரபிக் கடலும் சூழ்ந்து இதை ஒரு தீபகற்பமாக மாற்றி இருக்கிறது. பயணிகள் இங்கிருந்து கொடி மற்றும் கங்கொல்லி கிராமங்களுக்கு படகுகள் மூலம் செல்லலாம்.

More News

    Read more about: travel beach
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+