» »மசான்ஜோர் அணை பற்றிய இந்த விசயங்கள் தெரியுமா?

மசான்ஜோர் அணை பற்றிய இந்த விசயங்கள் தெரியுமா?

Written By: Udhaya

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா நகரிலிருந்து 31 கி.மீ தூரத்தில் இந்த மசான்ஜோர் அணை அமைந்துள்ளது. தும்கா-சிருரி சாலையில் அமைந்திருக்கும் இந்த அணைப்பகுதி பேருந்து போக்குவரத்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. இது இந்த பகுதியின் சிறந்த சுற்றுலாத்தளமாகும். பொதுவாகவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிறைய சுற்றுலாத் தளங்கள் காணப்படுகின்றன. கௌலெஸ்ஹ்வரி தேவி கோயில், நட்சத்திரா வான், நவ்லேகா கோவில், இஸ்கோ கிராமம், நர்கிஸ்தான் கோவில், கேலாக்ஹக் அணை, நித்யகாளி மந்திர், உஸ்ரி நீர்வீழ்ச்சி, மாயாதுங்கிரி கோயில் என நிறைய பகுதிகள் கட்டாயம் பார்க்கவேண்டிய பட்டியலில் உள்ளன. இவற்றுடன் இன்னும் ஒரு இடம் முக்கியமாக இருக்கிறது அதுதான் இந்த அணைக்கட்டு,.

மசான்ஜோர் அணை பற்றிய இந்த விசயங்கள் தெரியுமா?

எப்படி செல்வது

விமானம் மூலமாக பயணிக்க விரும்புபவர்கள் குறைந்த பட்ச கட்டணம் 4 ஆயிரம் ரூபாய் முதல் வசதிகளுக்கேற்ப பயணிக்க முடியும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிர்ஸா முன்டா விமான நிலையம், சோனாரி விமான நிலையம், தியோகர் விமான நிலையம், தன்பாடு விமானநிலையம் பொக்காரோ விமான நிலையம் ஆகியவை உள்ளன.

ரயில் மூலமாக பயணிக்க விரும்புபவர்கள் சென்னையிலிருந்து இயங்கும் ரயிலில் ராஞ்சி வந்தடைய முடியும். இதற்கிடைப்பட்ட தூரம் 1616கிமீ ஆகும். தன்பாட் எக்ஸ்பிரஸ் எனும் அதிவிரைவு ரயில் சென்னை பெரம்பூரிலிருந்து ராஞ்சி வரை இயக்கப்படுகிறது. இரவு 3 மணி 37 நிமிடங்களுக்கு இயக்கப்படும் இந்த ரயில் அடுத்த நாள் காலை 8.40 மணிக்கு அங்கு சென்றடைகிறது.

மசான்ஜோர் அணை பற்றிய இந்த விசயங்கள் தெரியுமா?

கட்டிடக்கலை

கனடா நாட்டு கட்டிடக்கலை அம்சங்களின்படி அமைக்கப்பட்டிருப்பதால் கனடா டேம் அல்லது பியர்சன் டேம் என்றும் இந்த அணை அழைக்கப்படுகிறது. 16650 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் இந்த அணை 155 அடி உயரத்தையும் 2170 அடி நீளத்தையும் கொண்டுள்ளது. 500,000 கன அடி நீரை இந்த அணைப்பகுதியில் தேக்கமுடியும். இந்த அணைப்பகுதிக்கு அருகிலேயே தில்பாரா எனும் மற்றொரு தடுப்பு அணையும் அமைந்திருக்கிறது. இந்த இடமும் ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த தடுப்பு அணை 1013 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்டு காட்சியளிக்கிறது. வாடகை சுற்றுலா வாகனங்கள் மூலம் சுற்றுலாப்பயணிகள் இந்த அணைப்பகுதியை வந்தடையலாம். மலைகள் மற்றும் ஆறு போன்ற ரம்மியமான எழில் அம்சங்கள் நிறைந்திருக்கும் இந்த அணைப்பகுதியில் பல்வேறு பொழுதுபோக்குகளுக்கும் குறைவில்லை. சுற்றுலாப்பயணிகள் இங்கு நீச்சல் மற்றும் பாறையேற்றம் போன்ற பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஈடுபடலாம். தங்குவதற்கு வசதியாக மயூரக்ஷி பவன் பங்களா மற்றும் இன்ஸ்பெக்ஷன் பங்களா போன்றவை இந்த அணைத்தேக்க பகுதியில் அமைந்திருக்கின்றன.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

பாபா சுமேஷ்வர் நாத்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முக்கியமான ஆன்மீக சுற்றுலா தலமாக அறியப்படும் தும்கா நகரம் சரையாஹாத் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த பாபா சுமேஷ்வர் நாத் கோயில், இப்பகுதியில் உள்ள முக்கியமான வழிபாட்டுத்தலமாகும். இது தும்கா நகரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ளது. பாபா சுமேஷ்வர் நாத் தலத்தில் வீற்றிருக்கும் பிரம்மாண்டமான சிவன் கோயிலுக்கு தினமும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர். திருவிழாக்கள் மற்றும் திருநாட்களின் போது உள்ளூர் மக்கள் திரளாக இந்த கோயிலுக்கு விஜயம் செய்து வழிபடுகின்றனர். மஹாசிவராத்திரி திருநாள் இக்கோயிலில் விமரிசையான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. சிரவண மாதத்தின் போதும் இங்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். ஹிந்து நம்பிக்கைகளின்படி சிரவண மாதம் சிவபெருமானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. புனித கங்கை நீரால் சுமேஷ்வர்நாதருக்கு செய்யப்படும் அபிஷேகம் மற்றும் பூஜைச்சடங்குகள் போன்றவை இக்கோயிலின் முக்கிய அம்சங்களாக பக்தர்களால் தரிசிக்கப்படுகின்றன.

மசான்ஜோர் அணை பற்றிய இந்த விசயங்கள் தெரியுமா?

Skmishraindia

பாபா பாசுகிநாத் தாம் தும்கா மாவட்டத்திலுள்ள முக்கியமான சுற்றுலா தலமாக புகழ் பெற்றுள்ளது. ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் இங்கு நடைபெறும் ஷ்ரவண் மேளா திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகா தருகின்றனர். இங்கு வருகை தந்து விழாவில் கலந்து கொண்டால், வேண்டியது அப்படியே நடைபெறும் என்பது தொன்நம்பிக்கை ஆகும். அச்சமயம் வெளிநாட்டுப்பயணிகளையும் இங்கு அதிக அளவில் பார்க்க முடியும். தெருக்களில் அங்கப்பிரதட்சணம் செய்தபடி வருவதும் பக்தர்களின் சடங்கு வழக்கமாக பின்பற்றப்படுகிறது. இந்த பாபா பாசுகிநாத் தாம் ஸ்தலத்திற்கு வருகை தரும் ஆன்மீக பயணிகள் தேவகர் எனும் இடத்தில் உள்ள வைத்யநாத் ஜோதிர்லிங்க கோயிலுக்கும் பயணம் மேற்கொள்ளும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

எப்படி அடையலாம்

தும்கா-தேவ்கர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த சுற்றுலா தலம் ஜஸிதிஹ் ரயில் பாதைக்கு அருகில் இருப்பது பயணிகளுக்கு வசதியாக உள்ளது. பாசுகிநாத் மற்றும் ஜம்தரா ரயில் நிலையங்களில் இறங்கி இந்த ஸ்தலத்திற்கு வரலாம். விமான மார்க்கமாக பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் ராஞ்சி விமானநிலையம் வழியாக இங்கு வரலாம்.

Read more about: travel temple jharkhand

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்