» »இந்தியாவிலுள்ள விசித்திரமான கோவில்களும் & வினோத வழிபாடுகளும்!!

இந்தியாவிலுள்ள விசித்திரமான கோவில்களும் & வினோத வழிபாடுகளும்!!

Written By: Staff

இந்தியா என்றாலே அனைவருக்கும் பண்பாடு, கலாச்சாரம் தான் முதலில் நினைவுக்கு வரும். சிற்பக்கலை, பாரம்பரிய கோவில்கள், வரலாற்று சுற்றுலா தளங்கள் என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்தியாவில் இருப்பதால்தான் இன்றும் பல நாடுகளிலிருந்தும் வெளிநாட்டினர் நம்நாட்டிற்கு வருகை புரிகின்றனர். மேலும் இங்கு பல நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருக்கும் கோயில்கள் நிறைய உள்ளன. அத்தகைய கோயில்களில் உள்ள சிற்பங்கள் அனைத்துமே, இந்திய நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை நன்கு வெளிப்படுத்தும். அப்படிப்பட்ட இந்தியாவில் உள்ள விசித்திர கோவில்களை பற்றியும், வினோத வழிபாடுகளும் குறித்தும் இங்கு பார்க்கலாம் வாருங்கள்.

1.நவ் காஜா பீர்

1.நவ் காஜா பீர்

லாரி டிரைவர்கள் மற்றும் பயணிகள், பயணத்தின் போது தங்கள் இலக்கை பாதுகாப்புடன் உரிய நேரத்தில் சென்றடைய இந்த கோவிலுக்கு வருகின்றனர். இங்கு வரும் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற கடிகாரம், கடுகு எண்ணெய் மற்றும் துணிகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த அரிய கோவில் ஹரியானா மாநிலத்தில் அம்பாலா மற்றும் குருஷேத்ரா இடையே உள்ளது.
Photo Courtesy: Kamaldevjhalli

2. ஷாஹீத் பாபா நிஹால் சிங் குருத்வாரா

2. ஷாஹீத் பாபா நிஹால் சிங் குருத்வாரா

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த
இடம். வெளிநாடு வாய்ப்பு கிடைக்காமல் சிரமப்படும் மக்கள் பொம்மை விமானம் ஒன்று கொண்டு வந்து இங்கு வழிபட்டால் வெளிநாடு வாய்ப்பு நிச்சியம் என்று நம்பப்படுகிறது.
Photo Courtesy: Malikhpur

3. கர்னி மாதா கோவில்

3. கர்னி மாதா கோவில்

ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானீர் என்ற இடத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கர்னி மாதா கோவில். இங்குள்ள எலிகள், தேவி கர்னி மாதா அவதாரமாக நம்பப்படுகிறது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பால் மற்றும் சில பிரசாத வகைகளை எலிகளுக்கு கொடுப்பர். மேலும் எலிகள் சாப்பிட பொருட்கள் புனிதமாக கருதப்படுவதுடன் சிலர் அதை கோவில் பிரசாதமாக எடுத்து கொள்கின்றனர்.
Photo Courtesy: Arian Zwegers

4. ஓம் பன்னா புல்லெட் பாபா:

4. ஓம் பன்னா புல்லெட் பாபா:

ஜோத்புரில் உள்ள பாலி மாவட்டத்தில் உள்ளது இந்த ஓம் பன்னா புல்லெட் பாபா கோவில். இங்கு வரும் மக்கள் [பயணிகள்] தங்கள் பயணத்தை பாதுகாக்க 350cc ராயல் என்பீல்ட் புல்லெட் ஒன்றை வழிபாடு செய்கின்றனர். 27 வருடங்களுக்கு முன்னர் ஒரு சமயம் ஓம் பன்னா, சோட்டீலா சென்றுகொண்டு இருக்கும் போது வழியிலேயே தனது புல்லட் கட்டுப்பாட்டை இழந்து இறந்துவிட்டார். பிறகு போலீசார் புல்லெட்டை அந்த இடத்தில் அகற்றினர். ஆனால் ஆச்சிரியமாக புல்லெட் அவர் உயிர் விட்ட அதே இடத்தில் திரும்ப வந்துவிட்டது. இந்த சம்பவம் முதல் இங்கு உள்ள மக்கள் புல்லெட் பைக்கை வழிபடுகின்றனர்.மேலும் ஓம் பன்னா வின் நினைவாக அந்த புல்லெட்டை புல்லெட் பாபா வாக நினைத்து வழிபடுகின்றனர்.
Photo Courtesy: Sentiments777

05. நாய் கோயில் - சன்னபாட்னா, கர்நாடகா

05. நாய் கோயில் - சன்னபாட்னா, கர்நாடகா

பெங்களூரில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராம்நகர் என்ற இடத்தில் தான் உள்ளது இந்த நாய் கோயில். இந்த கோவிலானது 2009 ஆம் ஆண்டு தான் கட்டப்பட்டது.இங்குள்ள கிராமவாசிகள் தங்கள் இடத்தில் எந்த தவறு நடக்காமலும், தீய சக்திகளை விரட்டுவதற்காகவும் நாய்கள் துணை நிற்கின்றன என்று நம்பி இந்த கோவிலில் வழிபடுகின்றனர்.

பாபா ஹர்பஜன் சிங்

பாபா ஹர்பஜன் சிங்

கேங்டாக்லிருந்து சுமார் 60km தொலைவில் குப்அப் பள்ளத்தாக்கு அருகே உள்ளது இந்த பாபா ஹர்பஜன் சிங் சமாதி. 1962 இந்தோ-சீனா போரின் போது உயிர் நீய்த்த ஹர்பஜன் சிங்க் என்ற ராணுவ வீரரின் நினைவாக இந்த கோவில் கட்டப்பட்டது.மேலும் இந்த மலை பகுதியில் விபத்து எதுவும் நடைபெறாமல் மக்களை காக்கிறார் என்றும் நம்பப்படுகிறது.

Photo Courtesy: Ambuj Saxena

Read more about: temples