Search
  • Follow NativePlanet
Share
» »இறக்கையால் கதவைத் தட்டி கூப்பிடும் கழுகு! 2.0 பட பாணியில் மனிதர்களை கொல்லுதாம்!

இறக்கையால் கதவைத் தட்டி கூப்பிடும் கழுகு! 2.0 பட பாணியில் மனிதர்களை கொல்லுதாம்!

இறக்கையால் கதவைத் தட்டி கூப்பிடும் கழுகு! 2.0 பட பாணியில் மனிதர்களை கொல்லுதாம்!

முரா புக் எனும் கொஞ்சம் நம்மை பயமுறுத்தும் குகை ஒன்று மிசோரோம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது பற்றி படிக்க படிக்க கொஞ்சம் நமக்கே பீதி கிளம்புகிறது. இது ஒரு சுற்றுலாத் தளம் தான் என்றாலுமே இங்கு மாலைக்கு பின் யாரும் வருவதில்லை. அது ஏன் என்பதற்கான விடைதான் இந்த கட்டுரை. முக்கியமாக ரஜினி பட பாணியில் கொல்லும் கழுகு பற்றி ஒரு திகிலூட்டும் கதையும் தெரிந்துகொள்வோம்.

 மனிதனை துன்புறுத்தும் கழுகு

மனிதனை துன்புறுத்தும் கழுகு

இந்த குகை எதற்காக கட்டப்பட்டது என்று இந்த கிராம மக்களிடம் கேட்டால் அதற்கு ஒரு அதிர்ச்சி கரமான பதிலை தருகிறார்கள். மிசோரமின் சம்பை பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் படிப்பறிவு விகிதம் குறைவுதான் என்றாலும் மிகவும் வலிமையான உடலமைப்பைக் கொண்டவர்கள் இந்த மக்கள். அவர்களை பயமுறுத்தும் விசயம் ஒன்றுதான்.. அது ஒரு ராட்சத கழுகு

Dennis Sumrak

கழுகின் அட்டகாசம்

கழுகின் அட்டகாசம்


இந்த கிராமப் பகுதியில் ஒரு ராட்சத கழுகு ஒன்று சுற்றித் திரிந்ததாம். அது இங்குள்ள மனிதர்களை துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. மனிதனை பயமுறுத்தும் கழுகிடம் இருந்து தப்பிக்க கிராமவாசிகள் இங்கு 6 குகைகளை உருவாக்கியதாக கூறுகிறார்கள். உண்மையில் இது மனிதர்களால் கட்டப்பட்ட குகையாம். ஆனால் இது அச்சு அசலாக இயற்கையாக உருவானது போல காணப்படுகிறது.

Djambalawa

 கொடூர கழுகுக்கு பெயர் என்ன தெரியுமா

கொடூர கழுகுக்கு பெயர் என்ன தெரியுமா

இந்த கொடூரமான கழுகுக்கு கிராம வாசிகள் முரா என்று பெயரிட்டுள்ளனர். இந்த கழுகின் அட்டகாசத்தினால் சில சமயங்களில் உயிரிழப்பும் நேர்ந்துள்ளது. இதனால் அந்த கழுகிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த குகைக்குள் ஓடி ஒளிந்துக்கொள்வார்களாம்.

Juan lacruz -

 கழுகுன்னா சும்மா இல்ல பாஸ்

கழுகுன்னா சும்மா இல்ல பாஸ்


கழுகு என்னவோ விரட்டி விட்டால் ஓடி விடும்தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த கழுகு அப்படி அல்ல.. கொடூர குணம் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. இது மனிதனை ஓட ஓட விரட்டி கொத்துமாம். நிறைய காயம் பட்டு மனிதர்கள் மரணம் வரை சென்றுள்ளதாக தெரிகிறது.

Bogman

விசித்திர நடவடிக்கைகள்

வீட்டுக்கூரைகளின் மேல் அமர்ந்து தனது வாலால் சத்தமெழுப்பி, மனிதர்களை வெளியே கொண்டு வருமாம். பின் அவர்களை தன் கூரிய அலகுகளால் கொத்தி காயப்படுத்துகிறதாம் இந்த கழுகு. தினமும் இப்படி உயிர்பலிகள் ஏற்பட்டதால் இந்த கழுகிடமிருந்து தப்பிக்க கிராம மக்கள் இங்கு 6குகைகளை ஏற்படுத்தினார்களாம்.

எப்படி செல்வது

சம்பையில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ள இந்த இடத்தை தனியார் வாகனங்கள் மூலம் அடையலாம். மேலும் இந்த கழுகு பயமெல்லாம் தற்போது இல்லை என்று பலர் இந்த இடத்துக்கு செல்கின்றனர். ஆனாலும் ஒரு வேளை கழுகு வந்துவிடும் என உள்ளூர் மக்கள் அஞ்சுகிறார்கள். எனினும் இப்போதெல்லாம் கழுகு கண்ணில் பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்னர் பாறைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் மூலமாகவே இந்த கழுகு தகவல் வெளியில் வந்துள்ளது. ஆனாலும் பழங்குடியினர் இதை உண்மை என்றே சொல்கின்றனர்.

அட்சயப் பாத்திரம்


மிசோராமின் அட்சயப் பாத்திரம் என வழங்கப்படும் சம்பை, மியான்மர் மலைகளை மறைக்கும் வண்ணம் நிமிர்ந்து நிற்கும் தவறவிடக் கூடாத சுற்றுலாதளமாகும்.

அழகிய சம்பை


மியான்மர் மலைகளின் நீலநிற தோற்றத்தை அழகுற எடுத்துக்காட்டும் சம்பை, தன்னகத்தே கொண்டுள்ள பழங்கால சின்னங்களாலும், தொல்பொருள் கற்களாலும் தன் பழமையையும், வரலாற்றுப் பெருமையையும் பறைசாற்றியபடி இருக்கிறது.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

மிசோராமின் வேகமாக வளரும் ஊர்களில் ஒன்றான சம்பையின் வளர்ச்சிக்கு மியான்மரின் அருகாமையும் ஒரு காரணமாகும். இந்திய மியான்மர் வர்த்தகத்தில் சம்பை முக்கியப் பங்காற்றுகிறது.

இந்தியாவில் அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்களில் சம்பை ஒன்றாகும். சமப்பகுதிகள் முழுதும் அழகிய மியான்மர் மலைகளால் சூழப்பட்டுள்ளன. முர்லென் தேசியப் பூங்கா, முரா பூங்கா, ரி தில் ஏரி, தசியாமா செனோ நெய்ஹ்னா ஆகிய இடங்களுக்கு சம்பை புகழ்பெற்று விளங்குகிறது.

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X