Search
  • Follow NativePlanet
Share
» »கொல்லத்திலிருந்து செல்ல 3 அற்புதமான இடங்கள்

கொல்லத்திலிருந்து செல்ல 3 அற்புதமான இடங்கள்

By Udhaya

கேரளாவின் முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலமாகவும் அதே சமயம் ஒரு இயற்கை எழிற்பிரதேசமாகவும் அறியப்படுகிற இந்த அச்சன்கோயில், அதன் அருகிலுள்ள அமிர்தபுரி, சற்று தொலைவிலுள்ள மாண்ட்ரோ தீவுகள் என எல்லாவற்றுக்கும் பயணிக்கவிருக்கிறோம். இந்த பதிவில் எப்படி, எப்போது செல்வது, என்னென்ன செய்வது, அங்கே சுற்றிப் பார்க்க என்னென்ன இடங்கள் இருக்கின்றன, அங்கு என்ன சிறப்பு, அங்கு கிடைக்கும் பொருள்கள் என பலவற்றை விவாதிக்கலாம். இதுபோன்ற கட்டுரைகளைப் பெற மேலுள்ள பெல் ஐகானை கிளிக் செய்து சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.

 அச்சன்கோயில்

அச்சன்கோயில்

கேரளாவின் முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலமாகவும் அதே சமயம் ஒரு இயற்கை எழிற்பிரதேசமாகவும் அறியப்படுகிற இந்த அச்சன்கோயில் ஸ்தலம் கொல்லத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ளது. அடர்த்தியான வனப்பகுதிகள், கோயில்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றுக்கு இப்பிரதேசம் பிரசித்தி பெற்றுள்ளது.

self

 ஆன்மீகம்

ஆன்மீகம்

இந்த ஸ்தலத்தின் பிரதான ஆன்மீக அம்சம் அச்சன்கோயில் எனப்படும் சாஸ்தா கோயில் ஆகும். இதில் அய்யப்ப பஹவான் குடி கொண்டுள்ளார். கிறிஸ்தவ யுகத்துக்கும் முற்பட்ட காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சாஸ்தா சிலை இக்கோயிலில் காட்சியளிப்பதால் பக்தர்கள் மட்டுமல்லாது வரலாற்று ஆர்வலர்களையும் இந்த கோயில் வெகுவாக கவர்கிறது.

விழாக்களும் குதூகலுமும்

விழாக்களும் குதூகலுமும்

டிசம்பர்-ஜனவரி மாதங்களில் நடத்தப்படும் மண்டல பூஜா, ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும் ரேவதி திருவிழா போன்ற விசேடத் திருவிழாக் காலங்களில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். மற்ற தென்னிந்தியக் கோயில்களில் காணப்படாத புஷ்பாபிஷேகம் எனும் பிரசித்தமான பூஜை சடங்கு இந்த அச்சன்கோயிலில் நிறைவேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

மற்ற இடங்கள்

மற்ற இடங்கள்

அச்சன்கோயில் பகுதியில் குபவுருட்டி நீர்விழ்ச்சி மற்றும் மணலார் நீர்வீழ்ச்சி போன்ற இயற்கைச்சுற்றுலா அம்சங்களும் உள்ளன. சாஸ்தா கோயிலுக்கு செல்லும் பாதையிலேயே அமைந்துள்ள இந்த நீர் விழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாக மட்டுமல்லாமல் யாத்ரீகர்கள் தங்கள் பயணத்தின் போது ஓய்வெடுக்கும் ஸ்தலமாகவும் பயன்படுகின்றன.

wiki

 அமிர்தபுரி

அமிர்தபுரி

கொல்லம் நகரிலிருந்து 30 கி.மீ தூரத்தில் வல்லிக்காவு எனும் இடத்தில் அமைந்துள்ள இந்த அமிர்தபுரி எனும் ஆன்மீக மையம் சமீப காலமாக ஒரு முக்கியமான யாத்திரை ஸ்தலமாக பிரசித்தி பெற்றிருக்கிறது. இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் மீனவக்கிராமமான வல்லிக்காவு மாதா அமிர்தானந்த மாயி அவர்களின் பிறந்த ஸ்தலம் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த ஆன்மீக யோகியின் தலைமை ஆசிரமம் அமைந்துள்ள வளாகமே அமிர்தபுரி என்றழைக்கப்படுகிறது. தற்போது உலகமெங்கும் அறியப்பட்டுள்ள ஒரு ஆன்மீக கேந்திரமாக இது பிரசித்தி பெற்றுள்ளது.

wiki

உலகெங்குமிருந்து வரும் பக்தர்கள்

உலகெங்குமிருந்து வரும் பக்தர்கள்

சர்வதேச அளவில் தற்போது லட்சக்கணக்கான சீடர்களை கொண்டுள்ள ஆன்மீக யோகி மாதா அமிர்தானந்த மாயி அவர்களின் ஆசிரமக்கிளைகள் பல நாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. கொல்லம் நகரிலிருந்து படகுவீடுகள் மூலம் இயற்கை எழிலை ரசித்தபடியே பயணிகள் அமிர்தபுரிக்கு வரலாம். கொச்சி மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகரங்களிலிருந்து அமிர்தபுரிக்கு பேருந்து வசதிகளும் உள்ளன.

wiki

மாதா அமிர்தானந்த மாயி

மாதா அமிர்தானந்த மாயி

மாதா அமிர்தானந்த மாயி அவர்களின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமிர்தபுரி நகரம் பல ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. இந்த வளாகத்தில் ஆசிரமம், பல கல்வி மையங்கள், ஆராய்ச்சி மையங்கள், இலவச மருத்துவமனை, தபால் நிலையம், உணவகங்கள், புத்தகநிலையங்கள் மற்றும் பல ஏராளமான வசதிகள் நிறைந்துள்ளன. விருந்தினர்களுக்கு தங்கும் வசதிகளும் இங்கு செய்து தரப்படுகின்றன. அமைதியும் ஆன்மீகமும் தவழும் இந்த வளாகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.

wiki

 மன்ரோ தீவு

மன்ரோ தீவு

மன்ரோ துருத் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த மன்ரோ தீவுப்பகுதி எட்டு குட்டி தீவுகளை உள்ளடக்கியுள்ளது. கொல்லம் நகரிலிருந்து 27 கி.மீ தூரத்திலுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இப்பகுதியின் வளர்ச்சிக்கு வித்திட்ட கர்னல் ஜான் மன்ரோ என்ற அதிகாரியின் பெயரால் இத்தீவுப்பகுதி அழைக்கப்படுகிறது. பலவித கால்வாய்களை உருவாக்கியது மற்றும் நீர்வழிப்பாதைகளை இணைத்து போக்குவரத்துப் பாதைகளை உருவாக்கியது போன்ற பல பயனுள்ள மாற்றங்களை அவர் அக்காலத்திலேயே இந்தத் தீவுப்பகுதியில் நிகழ்த்தியுள்ளார்.

wiki

சுற்றுலாவில் சிறந்த மன்ட்ரோ தீவு

சுற்றுலாவில் சிறந்த மன்ட்ரோ தீவு

இன்று மன்ரோ தீவுப்பகுதியானது அதிகமான சுற்றுலாப்பயணிகளால் விரும்பப்படும் ஒரு ரம்மியமான சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. மூலசந்தாரா கோயில் மற்றும் கல்லுவிலா கோயில் என்ற இரண்டு கோயில்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. 1878ம் ஆண்டில் கட்டப்பட்ட பள்ளியம் துருத் எனும் புராதன தேவாலயமும் தன் அமைதி தவழும் அழகால் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

wiki

 அஷ்டமுடி நீர்த்தேக்க சங்கமம்

அஷ்டமுடி நீர்த்தேக்க சங்கமம்

அஷ்டமுடி நீர்த்தேக்கம் கல்லடா ஆற்றோடு சங்கமிக்கும் இடத்தில் இந்த தீவுப்பகுதி அமைந்துள்ளது. விடுமுறைச்சுற்றுலாவுக்கு மிகவும் ஏற்ற இந்த தீவுஸ்தலத்தில் பறவை வேடிக்கை, மீன்படித்தல் மற்றும் இயற்கைக்காட்சி ரசிப்பு போன்ற பொழுது போக்குகளில் பயணிகள் ஈடுபடலாம். இவை தவிர தென்னை நார் தொழில் இப்பகுதியில் பிரதானமாக காணப்படுவதால் அது தொடர்பான நார்த்தயாரிப்பு நுணுக்கங்களை நேரில் பார்த்து ரசிக்கலாம்.

wiki

Read more about: travel temple kollam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X