» »புளியஞ்சோலை மர்மங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

புளியஞ்சோலை மர்மங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

Posted By: Udhaya

புளியஞ்சோலை, கிழக்குத் தொடர்ச்சி மலைகளுள் கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு மலைப்பகுதி ஆகும். இது திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

கொல்லிமலைக்கு அருகில் இருக்கும் இந்த மலையிலும் சில மர்மங்கள் நீண்ட நாட்களாக அவிழ்க்கப்படாமல் உள்ளன. அவற்றை என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்.

எங்குள்ளது

எங்குள்ளது


புளியஞ்சோலை திருச்சி மாவட்டத்துக்கு மிக அருகே அமைந்துள்ள மலைப்பிரதேசமாகும். இது திருச்சியிலிருந்து 72 கிமீ தொலைவில் ஏறக்குறைய 2 மணி நேரத்தில் சென்றுவிடும்படி அமைந்துள்ளது.

tn.gov.in/trichytourism/puliancholai

 இயற்கை எழில் கொஞ்சும்

இயற்கை எழில் கொஞ்சும்

இந்த மலை, இயற்கை எழில் கொஞ்சும் வகையில், பசுமையாகவும் குளுகுளு சூழ்நிலையிலும் அமைந்துள்ளது. புதுமணத் தம்பதிகள், சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி வரும் இடமாகும்.
tn.gov.in/trichytourism/puliancholai

 ஆகாய கங்கை

ஆகாய கங்கை

ஆகாய கங்கை என்றழைக்கப்படும் மலைஉச்சி சில கிமீ தொலைவு நடந்து சென்றால் அடைந்துவிடும் தூரத்தில் உள்ளது. இங்கு மிக இதமான காற்றும், அருமையான சூழ்நிலையும் இருக்கும். சாகச சுற்றுலா பிரியர்களுக்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது.

tn.gov.in/trichytourism/puliancholai

நீர்வீழ்ச்சி

நீர்வீழ்ச்சி

புளியஞ்சோலை மலை, இங்குள்ள புளியஞ்சோலை நீர்வீழ்ச்சிக்கு பெயர் பெற்றதாகும். ஆகாய கங்கை எனப்படும் மலை உச்சியில் வேறு சில நதிகளும் உருவாகின்றன. கொல்லிமலையில் பார்க்கவேன்டிய இடங்களில் முக்கியமான இடம் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி ஆகும்.

tn.gov.in/trichytourism/puliancholai

மர்மங்கள்

மர்மங்கள்

புளியஞ்சோலையிலிருந்து 5 கிமீ நடைபயணத்துக்குப் பிறகு ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியை அடையலாம். இங்கு பத்து லட்சம் வருடங்களுக்கு முந்தைய பாறைகள், குகைகள், கோயில்கள் என பல இருக்கின்றன. இங்கும் பல கற்பனைக்கு எட்டாத அதிசயங்கள் இருக்கின்றன.

குகைக் கோயில்கள் எந்த வருடம் கட்டியது, செதுக்கப்பட்ட கற்கள் தானாக உருவானதா அல்லது மனிதனின் தாக்கம் அதில் இருக்கிறதா என்பன போன்ற பல விடையில்லா கேள்விகள் இங்கு உள்ளன.

tn.gov.in/trichytourism/puliancholai

மரங்கள்

மரங்கள்

இங்குள்ள காடுகளில் விதவிதமான மரங்கள் உள்ளன. அவை கனி தரும் மரங்களாகும். உள்ளூர் மக்கள் இதை பயரிட்டு, அங்கேயே விற்பனை செய்து பிழைத்து வருகின்றனர். பலாப்பழம், ஆரஞ்சு, கொய்யா என பல மரங்கள் இங்குண்டு.

tn.gov.in/trichytourism/puliancholai

எப்படி அடையலாம்?

எப்படி அடையலாம்?

திருச்சியிலிருந்து துறையூர் வழியாக எளிதில் அடையலாம். மேலும் முசிறி வழியாக செல்வதற்கும் ஒரு பாதை உள்ளது.

சுற்றுலா வழிகாட்டி

சுற்றுலா வழிகாட்டி

குமாரமங்கலம் - பண்ருட்டி சாலையில் சென்று திருச்செங்கோடு நாமக்கல் சாலையை அடைந்து அங்கிருந்து முசிறியை அடையலாம்.

அங்கிருந்து எம்டிஆர் சாலையில் தொடர்ந்து சென்றால் புளியஞ்சோலையை அடைந்துவிடலாம்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்