» »மனித ரத்தம் கொண்டு பூசை செய்யும் அமானுஷ்ய கோயில் பற்றி தெரியுமா?

மனித ரத்தம் கொண்டு பூசை செய்யும் அமானுஷ்ய கோயில் பற்றி தெரியுமா?

Written By: Udhaya

நரபலி கொடுப்பதை நாம் பல கதைகளில் கேட்டிருப்போம். ஏன் சினிமாக்களில் கூட கண்டிருப்போம்.

நம் வாழ்வில் பல கோயில்களில் கோழி, ஆடு போன்றவற்றை பலி கொடுத்து விழா கொண்டாடுவார்கள். அதன் ரத்தத்தை வைத்து இறைவனுக்கு பூசை செய்வார்கள். ஆனால் மனித ரத்தத்தை வைத்து பூசை செய்யும் கோயிலை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா அதுவும் இந்த காலத்தில்..... இந்தியாவில்....

 மேற்கு வங்கத்தில்

மேற்கு வங்கத்தில்

மேற்கு வங்க மாநிலம் கல்கத்தா அருகே அமைந்துள்ளது போராதேவி கோயில். இது அந்த பகுதியில் சக்தி வாய்ந்த கோயிலாக பார்க்கப்படுகிறது.

 500 வருடங்களாக

500 வருடங்களாக


மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கிணங்க, கடந்த சில வருடங்களாக இந்தியாவில் பழக்கவழக்கங்கள் பல மாறிக்கொண்டே வருகின்றன. ஆனால் இந்த கோயிலில் 500 வருடங்களாக இன்றும் ஒரு பழக்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

 இந்தியாவில் பலி பூசை

இந்தியாவில் பலி பூசை

இந்தியாவில் பல கோயில்களில் பலியிட்டு பூசை செய்வது வழக்கம்தான். அவர்கள் ஆடு, கோழி சில கோயில்களில் பன்றியையும் பலியிட்டு இறைவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.

 மனித ரத்தம்

மனித ரத்தம்


இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் மனித ரத்தத்தை வைத்து பூசை செய்யும் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. இது கேட்பதற்கு பயங்கரமாகவும், திகிலாகவும் இருக்கும்.

 திருவிழா கோலம்

திருவிழா கோலம்

இந்த பலி சமயத்தில் ஊரே திருவிழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கும்

 ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உற்சாகத்தில் திளைத்திருப்பர்.

 அந்த நேரம் வந்ததும்

அந்த நேரம் வந்ததும்

பலி இடுவதற்கான நேரம் வந்ததும் பூசாரி ஒரு குறியீடு தருவார். அதன் பின்னர் சிறுவர்கள், பெண்களெல்லாம் அங்கிருந்து புறப்பட்டுவிடுவார்கள்.

 அஷ்டமி இரவு

அஷ்டமி இரவு

அஷ்டமி இரவு வந்ததும் பூசாரி கோயிலின் கதவுகள் அனைத்தையும் மூடிவிடுவார்கள்.

 போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் பாதுகாப்பு

அடைக்கப்பட்ட கதவுகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும்.

 ஒரே வெட்டாக தலையை துண்டாக்கும் பூசாரி

ஒரே வெட்டாக தலையை துண்டாக்கும் பூசாரி

அங்கு அரிசியால் செய்யப்பட்ட பொம்மையின் தலையை ஒரே வெட்டாக வெட்டுவார் பூசாரி. அதில் 3 சொட்டுகள் மனித ரத்தம் இடப்படும். அது பெரும்பாலும் பூசாரி அல்லது வேண்டியவரின் ரத்தமாக இருக்கும்.

ஏன் இந்த விசித்திர பூசை

ஏன் இந்த விசித்திர பூசை


இப்படி விசித்திரமாக பூசை நடத்தினால் மட்டுமே அவர்களது வேண்டுதல் நிறைவடையும் என்கிறார்கள் அந்த பூசாரிகள்.

 பக்தர்கள்

பக்தர்கள்


இந்த பூசையை காண அக்கம்பக்கத்திலிருந்து மட்டுமல்லாமல், அசாம் , திரிபுரா மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

 ஆரம்ப காலத்தில்

ஆரம்ப காலத்தில்

ஆரம்ப காலத்தில் மனிதர்களை பலி கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதன்பின்னர் நரபலிக்கு பதில் நரன் ரத்தம் மட்டும் காணிக்கையாக அளிக்கப்படுகிறது.

Read more about: travel, temple
Please Wait while comments are loading...