Search
  • Follow NativePlanet
Share
» »மூர்த்தியில் மயங்க வைக்கும் மலைக் காட்டுச் சுற்றுலா போலாமா?

மூர்த்தியில் மயங்க வைக்கும் மலைக் காட்டுச் சுற்றுலா போலாமா?

மூர்த்தியில் மயங்க வைக்கும் மலைக் காட்டுச் சுற்றுலா போலாமா?

By IamUD

காலிம்பாங் மலைகளின் வழியே ஓடி வரும் மூர்த்தி எனும் ஆற்றின் பெயரால் அழைக்கப்படும் அழைக்கப்படும் இந்த சுற்றுலாத்தலம் மேற்கு வங்காள மாநிலத்தில் வட பகுதியில் அமைந்துள்ளது. வனப்பிரதேசத்தின் நடுவே ஒரு ஓய்வு மாளிகையில் தங்கும் அனுபவத்தை பயணிகள் இந்த மூர்த்தி ஸ்தலத்தில் பெறலாம்.

குருமாரா தேசியப்பூங்கா

குருமாரா தேசியப்பூங்கா

இந்த காட்டுச்சுற்றுலா ஸ்தலம் மேற்கு வங்காள மாநில அரசின் வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. தற்போது சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக புதிய தங்கும் விடுதி வளாகமும் வனத்துறையால் கட்டப்பட்டுவருகிறது. சுற்றுலா அம்சங்கள் குருமாரா தேசியப்பூங்கா மற்றும் சப்ரமரி காட்டுயிர் சரணாலயம் போன்றவை இந்த மூர்த்தி சுற்றுலாத்தலத்திற்கு அருகே அமைந்துள்ளன. யானைமீது அமர்ந்து காட்டுச்சுற்றுலா செல்லும் அனுபவத்தையும் இங்கு பெறலாம்.

Annie

 பஞ்சோரா ஆற்றுப்பகுதி

பஞ்சோரா ஆற்றுப்பகுதி

ஓய்வு மாளிகையிலிருந்து சிறிது தூரத்தில் காட்டுச்சுற்றுலா மற்றும் காட்டுவழி நடைப்பயணம் மேற்கொள்வதற்கான வசதிகள் உள்ளன. இங்கிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஞ்சோரா ஆற்றுப்பகுதி ஒரு நல்ல பிக்னிக் சிற்றுலாத்தலமாகவும் அமைந்திருக்கிறது. குளிர்காலத்தில் இந்த இடத்திற்கு விஜயம் செய்வது சிறந்தது. எப்படி செல்லலாம் லதாகுரி மற்றும் சல்ஸா எனும் இடங்களுக்கு வெகு அருகில் இந்த மூர்த்தி சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது.

Rajibnandi

 தங்குமிட வசதிகள்

தங்குமிட வசதிகள்

டார்ஜிலிங் மற்றும் சிலிகுரி போன்ற முக்கிய நகரங்களிலிருந்து இந்த மூர்த்தி ஸ்தலத்துக்கு வரலாம். பொதுவாக டார்ஜிலிங், சிலிகுரி நகரத்திற்கு வரும் பயணிகள் இந்த மூர்த்தி காட்டுச்சுற்றுலா ஸ்தலத்திற்கும் விஜயம் செய்யாமல் திரும்புவதில்லை. தங்குமிட வசதிகளை பூர்த்தி செய்வதில் வனத்துறை தீவிரமாக செயல்பட்டாலும் பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு இங்கு பயணிகள் வருகை சமீப காலமாக அதிகரித்துள்ளது.

Rajdwip Chowdhury

எப்படி செல்வது?

எப்படி செல்வது?


தேசிய நெடுஞ்சாலை 31 வழியாக சிலிகுரியிலிருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள இந்த மூர்த்தி காட்டுச்சுற்றுலா ஸ்தலத்திற்கு வரலாம்.

ரயில் மார்க்கமாக பயணம் மேற்கொள்ள வசதியாக சிலிகுரி ரயில் நிலையம் இங்கிருந்து 70 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

பக்டோக்ரா எனும் இடத்திலுள்ள விமான நிலையம் மூர்த்தி காட்டுச்சுற்றுலா ஸ்தலத்திற்கு அருகில் உள்ளது. இந்த விமான நிலையம் மூர்த்தி ஸ்தலத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது.

Abhijit Kar Gupta

More News

    Read more about: travel west bengal
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+