Search
  • Follow NativePlanet
Share
» »நீங்க கேட்ஜெட் ப்ரியரா ? அப்ப இதப் படிங்க!!

நீங்க கேட்ஜெட் ப்ரியரா ? அப்ப இதப் படிங்க!!

இது பயணக் கட்டுரையல்ல; ஒரு ஊரின் சுற்றுலா விஷேசத்தைப் பற்றிய கட்டுரையும் அல்ல; மாறாக ஜப்பானில் வேகமாக பரவி வரும் ஒரு கலாச்சார இயக்கத்தைப் பற்றி சில வார்த்தைகள்.

60'கள், 70'களில் ஹிப்பி கலாச்சாரம் அமெரிக்க இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது இலக்கியம், சினிமாவிலும் பிரதிபலித்தது. அன்றாட வாழ்வில் சலிப்படைந்தவர்கள், போரை வெறுத்து மனிதநேயத்தை வலியுறுத்த விரும்பியவர்கள், கல்யாணம் போன்ற சடங்குகளில் நம்பிக்கையில்லாதவர்கள் ஆகியோர் ஒரு குழுவாய் சேர்ந்து தொள தொள வகை ஆடைகளில், நீளமாய் முடி வளர்த்துக் கொண்டு நாடு நாடாக‌ பயணிக்கத் தொடங்கினர். ஆனால், இந்த இயக்கம் ரொம்ப வருடங்கள் நிலைக்கவில்லை. 70'களின் இறுதியில் புதிய இளைஞர் கூட்டம் வர வர, தொழில்நுட்பம் வளர வளர பெரும்பாலான இளைஞர்கள் தங்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதில் கவனம் செலுத்த ஆரம்பிக்க, ஹிப்பி இயக்கம் மெல்ல மெல்ல மறைந்து போனது.

அதன் பிறகு, கம்யூனிசம் வீழ்ந்தது; சோவியத் யூனியன் உடைந்தது. 90'களுக்குப் பிறகு சந்தைப் பொருளாதாரம், நுகர்வு கலாச்சாரம், தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் எல்லாம் சேர்ந்தபிறகு தனி நபர் சார்ந்த விருப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. விளைவு : குழு சார்ந்து இயக்கங்கள் பெரிதாக தோன்றவில்லை.

ஆனால், கடந்த ஓரிரு வருடங்களாக மினிமலிசம் என்ற ஒரு வகை கலாச்சாரம் ஜப்பானிய இளைஞர்களிடம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதாவது தேவையில்லாத பொருட்களைக் கடாசிவிட்டு சில செட்டு துணி மணிகளோடு, அதிக உடைமைகள் இல்லாமல் எளிய வீடுகளில் பல இளைஞர்கள் நிம்மதியாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதையும்விட‌ சுவாரஸ்யம், அதிக கேட்ஜட்டுகளை வாங்கி குவிக்கும் நபர்களோடு தங்களின் நட்பைகூடத் துண்டித்துக் கொள்கின்றனர்.

இப்படி வாழ்வதால் தங்களுக்கு பயணம் செய்வதற்கு, ந‌ண்பர்களோடு சேர்ந்திருப்பதற்கு, முக்கியமாக, தேவையில்லாத வீட்டு வேலைகளை செய்யாமல் இருப்பதற்கு, என்று பல நன்மைகள் இருப்பதாக கூறுகின்றனர்.

இதற்கான முன்னுதாரணத்தை ஸ்டீவ் ஜாப்ஸ், ஜென் தத்துவம் ஆகியவற்றிலிருந்து எடுத்திருக்கின்றனர். இதில் இன்னொரு நல்ல விஷயமிருப்பதாகவும் பல மினிமலிஸ்ட்டுகள் சொல்கிறார்கள். அடிக்கடி நில‌நடுக்கம் ஏற்படுகிற‌ ஜப்பானில், இப்படி குறைந்த உடைமைகளோடு வாழ்வதால், தேவையில்லாத விபத்துக்களைத் தவிர்க்க முடிகிறதென்று.

More News

    Read more about: minimalism japan culture hippie zen
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+