Search
  • Follow NativePlanet
Share
» »வளமான வாழ்வு தரும் கோவில்கள்! இந்த ராசிக்காரங்களுக்கு வெற்றி நிச்சயம்!

வளமான வாழ்வு தரும் கோவில்கள்! இந்த ராசிக்காரங்களுக்கு வெற்றி நிச்சயம்!

By IamUD

பணத்தை விட மானமே பெரிது என நினைத்து வாழும் மீன ராசிக்காரர்கள் இந்த கோவிலுக்கு சென்றால், வேலைவாய்ப்பு, கல்வி, திருமணம் போன்றவற்றில் நினைத்தது நிறைவேறுமாம். வாருங்கள் எந்த கோவிலுக்கு செல்வது என்று காண்போம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

மருதமலை கோயில்

மருதமலை கோயில்

கோயம்புத்தூரில் உள்ள மருதமலை கோயில் இந்துக் கடவுள் முருகனுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது. மலை உச்சியில் இந்தக் கோயில் அமைந்துள்ளதால் மருதமலை என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் முற்காலத்தில் கொங்கு வேட்டுவ கவுண்டர் மன்னர்களின் சொத்தாக விளங்கியது. முருகக் கடவுளுக்கான கோயில்களில் அறுபடைவீடு ஆலயங்களிற்கு அடுத்த முக்கியத்துவத்தை இந்தக் கோயில் பெறுகிறது.

Booradleyp1

ஏழாவது படைவீடு

ஏழாவது படைவீடு

முருக பக்தர்கள் மருதமலை முருகனின் ஏழாவது படைவீடு என்று நம்புகின்றனர். இந்தக் கோயில் புராதனமானது. பல வேத புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் திருமுருகன்பூண்டி ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் கூட மருதமலை கோயில் பற்றி குறிப்பிடுகின்றன. இந்தக் கல்வெட்டுக் குறிப்புகளைக் காணும்போது மருதமலை கோயில் குறைந்தபட்சம் 1200 ஆண்டுகள் பழமையானது என்பதை ஒருவர் கணிக்க முடியும். முருகக் கடவுளின் பிற கோயில்களைப் போலவே மருதமலை கோயிலும் மேற்குத் தொடர்ச்சியின் விரிவான இந்த மலை உச்சியில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதால் சாலை வழியாக எளிதில் அடையக்கூடியதாக இருக்கிறது.

Empty Frames Photography

 பழனி

பழனி

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரம், இந்தியாவில் உள்ள ஒரு மிக பழமையான மலைப் பிரதேசம் ஆகும். பழனி என்ற வார்த்தை பழம் மற்றும் நீ என்ற இரண்டு தமிழ் வார்த்தைகளில் இருந்து வருகிறது. பழனி மலை மேற்கு மண்டலத்தில் அமைந்திருக்கிறது. ஒரு காலத்தில் இந்த பழனி மலை பாளையக்காரங்களின் தாயகமாக விளங்கியிருக்கிறது. தற்போது இந்த பழனி மலை உலக மக்களின் பார்வையைஅதிக அளவில் ஈர்த்து வருகிறது. அதற்கு காரணம் பழனி மலையின் உச்சியில் பழனி தண்டாயுதபாணி சுவாமியாக எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுளே.

Vinayaraj

 வரலாறு

வரலாறு

பழனியைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை பல ஆன்மீக ஏடுகள் குறிப்பிடுகின்றன. மதுரை மற்றும் கோயம்புத்தூர் மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக பல காலங்கள் பழனி இருந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கு இருக்கும் பெரிய நாயகி அம்மன் ஆலயம், பாண்டிய மற்றும் நாயக்க மன்னர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

18 ஆம் நூற்றாண்டில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் ஆளுகையில் பழனி இருந்தது. அப்போது பழனியில் இருந்த பாளையக்காரர்கள் முகலாய மன்னர்களுக்கு கப்பம் கட்டி வந்தனர். பின் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் பழனி மலை ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக மாறியது.

Amalsarath007

 பழனியைச் சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள்

பழனியைச் சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள்

அடிப்படையில் பல இந்து ஆலயங்களுக்கு ஒரு முக்கியத் தலமாக பழனி விளங்குகிறது. அதில் முக்கியமானது முருகப் பெருமானுக்கு எழுப்பப்பட்டுள்ள தண்டாயுதபாணி ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தை தவிர்த்து இங்கு திருவாவினன்குடி ஆலயம், இடும்பன் ஆலயம், கணபதிக்கான பட விநாயகர் ஆலயம், பார்வதிக்கான பெரிய நாயகி அம்மன் ஆலயம், சிவ பெருமானுக்கான பெரியன் ஆவுடையார் ஆலயம், விஷ்ணுவிற்கான கண்ணடி பெருமாள் ஆலயம் போன்ற பிரபலமான ஆலயங்கள் பழனியில் உள்ளன. தைப்பூசம், வைகாசி விசாகம் மற்றும் திருகார்த்திகை போன்ற திருவிழாக்கள் பழனியில் மிக விசேஷமாகக் கொண்டாடப்படும்.

அந்த தருணங்களில் ஏராளமான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் பழனிக்கு வருகை தருவர். பறவைகளை விரும்புவோரின் சொர்க்கமாகவும் பழனி விளங்குகிறது. ஏனெனில் நைட் ஹெரான்ஸ், இக்ரெட்ஸ், கோல்டன் பேக்ட் உட்பெக்கர்ஸ் போன்ற வெளிநாட்டு புலம்பெயர் பறவைகளை இந்த பகுதியில் சாதாரணமாக பார்க்கலாம். மலை ஏறுபவர்களுக்கும் இந்த பழனி மலை ஒரு ஏற்ற இடமாக இருக்கிறது.

Ranjithsiji

Read more about: travel coimbatore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X