Search
  • Follow NativePlanet
Share
» »நாமகிரி மலை மர்மங்கள் - கோட்டையில் நிகழும் அதிசயங்கள்

நாமகிரி மலை மர்மங்கள் - கோட்டையில் நிகழும் அதிசயங்கள்

நாமகிரி மலை மர்மங்கள் - கோட்டையில் நிகழும் அதிசயங்கள்

By Udhay

16-வது நூற்றாண்டில் ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்ட நாமக்கல் துர்கம் கோட்டையானது, நாமகிரி மலையின் உச்சியில் உள்ளது. இந்த கோவிலுக்குள் ஒரு பழைய அழிந்து போன விஷ்ணுவின் கோவிலும் உள்ளது. இந்த கோட்டையின் பரப்பளவு 1.5 ஏக்கராகும். கோட்டையின் தென் மேற்கு பகுதியில் உள்ள குறுகலான படிக்கட்டுகளின் வழியே இந்த கோட்டையை நாம் அடைய முடியும்.

 இரு புறத்திலும் கோவில்கள்

இரு புறத்திலும் கோவில்கள்

நாமகிரி மலையின் இரு புறத்திலும் நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் ரங்கநாத சுவாமி கோவில் ஆகியவை உள்ளன. இந்த கோவில்களில் இருக்கும் சிலைகள் மற்றும் இதர உருவங்கள் இங்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும் புதிய பாறைகளிலிருந்து வடிக்கப்பட்டிருப்பதால் அவை இன்றளவும் நிலைத்திருக்கின்றன. இந்த பாறைகளிலிருந்து உற்பத்தியாகும் எட்டு நீர்ச்சுனைகளையொட்டி தாமரை மலர்களும் வளர்ந்து வருகின்றன.

Ssriram mt

 திப்பு மறைந்திருந்த கோட்டை

திப்பு மறைந்திருந்த கோட்டை

திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த கோட்டையில சில காலம் மறைந்திருந்ததாக சொல்லப்படுகிறது. பிறகு இந்த கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள். இந்த கோட்டையின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கட்டிடக்கலை அமைப்புகள் இதனை மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது.
Vijayganesh.s1996

 கற்கோட்டைக்கு எப்படி செல்வது

கற்கோட்டைக்கு எப்படி செல்வது

நாமக்கல் மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த கற்கோட்டையை அடைய தரையிலிருந்து சுமார் அரை மணி நேரம் உயரே ஏறிச் செல்ல வேண்டும். நாட்டின் மிகப் பிரபலமானதாகவும் மற்றும் பாதுகாப்பான கோட்டையாகவும் கருதப்படும் இந்த கோட்டை 75 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இந்து கோவிலும், முஸ்லீம் மசூதியும் ஒருங்கே

இந்து கோவிலும், முஸ்லீம் மசூதியும் ஒருங்கே


9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டையில் இந்து கோவிலையும், முஸ்லீம் மசூதியையும் ஒருங்கே காண முடியும். பக்தர்கள் இந்த கோவிலிலும் மற்றும் மசூதியிலும் வழிபடுவதற்காகவே மலையேறி வருவார்கள். இந்த மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கிரிவலம் மிகவும் புகழ் பெற்றதாகவும்

கூலிப்பட்டி முருகன் கோவில்

கூலிப்பட்டி முருகன் கோவில்

கூலிப்பட்டி முருகன் கோவில் நாமக்கல் நகரிலிருந்து 3 கிமீ தொலைவில் துறையூர் செல்லும் வழியில் உள்ளது. ஒரு சிறிய மலையின் மீது அமைந்திருக்கும் கூலிப்பட்டி முருகன் கோவில் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக இருக்கிறது. இந்த பழமையான, கம்பீரமான கோவிலுக்கு வந்து செல்வது உங்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும்.

Ssriram mt

ஆஞ்சநேயர் கோவில்

ஆஞ்சநேயர் கோவில்


புனிதப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலாகும். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது. இங்கே எதிரில் இருக்கும் நரசிம்மர் கோவிலிலிருந்து 100 மீட்டர் தொலைவிலேயே நரசிம்மரைப் பார்த்தபடி ஆஞ்சநேயர் துதித்திருக்கிறார். இந்த கோவிலின் கவர்ச்சி அம்சமாக 13 அடி உயரத்தில் நின்று கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் சிலையை சொல்லலாம். ஆஞ்சநேயர், நரசிம்மரை நேரடியாக பார்க்கும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டிருக்கிறது. இந்த ஆஞ்சநேயர் சிலைதான், கோட்டையையும், அங்கு வசித்து வரும் மக்களையும் காப்பாற்றும் தெய்வமாக நம்பப்பட்டு வருகிறது.

Ssriram mt

Read more about: travel forts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X