» »தமிழகத்திலுள்ள நாக கோயில்களுக்கும் ஒரு பயணம்

தமிழகத்திலுள்ள நாக கோயில்களுக்கும் ஒரு பயணம்

Posted By: Udhaya

உங்களுக்கு நாக தோஷம் இருக்கா? அப்ப இந்த கோயில்களுக்கு போங்க

தமிழகத்தின் அதி சிறந்த நாகதலங்கள் என்பவை மூன்று இடங்களாகும். அவை பற்றியும் அவற்றின் அற்புதங்கள் பற்றியும் இப்பதிவில் காண்போம்.

கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம், புதுக்கோட்டை அருகேயுள்ள பேரையூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோயில் ஆகியன தமிழ் நாட்டின் முக்கிய நாக கோயில்களாகும்.

திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்

திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது.

இத்தலத்தின் அருகில் வைணவத் தலமான திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன்) திருக்கோயிலும் உள்ளது.

இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம்.

இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும்

தமிழகத்திலுள்ள நாக கோயில்களுக்கும் ஒரு பயணம்

PC: Rsmn

எப்படி செல்லலாம்?

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது.

பேரையூர் நாகநாதசுவாமி கோயில்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் பேரையூர் என்னும் கிராமத்தில் நாகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது.

இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் நாகநாதசுவாமி, இறைவி பிரகதாம்பாள்.

கோயில் வளாகத்தில் பக்தர்களால் காணிக்கையாக தரப்பட்ட 6 அங்குலம் முதல் 2 அடி வரையிலான கருங்கல்லால் ஆன நாகங்களைக் காணலாம். அவ்வாறு வழங்கப்பட்ட காணிக்கைகளில் பலவற்றை கோயில்களின் சுற்றுச்சுவர்களில் அமைத்துள்ளனர். இயற்கை வழிபாட்டின் ஆரம்ப கால நிலையில் நாக வழிபாடும் அமையும்.

எப்படி செல்லலாம்?

புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் புதுக்கோட்டையில் இருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

நாகராஜா கோவில்

தமிழகத்திலுள்ள நாக கோயில்களுக்கும் ஒரு பயணம்

PC: Infocaster

நாகராஜா கோவில் குமரி மாவட்ட தலைநகர் நாகர்கோயிலில் உள்ளது. இக்கோயிலின் பெயரிலேயே ஊர் நாகர்கோவில் என்றழைக்கப்படுகிறது.

இது கேரள பாரம்பரியக் கோவில் ஆகும். இங்கு மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகராஜர் அருள்பாலிக்கிறார்.

இந்த கோவிலைச் சுற்றி ஏராளமான பாம்புச் சிலைகள் உள்ளன. பொதுமக்கள் ஆவணிமாதத்தில் இச்சிலைகளுக்குப் பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர்.

இக்கோவிலின் கருவறையின் மேல் ஓலை வேயப்பட்டு உள்ளது. இது வேறு எந்தக் கோவிலிலும் பார்க்கமுடியாத சிறப்பு அம்சமாகும். அது மட்டுமல்ல இந்தக் கோவிலின் கருவறை மண் ஆறு மாதம் கருப்பாகவும் ஆறு மாதம் வெண்மையாகவும் காணப்படுகிறது. இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இக்கோவிலில் அருள்பாலிக்கும் பாலமுருகனுக்கு ஆண்டு தோறும் சஷ்டி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூரன் பாடும் நடைபெறுகிறது.

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்