» »நீரும் நெருப்பும் ! மீனாட்சியம்மன் கோயிலில் அப்படி என்னதான் மறைந்துள்ளது?

நீரும் நெருப்பும் ! மீனாட்சியம்மன் கோயிலில் அப்படி என்னதான் மறைந்துள்ளது?

Posted By: Staff

தாமரை மலரின் மைய மொட்டாக மீனாட்சி அம்மன் கோயில் வீற்றிருக்க சுற்றிலும் இதழ்கள் விரித்தாற்போன்று மதுரை மாநகரின் புராதன தெருக்கள் தமிழ் மாதங்களின் பெயர்களை தாங்கியதாக இன்றும் விளங்குகின்றன.

வைகை ஆற்றின் தென்பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாநகரின் அடையாளமாகவும், பெருமையாகவும் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது மீனாட்சி அம்மன் கோயில்!

சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் குடிகொண்டுள்ள சிவபெருமானுக்கான இந்த கோயிலானது பெண் சக்தியை முன்னிறுத்தும் விதமாக அவரது மனைவி மீனாட்சியின் பெயரிலேயே அறியப்படுவது ஒரு சிறப்பம்சமாகும்.

மீனாட்சியை வணங்கியபின் சுந்தரேஸ்வரரை வணங்குவது இக்கோயிலில் பின்பற்றப்படும் ஐதீக மரபாகும். மதுரையில் அவதரித்திருந்த மீனாட்சியை மணப்பதற்காக சிவபெருமான் மதுரைக்கு விஜயம் செய்ததாக புராணிக ஐதீகம் கூறுகிறது.

இப்படி எண்ணற்ற புகழ் கொண்ட இந்த மீனாட்சியம்மன் கோயிலில் சில மாதங்களுக்கு முன் நீர் புகுந்தது. தற்போது நெருப்பு பிடித்துள்ளது. இதன்மூலம் மக்களில் சிலர் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். அப்படி என்னென்ன இந்த கோயிலில் மறைந்துள்ளன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

வரலாறும், புராணமும்!

வரலாறும், புராணமும்!

கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதாக புராணம் கூறுகிறது. அப்போது கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்த மன்னன் முதலில் மீனாட்சி அம்மன் கோயிலையும், பின் மதுரை நகரத்தையும் நிர்மாணித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் கோயிலின் பல்வேறு அங்கங்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டிருப்பதாக வரலாறு சொல்கிறது.

படம் : Surajram

கோயில் அமைப்பு

கோயில் அமைப்பு

15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் 8 கோபுரங்களையும், 2 விமானங்களையும் கொண்டுள்ளது. இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. மேலும் ஒரு ஏக்கர் பரப்பளவில் கோயில் வளாகத்தில் பொற்றாமரைக்குளமும் அமையப்பெற்றுள்ளது.

படம் : Bernard Gagnon

கோபுரங்கள்

கோபுரங்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொத்தம் 10 கோபுரங்கள் உள்ளன. இவற்றில் 1559-ஆம் ஆண்டு கட்டப்பட்ட தெற்கு கோபுரம் 170 அடி உயரத்தில் உயரமான கோபுரமாக திகழ்கிறது. மேலும் கிழக்கு பக்கத்தில் உள்ள கோபுரம் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதுடன் கோயிலின் பழமையான கோபுரமாகவும் அறியப்படுகிறது.

படம் : Gourav mainali

கருவறை விமானம்

கருவறை விமானம்

இக்கோயிலின் கருவறை விமானமானது, இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிம்ம உருவங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

படம் : BishkekRocks

பொற்றாமரைக்குளம்

பொற்றாமரைக்குளம்

மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்திலுள்ள பொற்றாமரைக்குளம் செவ்வக வடிவில்,165 x 120 அடி (37 மீட்டர்) பரப்பளவில் அமைந்துள்ளது. பொன் + தாமரை + குளம் என பொருள்படும் வகையில் பொற்றாமரைக்குளம் என்று இது அழைக்கப்படுகிறது. இந்தக் குளத்திற்கு ஞான தீர்த்தம், முக்தி தீர்த்தம், உத்தம தீர்த்தம், ஆதி தீர்த்தம் போன்ற பெயர்களும் வழங்குகின்றன. இதன் வடக்கு கரையில் உள்ள தூண்களில் சங்கப் புலவர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. அதோடு தென்கரை மண்டபச் சுவர்களில் திருக்குறள் பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச் சுவர்களில் திருவிளையாடல் புராணக் கதைகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன. பல நூறு வருடங்களுக்கு முன் இந்த பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.

படம் : Mohan Krishnan

கவின் கொஞ்சும் மண்டபங்கள்

கவின் கொஞ்சும் மண்டபங்கள்

அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கவின் கொஞ்சும் மண்டபங்கள் கோயிலில் அமைந்துள்ளன. அதோடு கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபத்தில் தற்போது சிறு வணிகக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக எட்டு சக்தி (அஷ்டசக்தி) மண்டபம் உள்ளது. இவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் 985 தூண்கள் கொண்டு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் அழகுடனும், மிளிர்ச்சியுடனும் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

படம் : Bernard Gagnon

ஆயிரங்கால் மண்டபம்

ஆயிரங்கால் மண்டபம்

கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் ஆயிரங்கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் நேராக இருப்பது போன்ற தூண்களைக் கொண்ட இந்த மண்டபத்தில் 985 தூண்கள் அமைந்துள்ளன.

நடராஜர் சிலை

நடராஜர் சிலை

மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் குடிகொண்டுள்ள சிவபெருமான், சொக்கநாதர் என்ற பெயரிலும் அறியப்படுகிறார். மற்ற எல்லா சிவத்தலங்களிலும் வலது காலை தூக்கி தாண்டவமாடும் கோலத்தில் இருக்கும் நடராஜர் சிலை இங்கு இடதுகாலை தூக்கி ஆடும் தோற்றத்தில் காணப்படுகிறது.

படம் : Rengeshb

மீனாட்சி அம்மன் விக்கிரகம்

மீனாட்சி அம்மன் விக்கிரகம்

கருவறையில் மீனாட்சி அம்மன் இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறார். இந்த விக்கிரகம் மரகதக்கல்லால் ஆனது என்பதால் மரகதவல்லி என்ற பெயரிலும் மீனாட்சி அம்மன் அறியப்படுகிறார். மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்ற பெயர்களிலும் அம்மன் அழைக்கப்படுகிறார்.

படம் : Thiagarajan Kannan

விஷ்ணு நடத்திவைத்த திருமணம்!

விஷ்ணு நடத்திவைத்த திருமணம்!

விஷ்ணு பகவான் தன் தங்கை மீனாட்சியை சிவபெருமானுக்கு மணமுடித்து வைக்கும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

படம் : Suresh, Madurai

17-ஆம் நூற்றாண்டு ஓவியம்

17-ஆம் நூற்றாண்டு ஓவியம்

கோயில் சுவர்களில் காணப்படும் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவர்ச் சித்திரம்.

படம் : BishkekRocks

கோபுர சிற்பங்கள்

கோபுர சிற்பங்கள்

கோயில் கோபுரத்தில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள்.

படம் : Mohan Krishnan

மகாபாரத காட்சி

மகாபாரத காட்சி

அர்ஜுனனும் அவனுக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ணரும் ரதத்தில் செல்வது போன்ற மகாபாரத காட்சி.

படம் : Bernard Gagnon

கோயில் யானை

கோயில் யானை

மீனாட்சி அம்மன் கோயில் யானை வெளிநாட்டு பெண் ஒருவருக்கு ஆசிர்வாதம் செய்யும் காட்சி.

படம் : Vinoth Chandar

அப்பர், சம்பந்தர், சுந்தரர்

அப்பர், சம்பந்தர், சுந்தரர்

நாயன்மார்களில் சிறப்புடன் அறியப்படும் அப்பர், சம்பந்தர் மற்றும் சுந்தரரின் சிலைகள்.

படம் : Adam63

விநாயகர் சந்நிதி

விநாயகர் சந்நிதி

விநாயகர் சந்நிதியில் காட்சியளிக்கும் பிள்ளையாரும், வழிபடும் பக்தர்களும்.

படம் : BishkekRocks

இருள் இனிது!

இருள் இனிது!

கோயில் முழுக்க மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படிருப்பதும், அதன் பிம்பம் பொற்றாமரைக்குளத்தில் விழுவதும் என மனதை கொள்ளைகொள்ளும் காட்சி.

படம் : Rengeshb

உண்டியல்

உண்டியல்

வேண்டுதலுக்காக கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தும் மூதாட்டி.

படம் : Jorge Royan

கோயிலின் மாதிரி வடிவம்

கோயிலின் மாதிரி வடிவம்

மீனாட்சி அம்மன் கோயிலின் மாதிரி வடிவம் பக்தர்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

படம் : Iramuthusamy

வெளிநாட்டு சிறுவன்

வெளிநாட்டு சிறுவன்

பொற்றாமரைக்குளத்தின் படிகளில் நம் பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டியில் காட்சியளிக்கும் வெளிநாட்டு சிறுவன்.

படம் : எஸ்ஸார்

இராவணன்

இராவணன்

கைலாயத்தை தூக்கும் இராவணனின் அற்புத சிற்பம்.

படம் : Leninltk wiki

ராஜஸ்தானிய யாத்ரிகர்கள்

ராஜஸ்தானிய யாத்ரிகர்கள்

கோயில் நடை திறப்பதற்காக காத்திருக்கும் ராஜஸ்தானிய யாத்ரிகர்கள்.

படம் : russavia

பிரார்த்தனை

பிரார்த்தனை

கோயிலில் உள்ள அனுமான் சந்நிதியில் பிரார்த்தனை செய்யும் பெண்.

படம் : BishkekRocks

நுழைவாயில்

நுழைவாயில்

கோயிலின் நுழைவாயிலில் திரளாக காணப்படும் பக்தர்கள்.

படம் : BishkekRocks

ஏரியல் கோணக் காட்சி

ஏரியல் கோணக் காட்சி

மீனாட்சி அம்மன் கோயிலின் ஏரியல் கோணக் காட்சி.

படம் : எஸ்ஸார்

நகரமும், கோயிலும்!

நகரமும், கோயிலும்!

மதுரை நகர வீடுகளோடு சேர்ந்து காட்சிதரும் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள்.

படம் : Bernard Gagnon

நந்தி

நந்தி

கோயிலில் உள்ள நந்தி மண்டபமும், கொடிமரமும்.

படம் : brad.coy

அனுமார் சிலை

அனுமார் சிலை

கோயிலில் உள்ள அனுமார் சந்நிதியும், அனுமார் சிலையும்.

படம் : Vi1618

யானைத் தந்த சிலைகள்

யானைத் தந்த சிலைகள்

கோயில் வளாகத்தில் காணப்படும் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட சிலைகள்.

படம் : Adam63

பிரம்மா

பிரம்மா

கோயில் கோபுரங்களில் காணப்படும் பிரம்மாவின் சிலை.

படம் : Purushothaman

காளி

காளி

மீனாட்சியம்மன் கோயிலில் காணப்படும் மகாகாளியின் வடிவம்.

படம் : Arunankapilan

பேட்டரி கார்

பேட்டரி கார்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி வருவதற்காக மின்கலத்தில் இயக்கப்படும் வண்டி.

படம் : Theni.M.Subramani

தேர்த் திருவிழா

தேர்த் திருவிழா

தேர்த் திருவிழாவில் இழுத்துச் செல்லப்படும் தேரும், திரளான பக்தர்களும்.

படம் : Military karthick

ஊர்த்துவதாண்டர்

ஊர்த்துவதாண்டர்

மீனாட்சியம்மன் கோயிலில் காணப்படும் ஊர்த்துவதாண்டவரின் அழகிய சிற்பம்.

படம் : Arunankapilan

சரபேசுவரர்

சரபேசுவரர்

மஞ்சள் கோலத்தில் காட்சியளிக்கும் சரபேசுவரர் சிலை.

படம் : Iramuthusamy