Search
  • Follow NativePlanet
Share
» »இந்து கோயிலை மறைத்து கட்டப்பட்டதா குதுப்மினார்! மறைந்துள்ள மர்மங்கள்!

இந்து கோயிலை மறைத்து கட்டப்பட்டதா குதுப்மினார்! மறைந்துள்ள மர்மங்கள்!

இந்து கோயிலை மறைத்து கட்டப்பட்டதா? குதுப்மினாரில் மறைந்துள்ள மர்மங்கள் பற்றிய தொகுப்பு.

நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள 237.8அடி உயரம் கொண்ட கோபுரம் குதுப்மினார் ஆகும். பாக்தாத் நகரிலிருந்து டெல்லிக்கு வந்து தங்கியிருந்த குவாஜா குத்புதீன் எனும் மகானின் பெயரை கொண்ட இந்த கட்டிடத்தை சுல்தான் இல்தூர்மிஷ் முழுவதுமாக கட்டி முடித்தார். இது இந்தோ - இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

முழுவதும் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட உலகின் மிக உயர்ந்த பள்ளிவாசல் தூபி இதுவாகும். ஆனால், குதுப்மினார் ஒரு இந்து கோயில் எனவும், அதை இஸ்லாமிய மன்னர், திரித்து, அவசர அவசரமாக பள்ளிவாசல் தூபியாக நிறுவியதாகவும் சர்ச்சை இருந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது. வாருங்கள் குதுப்மினாரை அலசி ஆராய்வோம்.

 குதுப்மினார்

குதுப்மினார்

இந்திய முஸ்லிம் அரசர்களில் முதல்வரான குத்புதீன் அய்பக் ஆணைப்படி 1193ம் ஆண்டு கட்டத் துவங்கி, 1386ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இத்தனை வருடங்கள் எதற்காக இடைவேளை என்ற சந்தேகமும் இருக்கிறது.

Saad Akhtar

 இந்தோ இஸ்லாமிய கட்டிடக்கலை

இந்தோ இஸ்லாமிய கட்டிடக்கலை

இந்திய வேலையாட்களைக் கொண்டு, இஸ்லாமிய கட்டிடபாணியில் அமைக்கப்பட்டும் கட்டிடங்களுக்கு இந்தோ இஸ்லாமிய கட்டிடக்கலை என்றுபெயர். பொதுவாகவே, இஸ்லாமிய தேசத்து ஆட்கள் இங்கு மேற்பார்வையாளராக இருந்திருப்பார்கள்.

Koshy Koshy

உலகப்பாரம்பரிய சின்னம்

உலகப்பாரம்பரிய சின்னம்

இது உலக அமைப்பான யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். இதன் சிறப்பம்சங்கள், வெளித்தோற்றம் ஆகியவற்றை காணும்போது இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் பள்ளி வாசல்தானே என்று அனைவரும் நம்பும் வண்ணம் அமைந்துள்ளது. ஆனால்...?

Manish Vohra

 அஸ்திரத்தை ஆட்டுவிக்கும் கேள்விகள்

அஸ்திரத்தை ஆட்டுவிக்கும் கேள்விகள்

உண்மையில் இந்த குதுப்மினார் மேற்சொன்ன மன்னரால்தான் கட்டப்பட்டதா? குதுப்மினார் மற்றும் அதன் அருகாமையிலுள்ள பல இஸ்லாமிய மன்னர்களின் கல்லறைகள் என அனைத்திலும் இஸ்லாமிய அரபு எழுத்துக்களும், அவர்களது குறியீடுகளும்தானே இருக்கிறது. அதனால் அவர்கள்தான் கட்டியிருக்கவேண்டும் என்கிறீர்களா? பொறுங்கள்.. இது இஸ்லாமியர்களின் தலம் இல்லை என்று அடித்துகூறுகிறார்கள் இதை இந்து கோயில் என்போர்.

sandeepachetan.com travel

தீர ஆராய்ந்தால்....

தீர ஆராய்ந்தால்....

குதுப்மினாருக்கு பக்கத்தில் கட்டிமுடிக்கப்படாமலுள்ள இந்த கட்டிடத்தைப் பாருங்கள். எப்படி பொறுத்தியிருக்கிறார்கள் தெரிகிறது. இந்த குவிமாடத்துக்கும், மண்டபத்துக்கும் சம்பந்தமே இல்லாதமாதிரி தெரிகிறது அல்லவா?

தூண்களில் மணிகள்

தூண்களில் மணிகள்

இந்த குவிமாடம் இருக்குற இதே மண்டபத்தில் இருக்கிறத தூண்களில் கோயில்தூண்களில் இருக்கும் அதே சங்கிலியிட்ட மணி கள் செதுக்கப்பட்டிருக்கிறது.

விநாயகரின் உருவம்

விநாயகரின் உருவம்


இந்த தூண்களை முழுவதுமாக ஆராய்ந்தால், உங்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. தூண்களில் ஆங்காங்கே விநாயகரின் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது அப்படியே தெரிகிறது.

இந்துகோயிலா

இந்துகோயிலா

இஸ்லாமியரின் மாடத்தில், விநாயகருக்கு என்ன வேலை? இந்துக்களின் முதன்முதற்கடவுளான விநாயகரை இஸ்லாமிய மன்னர்கள் ஏன் தங்கள் இடங்களில் செதுக்கவேண்டும் என்று கேள்வி கேட்கின்றனர் குதுப்மினார் ஒரு இந்துகோயில் என்போர்.

Sakeeb Sabakka

 இராமாயண காட்சிகள்

இராமாயண காட்சிகள்

இந்த கட்டிடத்தின் மேற்புறத்தில் நன்றாக உற்றுநோக்கினால், ராமாயண போர்க்காட்சிகள் செதுக்கப்பட்டிருக்கிறது. அடடா! இஸ்லாமியர்களுக்கும் ராமாயண நம்பிக்கை உள்ளதோ என்கிறார்கள் அவர்கள். இதிலிருந்தே குதுப்மினார் ஒரு இந்துகோயில் என்பதை உணரலாம் என்று கூறுகிறார்கள்.

உருவ வழிபாட்டை எதிர்க்கும் இஸ்லாம்

உருவ வழிபாட்டை எதிர்க்கும் இஸ்லாம்

பொதுவாகவே உருவ வழிபாட்டை எதிர்க்கும் இஸ்லாமிய சமூகத்தில், எப்படி இந்த கட்டிடம் செதுக்கிய உருவங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கும். மேலும், இந்த குதுப்மினார் வளாகத்திலேயே பல்வேறு கடவுளர்களின் சிலைகளும் , செதுக்கப்பட்ட உருவங்களும் காணப்படுகிறது.

choubb

பலிபீடங்கள்

பலிபீடங்கள்


இந்துகோயில்களில் பெரும்பாலும் காணப்படும் பலிபீடங்கள் இந்த இடத்தில் எப்படி வந்தது என்பதும் பெரும் ஆச்சர்யமாக அமைகிறது. ஒருவேளை, ஏற்கனவே இருந்த கோயிலில் இந்துகடவுளர்களின் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டு, அவசர அவசரமாக இஸ்லாமிய அடையாளங்கள் புகுத்தப்பட்டிருக்கும் என்கிறார்கள் அவர்கள்.

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

கண்டுகொள்ளப்படாத 1852 அறிக்கை

கண்டுகொள்ளப்படாத 1852 அறிக்கை


இந்த இடத்தைப் பற்றி ஆய்வு செய்த சையத் அகமதுகான் என்பவர் ஆராய்ச்சியின் முடிவில் இது இந்து கோயிலாக இருந்திருக்கும் என்று 1852லேயே அறிக்கை விட்டுருக்கிறார். மேலே சொன்ன அனைத்தும் அவர் ஆய்வுக்கட்டுரையிலிருந்து சொன்னதுதான்.

Nick Dawson

 மணிகளும் தாமரைகளும்

மணிகளும் தாமரைகளும்

குதுப்மினார் கோட்டையில் மணி போன்ற அமைப்புகளும், தாமரை போன்ற சிற்பங்களும் நிறைய காணப்படுகின்றன. இஸ்லாமிய கட்டிடங்களில் மணிகளும், தாமரை மலர்களும் பயன்படுத்தப்படாதது. இவைகளும் சந்தேகத்தை வரவழைக்கிறது.

தவறான வசனங்கள்

தவறான வசனங்கள்


அரேபிய மொழி ஆய்வறிஞர்கள் பலர் இங்குள்ள வசனங்கள் எழுத்துப்பிழைகளுடன் தவறாக செதுக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளனர். சரி விடுங்க.. இந்த பதிவை பார்த்ததும் உங்களுக்கும் குதுப்மினாருக்கு போக ஆசை வந்துடுச்சா? உங்களுக்கு வழிகாட்டத்தான் நாங்க இருக்கோமே.

மகாபாரத காலம்

மகாபாரத காலம்

மகாபாரத காலத்தில் துவங்கி இன்றுவரை சுமார் 3000 ஆண்டுகால வரலாற்றை கொண்டிருக்கும் நகரம் இந்திரப்பிரஸ்தம் என்றழைக்கப்பட்ட நவீன இந்தியாவின் தலைநகரான டெல்லி ஆகும். இந்த வரலாற்று காலம் நெடுகவும் அதிகாரத்தின் அடையாளமாக இருந்திருக்கிறது இருந்துவருகிறது டெல்லி. எத்தனையோ போர்கள், சதிகள், முற்றுகைகள், கவிழ்ப்புகளை சந்தித்திருக்கும் இந்நகரம் இன்று வரலாற்று பாரம்பரியம் கொண்ட பழமையான பாரதத்திற்கும் தொழில்நுட்ப வளர்ச்சி, ஆடம்பர மேற்கத்திய வாழ்க்கைமுறை கொண்ட நவீன இந்தியாவிற்கும் இடையில் இயங்கும் ஒரு கலாச்சார தொட்டிலாக இருக்கிறது.

Barney Moss

உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த திருப்பதியின் மர்மங்கள்!உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த திருப்பதியின் மர்மங்கள்!

பெயர் காரணம்:

பெயர் காரணம்:

குதுப்மினாருக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்பதற்கு இருவேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. * இதை கட்டுவதற்கு உத்தரவிட்டது குதுப் உதின் ஐபக் என்பதால் அவரின் பெயரில் இருந்துகுதுப்மினார் என்று சூட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. *குதுப்மினார் கட்டபப்ட்ட காலத்தில் டெல்லியில் மிகப்பிரபலமாக விளங்கிய சூபி ஞானி குதுபுதின் பக்தியர் காகி என்பவரின் பெயரில் இருந்தும் இக்கட்டிடதிற்க்கான பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
AHLN

தூபி

தூபி


தூபி என்பது இஸ்லாமிய கட்டிடக்கலையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். மசூதிகளில் நாம் பார்க்கும் உயரமான தூண்கள் தான் தூபி எனப்படுபவை. அக்காலத்தில் செய்திகளை தெரிவிக்கவும், போர் பற்றிய எச்சரிக்கைகளை அனுப்பவும், தொழுகை செய்வதற்கான நேரம் ஆகிவிட்டதை சுட்டிக்காட்டவும் இந்த தூபிகள் கட்டப்பட்டிருக்கின்றன. *அப்படிப்பட்ட தூபிக்களில் ஒன்றான குதுப்மினாரில் குரானின் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது துருக்கிய மற்றும் பெர்சிய நாட்டு கலை அம்சங்களை உள்ளடக்கிய அழகியதொரு கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது.

Swaminathan

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

துருப்பிடிக்காத தூண்:

துருப்பிடிக்காத தூண்:

குதுப்மினார் வளாகத்தில் குப்தர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இரும்புத்தூண் ஒன்றையும் நாம் காணலாம். இது கிட்டத்தட்ட 2000வருடங்களாக இதே இடத்தில் கொஞ்சம் கூட துருப்பிடிக்காமல் நிற்பது ஒரு அறிவியல் அதிசயமாகும். * குதுப்மினார் கட்டப்படுவதற்கு பல வருடங்கள் முன்பிருந்தே இருக்கும் இந்த இரும்புத்தூனில் 'பிராமி' எழுத்துக்குறிப்புகள் காணப்படுகின்றன.

Koshy Koshy

விபத்து:

விபத்து:

*அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையினுள் எப்படி படிக்கட்டுகள் மூலம் அதன் உச்சிக்கு சென்று பார்க்கலாமோ அதுபோலத்தான் குதுப்மினாரின் உள்ளும் அதன் உச்சி வரை மக்கள் சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். *ஆனால், டிசம்பர்4,1981ஆம் ஆண்டு இதனுள் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி நாற்பதுக்கும் அதிகமான மக்கள் பலியாகியிருக்கின்றனர். அதன் பிறகு பொதுமக்கள் இதனுள் சென்றுவர தடைவிதிக்கப்பட்டது.

TANAKA Juuyoh (田中十洋)

 குதுப் வளாகம்:

குதுப் வளாகம்:

குதுப்மினார் இருக்கும் குதுப் வளாகத்தில்அலா இ மினார்,குவாத்துல் இஸ்லாம் மசூதி,இமாம் ஜமின் டூம் (கல்லறை),அலாவுதீன் கில்ஜி கல்லறை,சுல்தான் காரி நினைவுச்சின்னம் போன்ற இடங்களும் இருக்கின்றன. குதுப்மினாரின் வரலாற்றோடு பின்னிப்பிணைத்த இந்த இடங்களுக்கும் சென்று கட்டாயம் பார்வையிடுங்கள்.

Sakeeb Sabakka

சுற்றுலா:

சுற்றுலா:

தில்லியின் கலைச்சின்னங்களில் ஒன்றான இந்த குதுப்மினார் பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும், இந்த இடத்தை எப்படி சென்றடைவது, இதனருகில் இருக்கும் ஹோட்டல்கள் என்னென்ன என்பது பற்றிய விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Koshy Koshy

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X