» » கரும்பை தின்ற அதிசய கல் யானை எங்கே தெரியுமா?

கரும்பை தின்ற அதிசய கல் யானை எங்கே தெரியுமா?

Written By: udhaya

மண்மணக்கும் மதுரையில் பல்வேறு அதிசயங்கள் நடந்திருக்கின்றன. அவையெல்லாம் இந்த உலகத்தின் கண்களுக்குப் புலப்படாமலும், சில என்னவென்றே தெரியாமலும் காணாமல் போயிருக்கின்றன.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த புகழ் பெற்றது மதுரை. அந்த காலத்திலேயே மதுரை இப்படி பேரும் புகழும் பெற்றதற்கு முக்கிய காரணங்களுள் ஒருவர் பாண்டிய மன்னர்கள்.

பாண்டியனின் ஆட்சி காலத்தில் தான் மதுரையில் இந்த அதிசயம் நடந்துள்ளது.

 கல் யானை கரும்பை தின்ற இடம் எங்கிருக்கிறது?

கல் யானை கரும்பை தின்ற இடம் எங்கிருக்கிறது?

கரும்பை தின்ற கல்லில் செதுக்கப்பட்ட யானை இருக்கும் இடம் நீங்கள் மிகவும் அறிந்த மதுரை மீனாட்சியம்மன் கோயில்தான்.

PC: Bernard Gagnon

மீனாட்சியம்மனின் மற்ற சிறப்புகள்

மீனாட்சியம்மனின் மற்ற சிறப்புகள்

மதுரை மீனாட்சியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாகும். அவரை தரிசிக்க பல்வேறு மாநிலங்களிலிருந்து மட்டுமின்றி வெளிநாடு வாழ் மக்களும் மதுரைக்கு வருகை தருகின்றனர். அப்படி பட்ட மதுரை மீனாட்சியம்மனின் சிறப்புகளை கொஞ்சம் பார்க்கலாம்

PC: Reji Jacob

ஒற்றுமை

ஒற்றுமை

மதுரை மாநகரில் பல்வேறு மதங்களை சார்ந்தோரும் ஒற்றுமையுடன் வசிக்கின்றனர். பல்வேறு இனத்தாரின் பாரம்பரிய அம்சங்கள் இந்நகரில் கலந்து வேரூன்றி கிடக்கின்றன.

மதநல்லிணக்கம்

மதநல்லிணக்கம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கோரிப்பாளையம் தர்க்கா மற்றும் செயின் மேரி கதீட்ரல் தேவாலயம் போன்றவை இங்குள்ள முக்கியமான ஆன்மீக அம்சங்களாகும்.

சுற்றுலா

சுற்றுலா

காந்தி மியூசியம், கூடல் அழகர் கோயில், காஜிமார் பெரிய மசூதி, திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, அழகர் கோயில், வைகை அணை மற்றும் அதிசயம் தீம் பார்க் போன்றவை மதுரை பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

PC: எஸ்ஸார்

கொண்டாட்டம்

கொண்டாட்டம்


சித்திரைத்திருவிழா மதுரை மாநகரின் முக்கிய திருவிழாவாக புகழ் பெற்றுள்ளது. இது ஏப்ரல் மே மாதங்களில் கொண்டாடப்படுகிறது. மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

PC: எஸ்ஸார்

கரும்பைத் தின்ற கல் யானை

கரும்பைத் தின்ற கல் யானை

இப்படிபட்ட இடத்தில் தான் அந்த அதிசயம் நடைபெற்றுள்ளது.

ஈசன் வழக்கம்போல் தன் திருவிளையாடல்களைக் காட்ட மாறுவேடம் பூண்டு எல்லாம் வல்ல சித்தராக மதுரைக்கு வந்தார்.

அப்போது மதுரையை ஆண்டவர் மன்னர் அபிஷேகப் பாண்டியன். இப்படி ஒரு சித்தரைப் பற்றி அறிந்ததும் சித்தரை சந்திக்க ஓடோடி சென்றார். தங்களின் பலத்தை நான் சோதிக்கவேண்டும் என்று கூறிய மன்னன், எடக்குமடக்காக இந்த யானையை கரும்பு சாப்பிட வைத்து உங்களை நிரூபியுங்கள் என்றார்.

உடனே கல் யானை கரும்பை தின்றது. இதிலிருந்து இந்த சித்தரின் மகிமையை புரிந்த மன்னர் மன்னிப்பு கேட்டார்.

எல்லாம் வல்ல சித்தர்’ சன்னிதி எங்கே உள்ளது?

எல்லாம் வல்ல சித்தர்’ சன்னிதி எங்கே உள்ளது?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சுந்தரேஸ்வரர் சன்னிதியின் சுற்றுப்பாதையில் துர்க்கை சன்னிதிக்கு அருகில் ‘எல்லாம் வல்ல சித்தர்' சன்னிதி உள்ளது.

Read more about: travel, temple