» »கோவா போறவங்க மறக்காம இங்கேயும் போய்ட்டு வாங்க..!

கோவா போறவங்க மறக்காம இங்கேயும் போய்ட்டு வாங்க..!

Written By:

கோவா என்றாலே கடற்கரை, எங்கு பார்த்தாலும் மதுக்கடை, அனைவரும் விரும்பும் காலநிலை, அட்டகாசமான உள்நாட்டு, கலர்கலரான வெளிநாட்டு பெண்கள். இளசு முதல் பெருசு வரை வருடம் முழுக்க திட்டம் தீட்டி சுற்றுலா போகும் இந்தியாவின் சொக்க பூமி. ஆரம்போல் கடற்கரை முதல் போலம் கடற்கரை வரை விரிந்து கிடக்கும் கோவாவிற்கு நாம் சென்று சுற்றிப்பார்க்க பெரிதும் விரும்புவது கடற்கரைகளையும், வானுயந்த ஆலயங்களையுமே. ஆனால், இவையெல்லர்ம தவிர்த்து புதிதாக இன்னும் பல தலங்களை கோவாவில் காண விரும்பினால் பாரம்பரியமும், வரலாறும் சுமந்து நிக்கும் கோட்டைகளுக்கு எல்லாம் சென்று வரலாம். சரி வாருங்கள், அப்படி கோவாவில் பிரசிதிபெற்ற கோட்டைகள் எது, எப்படிச் செல்வது என பார்க்கலாம்.

சப்போரா கோட்டை

சப்போரா கோட்டை


கோவாவில் வாகத்தோர் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது சப்போரா கோட்டை. போர்த்துகீசிய கட்டிடக்கலையும், பாசி படர்ந்த கோட்டையின் பச்சை வண்ண எழில் தோற்றமும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும் அம்சங்கள். 1617-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோட்டை சற்று சிதைவுற்று இருந்தாலும் இன்றும் அந்த காலங்களில் நடந்த போர்களின் சாட்சியாக எஞ்சியுள்ளன. போர்த்துகீசியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே ஷாப்புரா என்ற ஒரு ஒப்பந்தம் இருந்து வந்தது. அந்த ஒப்பந்தத்தின் பேரிலேயே இந்தக் கோட்டை கட்டப்பட்டது. இதன் காரணமாகவே இந்தக் கோட்டை ஷாப்பூர் கோட்டை என்ற மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோட்டையை 1892-ஆம் ஆண்டில் போர்த்துகீசியர்கள் கைவிட்டாலும், போர் காலங்களில் பயன்படுத்தப்பட்ட சுரங்கப் பாதைகள் இன்றும் இங்கு இருப்பதை பயணிகள் பார்க்கலாம்.

Kumars

எப்படி அடைவது ?

எப்படி அடைவது ?


சப்போரா கோட்டை வடக்கு பார்டேஷ் மாவட்டத்தில் உள்ள வாகாத்தோர் கடற்கரைக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது. அதோடு 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாபுசா நகரிலிருந்து சப்போரா கோட்டையை சுலபமாக அடைந்து விடலாம். பாகா, கலங்கூட், பனாஜி, வாஸ்கோ என்று கோவாவின் எந்த பகுதியிலிருந்தும் வாடகை கார்கள் மூலம் சப்போரா கோட்டைக்கு எந்த சிரமமும் இன்றி வந்து சேரலாம்.

Gayatri Priyadarshini

அர்வேலம் குகைகள்

அர்வேலம் குகைகள்


கோவாவில் உள்ள சக்வேலிம் நகரம் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கக் கூடிய தலங்களில் ஒன்று. இந்த சக்வேலிம் நகரத்திற்கு மாற்று வழியில் வருவீர்களானால் நீங்கள் சிறப்பு வாய்ந்த அர்வேலம் குகைகளை அடைவீர்கள். சின்குவேரிம் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இந்த குகைகளில் பாண்டவர்கள் தங்களின் 12 வருட வனவாசத்தின் போது தங்கி இருந்ததாக புராணச் செய்திகள் கூறுகின்றன. இதனால்தான் இந்த குகைகள் பாண்டவ குகைகள் என்ற மற்றொரு பெயரை பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. அர்வேலம் குகைகள் 6-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை என கூறப்படுகிறது. அர்வேலம் குகைகளின் புராணச் சிறப்பு காரணமாகவும், குகையின் செவ்வண்ண அழகும், இயற்கையும் மற்ற சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்துக்கொண்டுதான் இருக்கின்றன.

Hemant192

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


அர்வேலம் குகைகளை அடைவதற்கு ஒரு நெடுந்தூரப் பயணத்துக்கு தயாராக இருக்க வேண்டும். இந்த குகைகள் சக்வேலிம் நகருக்கு அருகாமையில் இருப்பதோடு, வாஸ்கோ, மார்கோ, பனாஜி போன்ற நகரங்களுக்கு கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது. மேலும் இந்த குகைகளுக்கு செல்ல கோவாவில் வாடகைக் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது.

Kavya Rastogi

டிராக்கோல் கோட்டை

டிராக்கோல் கோட்டை


சாவாந்த்வாடியை ஆண்ட கேம் சாவந்த் போன்ஸ்லே மன்னரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு வெகு நாள் வரை அவருடைய ஆளுமையின் கீழேயே இருந்து வந்தது டிராக்கோல் கோட்டை. டிராக்கோல் கோட்டை மற்ற கோவா பகுதிகளை போல அல்லாமல் வணிகமயமாக்களின் பிடியிலிருந்து எப்போதும் விலகியே இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாகவே இதன் இயற்கை அழகை ரசிப்பதற்காக இங்கு வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்தக் கோட்டை குன்றின் உச்சியில், டிராக்கோல் நதியின் முகத்துவாரத்தில் அமைந்திருக்கும் பேரழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மேலும் இந்தக் கோட்டையின் எழிலை பரிபூரணமாக பார்த்து ரசிக்க நீங்கள் கோடை காலத்தில் இங்கு சுற்றுலா வருவதுதான் சிறப்பாக இருக்கும். தெற்கு கோவா பகுதிகளான பனாஜி, வாஸ்கோ போன்ற நகரங்களிலிருந்து டிராக்கோல் கோட்டைக்கு வருவது சற்று நீண்ட பயணமாக உங்களுக்கு தோன்றும். எனினும் வாடகை கார்களின் மூலம் கோட்டையை சுலபமாக அடைய முடியும். இதுதவிர கேண்டலிம், பாகா, கலங்கூட் உள்ளிட்ட வடக்கு கோவா பகுதிகளிலிருந்து வருபவர்கள், பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கோட்டைக்கு வந்து சேரலாம்.

Goaholidayhomes

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்