Search
  • Follow NativePlanet
Share
» »பிரமிடுக்குள் ஐம்பொன் நடராஜர் சிலை - உலக சுற்றுலாப்பயணிகள் வியக்கும் அதிசயம்

பிரமிடுக்குள் ஐம்பொன் நடராஜர் சிலை - உலக சுற்றுலாப்பயணிகள் வியக்கும் அதிசயம்

By Udhaya

உலகில் இருக்கும் அதிசயங்களில் மிக முக்கியமாக குறிப்பிடவேண்டியது பிரமிடு. தனக்குள் இருக்கும் ரகசியத்தை இன்னும் வெளியில் காட்டாமல் இருக்கிறது அந்த பிரமிடு. எத்தனையோ பேர் முயன்றும் இன்றும் அதுகுறித்த தகவல்களை பெறமுடியவில்லை. அதன் மர்மங்களை வெளிக்கொண்டு வர இயலவில்லை.

இந்த பிரமிடுக்குள் என்னென்ன இருக்கின்றன, அவை குறித்த தகவல்கள் என்னவென்றே தெரியாத நிலையில், அறிவியல் பூர்வமாக பிரமிடுக்குள் நடராஜர் கோயில் இருந்தால் உங்களுக்கு ஆச்சர்யமாகத் தானே இருக்கும். ஏற்கனவே நடராசரின் அறிவியல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா. சிதம்பர ரகசியங்கள் மாதிரி பிரமிடுக்குள் இருக்கும் நடராஜரும் ஒரு புதிரை நமக்குள் இடுகிறார், வாருங்கள் என்னவென்று அறிந்துகொள்வோம்.

 நடராசர் தரிசனம்

நடராசர் தரிசனம்

நடராசர் தரிசனம் என்பது சிவ வழிபாடுகளிலேயே ஆகச்சிறந்தது என்கிறார்கள் பக்தர்கள். அதிலும் அறிவியல் பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ள நடராசர் வழிபாடு மிகச்சிறந்தது

பிரமிடுக்குள் சென்று நடராசரைத் தரிசித்துவிட்டு, அங்கேயே அமர்ந்து தியானம் செய்துவிட்டு வந்தால் எப்படி இருக்கும். என்ன ஒன்றும் விளங்கவில்லையா?

பிரமிடுக்குள் இருக்கும் நடராசர் சிலையை பூசித்து வருபவர்களிடம் கேட்டால் புரிந்துவிடப்போகிறது. அதற்கு நாம் பிரமிடுக்குள் போகவேண்டும்.

Official Site

 சென்னையிலிருந்து

சென்னையிலிருந்து

சென்னையிலிருந்து பேருந்தின் மூலமாக வெறும் 4 மணி நேரத்தில் இந்த பிரமிடு நடராஜர் கோயிலை அடைந்துவிடலாம்.

என்ன இது.. சென்னையிலிருந்து எப்படி நான்கு மணி நேரத்தில் எகிப்து செல்லமுடியும் என்கிறீர்களா. நீங்க தவறாக புரிந்துகொண்டீர்கள். நாம் பேசிக்கொண்டிருப்பது சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள பிரமிடு பற்றி... நீங்களும் வாங்க அத பத்தி முழுசா தெரிஞ்சிக்கலாம்

Official Site

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

சென்னையிலிருந்து 164கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த இடம். இது புதுச்சேரியைச் சார்ந்தது. இந்த ஊருக்கு புதுக்குப்பம் என்று பெயர்.

வழித்தடங்கள்

இந்த பகுதிக்கு செல்ல மூன்று வழித்தடங்கள் உள்ளன.

1 சென்னை மாமல்லபுரம் புதுக்குப்பம்

2 சென்னை மேல்மருவத்தூர் புதுக்குப்பம்

3 சென்னை காஞ்சிபுரம் புதுக்குப்பம்

மேலமருவத்தூர் வழியாக செல்வது சிறந்தது என்றாலும், கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றால் எளிதில் சென்றடையலாம்.

அருள்மிகு காரணேஸ்வர நடராசர் திருக்கோயில்

அருள்மிகு காரணேஸ்வர நடராசர் திருக்கோயில்

புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் புதுக்குப்பம் எனும் கடற்கரைக் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த காரணேஸ்வர நடராசர் திருக்கோயில்.

கடலின் ஓசையை பாடலுக்குரிய இசையாகக் கொண்ட தகிடததுமி ஆட்டம் ஆடுகிறார் நடராசர். உண்மையில் சிவபெருமானின் நடன உற்சவமே நடப்பதைப் போன்றதொரு உணர்வு. அந்த அற்புதக் காட்சியை நாம் தரிசிக்க இந்த பிரமிடுக்குள் செல்லவேண்டும்.

Official Site

அமைப்பு

அமைப்பு

மிகவும் அதிக வலிமையான செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டது இந்த பிரமிடு கோயில். இது பார்ப்பதற்கு எகிப்து நாட்டின் பிரமிடு போலவே அச்சு அசலாக இருக்கும். இது 50டிகிரி கோணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடற்கரை மணல் கொட்டிக்கிடக்கும் அழகில் நடுவில் இந்த பிரமிடு மிக அழகாக காட்சிதருகிறது. சற்று தொலைவில் ஏகப்பட்ட செடிகள், கொடிகள், மரங்கள் அழகாக காட்சிதருகின்றன.

Official Site

கருவறை

கருவறை

இந்த கோயிலின் கருவறையில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட நடராசர் பிரபஞ்ச நடன கோலத்தில் காட்சி தருகிறார்.

நடராசரின் முன்பு கயிலாசபதி லிங்கமும், சிவகாமி தேவியும், விநாயகர் மற்றும் முருகர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

கோயிலுக்கு வெளியில் நந்தியுடன் கூடிய பிரம்மாண்ட சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது.

Official Site

 கட்டியது யார் தெரியுமா?

கட்டியது யார் தெரியுமா?

ஜம்மு காஷ்மீர் அரச வம்சத்தைச் சேர்ந்தவரும், முன்னால் மத்திய அமைச்சரும், இப்போதைய ஆரோவில்லின் தலைவருமான டாக்டர் கரண்சிங் இந்த கோயிலைக் கட்டியுள்ளார்.

பூமியின் பரப்பில் விழும் காஸ்மிக் கதிர்களை ஒன்று திரட்டி, அப்படியே உள்வாங்கும் திறன் பிரமிடுக்கு உண்டு. இதை அறிந்துதான் இந்த கோயிலை பிரமிடு வடிவில் அமைத்திருக்கிறார்கள்.

Official Site

பிரெஞ்சு போர் நினைவுச்சின்னம்

பிரெஞ்சு போர் நினைவுச்சின்னம்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள் என்று பார்த்தால், பிரெஞ்சு போர் நினைவுச்சின்னம் புதுச்சேரியில் அமைந்துள்ளது. இது மிகவும் புகழ்பெற்றது.

முதல் உலகப் போரில் இறந்த பிரெஞ்சு வீரர்களின் நினைவாக பாண்டிச்சேரியில் கட்டப்பட்டுள்ள இடம் தான் பிரெஞ்சு போர் நினைவுச் சின்னமாகும். 1971-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நினைவுச் சின்னம், ஒவ்வொரு ஆண்டும், பாஸ்டில் தினமான ஜுலை 14-ம் நாள் (பிரெஞ்சுப் புரட்சி நடந்த நாள்) மின்னும் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்த நாளில் தான், இறந்து போன பிரெஞ்சு வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படும். இன்றும் நடந்து வரும் இந்த பாரம்பரிய மரியாதை, பாண்டிச்சேரிக்கும், பிரான்சிற்கும் இடையேயான ஆழமான தொடர்பை விளக்குவதாக உள்ளது..

Rafimmedia

ராஜ் நிவாஸ்

ராஜ் நிவாஸ்

தற்பொழுது ராஜ் நிவாஸ் என்பது பாண்டிச்சேரி அரசின் லெப்டினென்ட் ; கவர்னரின் அதிகாரப்பூர்வமான வசிப்பிடமாகும். ராஜ் நிவாஸ் என்றால் இந்தியில் அரசாங்கத்தின் வீடு என்று பொருளாகும்.ஒரு காலத்தில் பிரெஞ்சு ஆளுநராக இருந்த ஜோசப் பிரான்கோயிஸ் டூப்ளேவின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாக இருந்த இடம் ராஜ் நிவாஸ் ஆகும்.

மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமான ராஜ் நிவாஸ், பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த பாண்டிச்சேரி நகரத்தின் சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்களை கண்ட சாட்சியாக இருந்த இடமாகும்.

Jean-Pierre Dalbéra

தூய இருதய கிறிஸ்து தேவாலயம்

தூய இருதய கிறிஸ்து தேவாலயம்

பாண்டிச்சேரியிலுள்ள புகழ் பெற்ற மற்றும் முக்கியமான தேவாலயங்களில் ஒன்று தூய இருதய கிறிஸ்து தேவாலயமாகும். கோதிக் கட்டிடக்கலையையொட்டிய வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம் வருடம் முழுவதும் பார்வையாளர்களை வர வைக்கும் இடமாகும்.

இந்த தேவாலயத்தில் இருக்கும் கண்ணாடி ஜன்னல்களில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் காலங்களை பிரதிபலிக்கும் வகையில் வரையப்பட்டிருக்கும் கண்ணாடி ஓவியங்கள் மிகவும் கவனிக்கத் தக்க அம்சங்களாகும்.

technicolorcavalry

தாவரவியல் பூங்கா

தாவரவியல் பூங்கா

1826-ம் ஆண்டு சி.எஸ்.பெர்ரோடெட் என்பவரால் பாண்டிச்சேரி தாவரவியல் பூங்கா மற்றும் மீன் காட்சியகம் நிறுவப்பட்டது. இந்த பூங்காவில் இருக்கும் அரிய தாவர இனங்கள் அறிவியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கவர்ந்து இழுப்பதாக உள்ளன. 22 ஏக்கர் நிலப்பரப்பளவில் விரிந்துள்ள இந்த தாவரவியல் பூங்கா பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளிவரும் தெற்கு புற நுழைவாயிலுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது. 1960-ம் ஆண்டு முதல் பாண்டிச்சேரியின் தோட்டக்கலைத்துறையின் முக்கியமான மையமாக இந்த பூங்கா உள்ளது.

Ghost Particle

 மீன் காட்சியகம்

மீன் காட்சியகம்

இதே பூங்காவில் அமைந்துள்ள மீன் காட்சியகத்தில் உள்ள பல்வேறு வகையிலான மீன் வகைகள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புகழ் பெற்றவையாகும். இங்கு வந்து செல்வது பார்வையாளருக்கு நீர் வாழ்க்கையைப் பற்றிய தனித்தன்மையான அனுபவத்தைத் தருவதாக இருக்கும். இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான ரயில் வண்டி, நடனமாடும் நீரூற்று, சில அரிய வகை அலங்கார மீன்களையுடைய காட்சியகம் மற்றும் 6 நீரூற்றுகள் உள்ளன.

David Stanley

பாண்டிச்சேரி அருங்காட்சியகம்

பாண்டிச்சேரி அருங்காட்சியகம்

பாண்டிச்சேரி வருபவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாக பாண்டிச்சேரி அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்திலுள்ள ஓவியக் காட்சிப் பகுதியில் சில சிற்பங்களும், அரிக்கமேடு பகுதிகளில் கண்டறியப்பட்ட ரோமானிய தொல்பொருள் சின்னங்களும் வைக்க்பட்டுள்ளன. காலத்தால் அழியாத தொல்பொருள் சின்னங்களின் வைப்பறையாகவே இந்த மியூசியம் உள்ளது. இந்த மியூசியத்தில் சோழர்கள் மற்றும் பல்லவ மன்னர்களின் அரிய பித்தளை மற்றும் கற்சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கே பாண்டிச்சேரி பகுதிகளில் சேகரிக்கப்பட்ட கூடுகளின் தொகுப்புகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த மியூசியத்திற்கு வரும் பார்வையாளர்கள் காலனீய ஆதிக்கத்தின் சுவடுகளை அறிந்து கொள்ளவும் மற்றும் பிரெஞ்சு காலனி ஆட்சி முறையைப் பற்றி தெளிவாக புரிந்து கொள்ளவும் முடியும்.

offl

 ஆரோவில் நகரம்

ஆரோவில் நகரம்

50 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களையுடைய இந்த நகரம் ஒரு சர்வதேச நகரமாகும். சாலை வழியாக எளிதில் அடையும் வகையில் இருக்கும் ஆரோவில் கலாச்சார அமைதி மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக உள்ளது. மக்களால் 'அன்னை' என்று அன்புடன் அழைக்கப்படும் மிர்ரா அல்பாஸ்ஸா என்ற வெளிநாட்டவரால் நிறுவப்பட்ட ஆரோவில் நகரம், ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டியினால் 1968-ம் ஆண்டு துவங்கப்பட்ட திட்டமாகும். நாடு, கலாச்சாரம் முதலிய கட்டுப்பாடுகள் இல்லாமல் அனைத்து நாட்டைச் சேர்ந்தவர்களும் ஒரே இடத்தில் ஒருமைப்பாடு மற்றும் உலகளாவிய அமைதியுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் ஒன்றாக வாழச் செய்து அதன் மூலம் அமைதி மற்றும் வளர்ச்சியை உருவாக்குவதே இந்த நகரம் உருவாக்கப்பட்டதன் நோக்கமாகும்.

Santoshnc

 பாண்டிச்சேரி கடற்கரை

பாண்டிச்சேரி கடற்கரை

வீதி உலா கடற்கரை என்று அழைக்கப்படட பாண்டிச்சேரி கடற்கரை, பாண்டிச்சேரியின் முதன்மையான பார்வையிடங்களில் ஒன்றாகும். அரியான்குப்பம் பகுதியில் புதிய துறைமுகம் கட்டப்பட்ட பிறகு ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக ஒரு காலத்தில் அழகிய கடற்கரையாக இருந்த இதன் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இந்த வீதி உலா கடற்கரையில் தற்பொழுது கற்பாளங்கள் செயற்கை சுவர்களாக வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த கடற்கரையில் நடந்து செல்லவோ, நீச்சலடிக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரெஞ்சு மொழியல் 'லா பாஃக்ஸ்-ப்ளேஜ்' என்ற பெயருக்கு 'பொய்யான கடற்கரை' என்று அர்த்தம் உண்டு, இதே பெயரில் ஒரு கடற்கரையொன்று இந்த கடல் சுவர்களுக்கு மேலே ஏற்படுத்தப் பட்டுள்ளது.

Karthik Easvur

Read more about: travel temple pondicherry
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more