Search
  • Follow NativePlanet
Share
» »காவு வாங்கும் மர்மப் பிரதேசம்... தில் இருந்தா போய்தான் பாருங்களேன்..!

காவு வாங்கும் மர்மப் பிரதேசம்... தில் இருந்தா போய்தான் பாருங்களேன்..!

ஊருக்கு ஒதுக்குப் புறமாய் ஒரு பாழடைந்த பங்களா இருந்தாலே அந்தப்பக்கமா போறதுக்கே நம்ம யோசிப்போம். ஒரு ஊரே மர்மமாய், பாழடைந்து போய்க் கிடந்தால் எப்படி இருக்கும் ? ஏதோ ஹாலிவுட் பட பேய்க்கதை போல தோன்றும் இத்தகைய திகில் நகரங்கள் உலகெங்கும் நிறைய இருக்கின்றன. நமது சுவாரஸ்யத்தையும், அச்சத்தையும் கிளறும் நகரங்கள் நம் நாடு முழுக்க உள்ளது. மர்மமே வடிவான இந்த மர்ம பூமியில் அடங்கியுள்ள நிகழ்வுகள் பலவற்றில் குறையேதும் இன்று மர்மங்களும் அமானுஷ்யங்களும் நிறைந்து கிடக்கின்றன. அதில் பல அவ்வப்போது விஞ்ஞானத்தால் தீர்க்கப்படுகின்றன. சிலவை நூற்றாண்டு கடந்தாலும் விடைதெரியா புதிராகவே இருக்கும். இதற்கு உதாரணம் நீண்ட நாள் மர்மப் பாதையிலேயே பயணிக்கும் பெர்முடா முக்கோணம். வேற்றுகிரக வாசிகளின் வேலையா, பேய்களின் தாக்குதலா என இன்றளவும் கண்டுபிடிக்க முடியாத மர்மங்கள் இங்கே நிகழ்கிறது. பெரும்பாலும் எல்லாருக்கும் பேய் பற்றிய பயம் இருக்கிறது. சரி, நம்ம ஊரில் எங்கவெல்லாம் பேய்களும், அமானுஷ்யங்களும் நிறைந்துள்ளது என இக்கட்டுரையில் பார்க்கலாம் வாங்க.

பறவைகளின் தற்கொலை

பறவைகளின் தற்கொலை

அசாம் மாநிலத்தின் சசார் பிரதேசத்தில் இருக்கிற இடம் ஜதிங்கா.. இதுதான் இந்தியாவிலேயே பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்கிற இடம். மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான்.. குடும்பத்தோடவும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.. தற்கொலைக்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன.. அது மனிதனுக்கு தெரிகிறது..ஆனால் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொள்ளும் என்றால் நம்புவீர்களா? உலகில் இன்னும் தெளிவுபடுத்தப்படுத்தப்படாத பல மர்மங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில்தான் செப்டம்பர் முதல் நவம்பர் வரை இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடைபெறும் "பறவைகள் தற்கொலை"யும் புரியாத புதிராக இருக்கிறது. மிகச் சரியாக ஒவ்வொரு செப்டம்பர், நவம்பர் மாதத்தில் கூட்டம் கூட்டமாக பறவைகள் பறந்தபடியே இறந்து போய்விடுகின்ற மர்மத்துக்கு விடை கிடைக்கவில்லை.

ராஜஸ்தானின் அத்திப்பட்டி, குல்தாரா

ராஜஸ்தானின் அத்திப்பட்டி, குல்தாரா

குல்தாரா எனும் கிராமம் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜெய்சால்மர் எனும் மாவட்டத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. இந்த கிராமமானது 85 குக்கிராமங்களை ஒன்றிணைந்து இயங்கி வந்த இடமாக இருந்துள்ளது. 12 -ம் நூற்றாண்டில் இருந்து இந்த கிராமம் இயங்கி வந்துள்ளதை வரலாற்று தகவல்களைக் கொண்டு அறியமுடிகிறது. ஆனால், ஒருகட்டத்தில் திடீரென இங்கு வாழ்ந்துவந்த குக்கிராம மக்கள் காணாமல் போயுள்ளனர். இதற்கு காரணம் பேய், சாபம் என பல காரணங்கள் கூறப்படுகின்றன. 1825-ல் தான் இவர்கள் காணாமல் போயிருக்கின்றனர் என அறியப்பட்டது. இந்த கிராமத்திலும், சுற்றி இருந்த பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் எங்கு சென்றனர்? என்ன ஆனார்கள் என எந்த தடயமும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Suryansh Singh

 குழந்தைகளைக் கண்டால் பாம்பு நடங்குது...

குழந்தைகளைக் கண்டால் பாம்பு நடங்குது...

பாம்புகளைக் கண்டால் படையும் நடங்கும் என்பது பழமோழி. ஆனால், அந்த பாம்பையே நடுங்க வைக்கும் கிராமம் தான் செட்பல். என்னதான் கிழக்கு ஆசியாவில் பாம்புகளை முக்கிய உணவாக பாபம்புகளை எடுத்துக்கொண்டாலும் நம்ம நாட்டில் பாம்பு என்றாலே ஒடி ஒளிந்துவிடுவோம். ஆனால், சோலப்பூர் மாவட்டத்தில் உள்ள செட்பல் கிராமத்தில் பிறந்த குழந்தை கூட பாம்புகளுடன் விளையாடுவது வியப்பில் ஆழ்த்துகிறது. இக்கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பாம்புகள் இருப்பதை காண முடியும். இதற்குக் காரணம் இங்குள்ள சக்திவாய்ந்த சித்தீஸ்வரர் சிவன் கோவில் என்கின்றனர் உள்ளூர்வாசிகள். இங்க யாருமே பாம்பு கடிச்சு உயிரிழக்கவில்லை என்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இது உண்மையிலேயே நல்ல பாம்புதான் போல...

Ranveig

துமாஸ் பீச்

துமாஸ் பீச்

குஜராத்தில் இருக்கும் துமாஸ் என்ற ஊரின் மக்கள் அங்கிருக்கும் பீச்சுக்கு செல்பவர்களை எச்சரிக்கிறார்கள். அந்த பீச்சில் ஆவிகளின் நடமாட்டமும், சிரிப்புக்குரல்களும், அலறல் சத்தமும் ஓயாமல் கேட்டுக்கொண்டிருப்பதாகவும், அங்கிருக்கும் நாய்களின் ஓயாத ஊளைச்சத்தம் உங்களுக்கான எச்சரிக்கை எனவும் கதைகள் நிலவுகின்றன. இந்துக்களின் ஈமச்சடங்குக்கள் அனைத்தும் இந்த பீச்சில் நடத்தப்படுவதால் இங்கு வீசும் காற்று முழுவதும் ஆவிகள் நிறைந்திருப்பதாகவே நம்பப்படுகிறது.

Rory MacLeod

ஆற்றுக்குள் மூழ்கும் அமானுஷ்யம்

ஆற்றுக்குள் மூழ்கும் அமானுஷ்யம்

புனித ரோஸரி தேவாலயம் கர்நாடகவில் உள்ள ஹஸன் செட்டிஹள்ளி சாலையிலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில் ஹேமாவதி அணைக்கு அருகில் தீவுபோல் ஆற்றில் உள்ளது. கரையிலிருந்து பார்க்கும்போது, ஒரு மூழ்கிய கப்பலைப் போல மேற்பகுதி மட்டும் தெரிகிறது. கோடை காலத்தில் ஆற்று நீர் வற்றிய பிறகே ஆலயத்தின் முழுத்தோற்றத்தையும காண முடியும். ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் நீரில் மூழ்கியபடியே இருக்கும் இந்த இந்த தேவாலயம் தெரியும் காலத்தில் கூட அமானுஷ்யம் நிறைந்த உருவங்கள் நடமாடுவதாக கூறப்படுகிறது. வெறும் எலும்புக்கூடு போன்ற தோற்றம் கொண்ட அழிந்த கட்டிடம் பகலில் சுற்றுலாத் தலமாக இருந்தாலும் இரவில் மர்மப் பகுதியாகத்தான் காட்சியளிக்கிறது.

ಪ್ರಶಸ್ತಿ

மர்மங்கள் நிறைந்த கூனி நதி

மர்மங்கள் நிறைந்த கூனி நதி

நதி எப்போதும் புனிதத்தின் அடையாளமாக பார்க்கப்படும் ஒன்று. எத்தனை பாவங்கள் செய்தாலும் நதியில் குளிக்கும்போது பாவங்கள் மூழ்கிவிடும் என்பது நம்பிக்கை. ஆனால் பாவங்களுக்கு பதில் மனிதர்களே மூழ்கினால்? ஆம் அப்படிப்பட்ட ஒரு நதிதான் கூனி. இந்தியாவின் டெல்லியில் உள்ள ரோகினி நகரில் தான் இந்த நதி பாய்கிறது. இந்த நதி மிகவும் ஆபத்தான ஒன்று என்றும் இந்த நதி ஒருவித அமானுஷ்ய தன்மையுடையது என்றும் கூறப்படுகிறது. அதன்படி இந்த நதியில் இறங்கியவர்கள் பலர் திரும்பி வந்ததில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீரில் இறங்குபவர்களை ஒரு வித அமானுஷ்ய சக்தி நீரினுள் இழுத்துகொள்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அதே வேளையில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் வருபவர்களும் நீச்சல் தெரியாதவர்களுமே இந்த கூனி நதியில் மூழ்கி இறந்துள்ளதாக மற்றொரு தரப்பினர் கூறுகின்றார். எனினும் இந்த நதியில் இறங்கும் மக்கள் எவ்வாறு இறக்கின்றனர் என்ற உண்மை காரணம் மட்டும் இதுவரை யாருக்கும் பதில் தெரியாத புதிராகவே உள்ளது.

Steve Byrne

 என்னையக்காப்பாத்துங்க...

என்னையக்காப்பாத்துங்க...

புனேயிலிருக்கும் ஷானிவர்வதா கோட்டையைப்பற்றி உலவும் தகவல் கேட்கும்போதே அமானுஷ்யமானதாகத்தான் தோன்றுகிறது. இந்தக்கோட்டையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 13 வயதான இளவரசர் ஒருவர் அவரது உறவினர் ஒருவரால் கொலை செய்யப்பட்டாராம். பல ராத்திரிகளில் அதுவும் பௌர்ணமி போன்ற இரவுகளில் நடு ராத்திரியில் இந்தக்கோட்டையிலிருந்து ஒரு சிறுவனின் அலறல் சத்தம் கேட்கிறதாம். சின்னஞ்சிறிய குரலில் என்னையக்காப்துங்க... என்னையக்காப்துங்க-ன்னு அலறும் அந்தக்குரல் கொலை செய்யப்பட்ட இளவரசருக்கு சொந்தமானதாக நம்பப்படுகிறது.

Kshitij Charania

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more