» »அதிசய சித்தர் போகருடைய குருவின் சாகா வரம்தரும் மர்மக்குகை ரகசியங்கள்

அதிசய சித்தர் போகருடைய குருவின் சாகா வரம்தரும் மர்மக்குகை ரகசியங்கள்

Posted By: Udhaya

சாகாவரம் தரும் அதிசய மூலிகைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டால் என்ன செய்வீர்கள். அட இந்த காலத்துல இப்படி புரளிய கிளப்பிட்டு இருக்காங்க. இவனுங்களுக்கு வேறு வேளையில்லை என்று சென்றுவிடுவீர்கள்தானே. ஆனால், இப்போதும் கூட மரணமில்லா பெருவாழ்வுக்கான ஆதாரத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றனர் எனும் செய்தி உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் அல்லவா? முதன்முதலில் சாகாவரம் தரும் மூலிகை பற்றி கேள்விப்படுபவர்கள் போகரைப் பற்றி தெரிந்திருப்பீர்கள் என நம்புகிறோம். அவர் நவபாஷனங்களைக் கொண்டு சிலை செய்தார் என்பது தெரியும்.

அதிசய சித்தர் என்று போற்றப்படும் போகர் செய்த நவபாஷான சிலை பழனி முருகன் கோயிலில் உள்ளது என்பது நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், அவர் இன்னொரு நவபாஷான சிலையையும் செய்தார். அதைத்தேடி இந்த பயணத்தைத் தொடர்வோம் வாருங்கள்.

காளங்கிநாதர்

காளங்கிநாதர்

காசியிலிருந்து வந்தவர் காளங்கிநாதர் எனவும் அவர் காலங்கடந்தவர் எனவும் நம்பிக்கை உள்ளது. காளங்கிநாதர் போகரின் குரு ஆவார். போகரின் சக்திகளுக்கும், சிந்தனைகளுக்கும் முழுக்க முழுக்க காளங்கிநாதரே காரணமாவார் எனவும் கூறப்படுகிறது.

எங்கு வாழ்ந்தார் தெரியுமா

எங்கு வாழ்ந்தார் தெரியுமா


காளங்கிநாதர் சேலம் மாவட்டம் அருகே உள்ள கஞ்சமலையில் வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது. இந்த மலை சேலம் நகருக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

Thamizhpparithi Maari -

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

சேலத்திலிருந்து 16கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மலை. இங்கு கஞ்சமலை சித்தர் கோயில் ஒன்று உள்ளது. இதை அமாவாசைக் கோயில் என்றும் கூறுகின்றனர்.

Thamizhpparithi Maari

 காளங்கி சித்தரின் மகிமை

காளங்கி சித்தரின் மகிமை

இங்கு காளங்கிநாதர் எனும் சித்தர் உட்கார்ந்த நிலையில் மூலவராக காட்சிதருகிறார். இவரை வழிபட்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது.

வரலாறு

வரலாறு

இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோயிலின் கல் கட்டடம் 1300 ஆண்டுகள் முற்பட்டது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கஞ்சமலையின் வரலாறு பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பழமையானதாகும்.

Thamizhpparithi Maari

காளங்கிநாதரின் மாளிகை

காளங்கிநாதரின் மாளிகை


கோயில் இருந்த இடத்தில் வெகு காலத்துக்கு முன்னர் காளங்கிநாதர் குகைகளில் தங்கி தியானம் செய்துவந்துள்ளார் என்கின்றனர். இது காளங்கிநாதர் வெகுகாலம் வாழ்ந்துவந்த மலையாகும்.

கௌ லன்கீ

கௌ லன்கீ

கௌ லன் கீ எனும் சீனப் பயணி ஒருவர் இங்கு வந்து தியானம் செய்து, யோகியாக மாறினார் என்கிறார்கள். அப்படியானால் காளங்கிநாதர் என்பவர் ஒரு சீனரா?

கஞ்சமலை ஒரு மருத்துவ ஆய்வுக் கூடம்

கஞ்சமலை ஒரு மருத்துவ ஆய்வுக் கூடம்


அந்த காலத்தில் சித்தர்கள் காளங்கிநாதரின் கீழ் அணிதிரண்டு இந்த மலையில் மருத்துவ ஆய்வுகளை நடத்தியுள்ளனர். அதாவது மூலிகைகளை கலந்து பல்வேறு நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இருந்ததாக தெரிகிறது.

Thamizhpparithi Maari

 அமாவாசை பௌர்ணமி

அமாவாசை பௌர்ணமி

நீங்களும் இந்த மலையின் ரகசியங்களை அறிந்து, சாகாவரம் பெற சித்தரை வழிபட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இந்த கோயிலுக்கு செல்லுங்கள்.

சக்தி

சக்தி

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இந்த மலைக்கு செல்லும் மக்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்கி பூசையில் ஈடுபடுகின்றனராம். மலை உச்சியில் தவம் செய்பவர்களுக்கு காளங்கிநாதரின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

 தங்கம் பொதிந்துள்ள மலை

தங்கம் பொதிந்துள்ள மலை

கஞ்சமலை என்பதன் பொருள் தங்கமலை என்றும் இரும்புமலை என்றும் தாமரை மலை என்றும் தமிழிலயக்கத்தில் இருக்கிறது. எனினும் இது தங்கமலை என்று அழைக்கப்படுகிறது. இரும்புத் தாது அதிகம் கிடைக்கும் இடமாகவும் இது பார்க்கப்படுகிறது.

Thamizhpparithi Maari

 சிதம்பரம் நடராசர் கோயிலுடன் நேரடித் தொடர்பு

சிதம்பரம் நடராசர் கோயிலுடன் நேரடித் தொடர்பு

இந்த மலையில் கிடைக்கும் தங்கம்தான் சிதம்பரம் நடராசர் கோயிலில் தங்க கூரையாக வேயப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரம் பராந்தகச் சோழனின் கல்வெட்டுக்களில் காணமுடிகிறது.

Mlakshmanan

கொங்கு தேசம்

கொங்கு தேசம்

அந்த காலத்தில் கொங்கு தேசம் என்பது, கிழக்கே மதிற்கோட்டைக் கரையையும், மேற்கில் வெள்ளயங்கிரி மலையையும் வடக்கே பெரும்பாலையையும், தெற்கே பழநியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

கொங்குமண்டலச் சதகம்

கொங்குமண்டலச் சதகம்

கொங்குமண்டலச் சதகம் எனும் நூலிலிருந்து இந்த மலையில் தங்கம் கிடைத்தது மேலும் உறுதி செய்யப்படுகிறது.

Thamizhpparithi Maari

 சாகாவரம் தரும் மூலிகை

சாகாவரம் தரும் மூலிகை

சாகாவரம் தரும் மூலிகைகள் இந்த மலையில் கிடைத்ததாக கூறப்படுகிறது. கருநெல்லி, கருநொச்சி, கருந்துளசி என காயகல்ப மூலிகைகள் இங்கு கிடைத்தன என்றும் இதிலிருந்து சித்தர்கள் சாகாவரம்தரும் மூலிகையை உருவாக்கியிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

 சுற்றுலா வழிகாட்டி

சுற்றுலா வழிகாட்டி

சேலம் நகரிலிருந்து 20கிமீ தோராயத் தொலைவில் உள்ள கஞ்சமலைக்கு அரை மணி நேரங்களுக்குள் சென்றுவிட முடியும்.

தேசிய நெடஞ்சாலை எண் 44 மற்றும் 421 வழியாக கஞ்சமலையை அடையலாம்.

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்


கஞ்சமலைக்கு அருகிலேயே சித்தர் கோயில், முனியப்பன் கோயில், கஞ்சமலை பெருமாள் கோயில், சிவன் கோயில், 1008 சிவலிங்க ஆலயம், உத்திரக்கனவு பிள்ளையார் கோயில் உள்ளி்ட்ட ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்