» »திருவண்ணாமலையார் பற்றி உங்களுக்குத் தெரிந்திராத மர்மங்கள்!

திருவண்ணாமலையார் பற்றி உங்களுக்குத் தெரிந்திராத மர்மங்கள்!

Written By: Udhaya

திருவண்ணாமலை பலருக்குத் தெரியாத நிறைய உண்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இதுகுறித்து பலருக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளது. பஞ்சபூத தலங்களுள் ஒன்றான திருவண்ணாமலையார் கோயில் , திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

திருவண்ணாமலையில் அக்னி லிங்கமாக இருக்கும் சிவ பெருமான் அண்ணாமலையார் மற்றும் அருணாச்சலேஸ்வரர் என்ற பெயர்களில் வழிபடப்படுகிறார்.

திருவண்ணாமலையாரின் அதிசயங்கள்   

தமிழகத்தில் சைவம் வளர முக்கிய காரணமாயிருந்த சோழ மன்னர்களால் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

3ஆம் நூற்றாண்டில் சோழர்களுக்கு பின்வந்த ஹோசல்ய அரசின் தலைநகரமாகவும் திருவண்ணாமலை திகழ்ந்திருக்கிறது

நாசாவே வியக்கும் இந்த சிவன் கோயில் மர்மங்கள்

உங்களுக்குத் தெரியாத அல்லது நீங்கள் கேள்விப்படாத அந்த 8 உண்மைகள் இதுதான்..

அருணகிரிநாதர் தற்கொலை செய்துகொண்டார்?

அருணகிரிநாதர் தற்கொலை செய்துகொண்டார்?

வாழ்வில் மனமுடைந்ததால் அருணகிரிநாதர், கோயிலின் ராஜகோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது முருகப்பெருமான் அவரை காப்பாற்றினார். இதன்பின்னரே திருப்புகழ் தோன்றியது.

இதேபோல வல்லாள மகாராஜனின் கண்நோய் தீர, இந்திரலோகத்தில் உள்ள பாரிஜாத மலரைக் கொண்டுவரச் சென்றார் அருணகிரிநாதர்.

PC: Arunankabilan

கிளி உருவுக்கு ஏன்மாறினார் அருணகிரிநாதர்

கிளி உருவுக்கு ஏன்மாறினார் அருணகிரிநாதர்

இந்திரலோகத்துக்கு சென்ற அருணகிரிநாதர் தன் உயிரை இறந்த கிளியிடம் செலுத்தி, கிளியாக பறந்து சென்று மலரை கொண்டு வருவதற்குள், அவர்மீது பொறாமைகொண்ட சம்பந்தாண்டான் உடலை எரிந்துவிட்டான்.

இதனால்தான், அவர் கிளி உருவிலேயே கந்தரனுபூதி பாடினாராம்.

படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்

படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்

கிரிவலப் பாதையில் மிகச்சிறிய பழமையான இடுக்குப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேர்கோட்டில் அமையாத நிலையில் மூன்று வாயில்கள் உள்ளன. பின்வாசல் வழியாக நுழைந்து, ஒருக்களித்து படுத்தவாறு வளைந்து தவழ்ந்து, இரண்டாவது வாயிலில் நுழைந்து, முன்வாசல் வழியாக வெளிவர வேண்டும். இவ்வாறு வந்து பிள்ளையாரை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

PC: Youtube

10 நாள்கள் தொடர்ந்து எரியும் தீபத்தின் உண்மை நிலை

10 நாள்கள் தொடர்ந்து எரியும் தீபத்தின் உண்மை நிலை

எப்படி 10 நாள் தொடர்ந்து தீபம் எரிகிறது என்கிற உண்மை பலருக்கு தெரியாமலிருக்கலாம்.விடை தெரியாத 'சிதம்பர ரகசியங்கள்' வெளியானதா ?

மகாதீபம் ஏற்றுவதற்காக மலையின் உச்சியில் ஒரு ஐந்தரை அடி உயர கொப்பரை நிறுத்தப்படும். இவை கிட்டத்தட்ட சுமார் 90 கிலோ செம்பும், 110 கிலோ இரும்புச் சட்டங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இதில் 600 லிட்டர் நெய்யும், 2 மூட்டை பஞ்சும் 15 மீட்டர் காடா துணியும், இரண்டு கிலோ கற்பூரமும் பயன்படுத்தப்படும். இந்த அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டு வட்ட வடிவ இரும்புப் பாத்திரத்தில் நெய்யை ஊற்றி அதைக் கொப்பரை மீது வைத்து அகண்ட தீபம் ஏற்றப்படும். தொடக்கத்தில் மூன்று நாட்கள் ஏற்றப்பட்ட தீபம் நாளடைவில் பதினோரு நாட்கள் வரை ஏற்றப்படுகிறது.

ஆச்சரியமூட்டும் தீர்த்தங்கள் பற்றிய உண்மைகள்

ஆச்சரியமூட்டும் தீர்த்தங்கள் பற்றிய உண்மைகள்

மலைப் பிரகாரத்தில் சக்கர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலி தீர்த்தம், சிம்மத் தீர்த்தம், எம தீர்த்தம், சோண நதி, உண்ணாமுலை தீர்த்தம், வருண தீர்த்தம், கட்க தீர்த்தம், பாத தீர்த்தம், முலைப்பால் தீர்த்தம் என தீர்த்தங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் ஆலயத்துக்குள் இருக்கும் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமும் முதன்மையானவை ஆகும். அதேபோல, துர்க்கையம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம், அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக விளங்குகின்றது.

PC: Govind swamy

அம்மனே தவமியற்றிய பவழக்குன்று மலை... ஏன்?

அம்மனே தவமியற்றிய பவழக்குன்று மலை... ஏன்?

அன்னை உமாதேவி திருவண்ணாமலைக்கு வந்து இறைவனை நோக்கி தவம் செய்தார். அவர் தவமியற்றிய மலையே பவழக்குன்று என அழைக்கப்படுகின்றது. இம்மலை கிரிவலம் முடிக்கும் இடத்திற்கு முன்பாக, துர்க்கை அம்மன் சன்னிதியை ஒட்டிச் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இம்மலையிலும் ரமணர் சிறிது காலம் தவமியற்றியுள்ளார். இம்மலையைக் கண்டாச்சி புரம் அழகானந்தா சுவாமிகள் பவழக் குன்று மடம் அமைத்து பராமரித்து வந்தார்.

PC: Poetseer

விசேசமான கரும்புத் தொட்டில் வழிபாடு எதற்காக?

விசேசமான கரும்புத் தொட்டில் வழிபாடு எதற்காக?

குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த வழிபாட்டை செய்கின்றனர். ஏனென்றால்,உலக கட்டிடக்கலைக்கே சவால் விடும் 10 கோடி கிலோ கோயில் மர்மங்கள்இத்தலத்து இறைவன் வல்லாள மகாராஜனின் வேண்டு கோள்படி அவருக்கு மகனாகப் பிறந்து அருள் வழங்கியதால் குழந்தைப்பேறு தரும் தெய்வமாகப் போற்றப்படுகிறார். இதனால் குழந்தை வரம் பெற்றவர்கள் குழந்தையை கரும்பு தொட்டிலில் வைத்து ஆலயத்தைச் சுற்றி வருவது வழக்கம். இது அரிதான வேண்டுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

யார் அந்த கம்பத்து இளையனார்?

யார் அந்த கம்பத்து இளையனார்?

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ராஜகோபுரத்தை அடுத்து இடதுபுறம் கம்பத்து இளையனார் சன்னிதி அமைந்துள்ளது.


பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

விஜய நகர மன்னனால் கட்டப்பட்டது. பிரபு தேவமகாராஜன் முன்னிலையில், அரசவைக் கவிஞர் சம்பந்தாண்டான் அருணகிரியிடம் ஆணவ சவால் விடுத்தான். எவரது கவிக்கு சக்தி இருக்கிறதோ, அவர்களுக்கு இறைவன் காட்சி கொடுப்பான் என்பது. அருணகிரிநாதர் தன் கவிப்பாடலில் வைத்த வேண்டுகோளுக்கு இணங்கிய முருகப்பெருமான், கம்பத்தில் தோன்றி அருணகிரிநாதருக்கும் அடியார்களுக்கும் அருள்புரிந்தார் எனப் புராணம் கூறுகிறது. அதனால்தான் இவ்விறைவன் கம்பத்து இளையனார் என்று பெயர் பெறுகின்றார்.

PC: Adam63 -

இம்மலையில் இவ்வளவு மகிகை ஒளிந்துள்ளதா?

இம்மலையில் இவ்வளவு மகிகை ஒளிந்துள்ளதா?

பொதுவாக மலைமீது தான் இறைவன் குடியிருப்பது வழக்கம். ஆனால்
2020ல் என்னவாகும் உலகம் அதிர்ச்சியூட்டிய சித்தர் பெருமகன்

மலையே இறைவனாக இருப்பது திருவண்ணாமலையில் மட்டுமே காணப்படும் சிறப்பு. மலையின் உயரம் 2688 அடி. மலையின் சுற்றுப் பாதையின் 14 கிலோமீட்டர் ஆகும். கிரிவலப் பாதையின் பல இடங்களில் இருந்து மாறுபட்ட பல வடிவங்களில் மலை காட்சி தருவது குறிப்பிடத்தக்க அம்சம். அருணன் என்றால் சூரியன் எனப் பொருள். அசலம் என்றால் கிரி அல்லது மலை என்று பொருள். ஜோதி வடிவாக இறைவன் மலைஉருவில் காட்சி தருவதால் அருணன் அசலம் என்பது அருணாசலம் ஆனது.

PC: Govind Swamy

மலையில் உள்ள ஆச்சர்ய குகைகள்

மலையில் உள்ள ஆச்சர்ய குகைகள்

மலையின் மையப்பகுதியில் கந்தாஸ்ரமம், விருபாட்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்துக்குகை, சடைச்சாமி குகை, அருட்பால் குகை, ஆல மரத்துக் குகை, ரமணமகரிஷி குகை எனப் பல்வேறு குகைகள் அமைந்துள்ளன.

வெளிநாட்டவர் மத்தியில் பிரபலமான சுற்றுலாத் தலங்கள்!

அண்ணாமலை லிங்க வடிவில் இருப்பதாலும், சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கே உலா வருவதாலும், மலையைச் சுற்றும் பக்தர்களின் பிரச்சினைகளும், நோய்களும் தீரும் என்பது ஐதீகம். பவுர்ணமி தினம் மட்டுமல்ல. ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு என்பதால் அதற்கேற்ப மலையைச் சுற்றலாம்.

PC: Karthik Pasupathy Ramachandran

Read more about: travel, thiruvannamalai
Please Wait while comments are loading...