Search
  • Follow NativePlanet
Share
» »கிரிஸ் கெய்லின் ஊருக்கு ஒரு சுற்றுலா போகலாம் வாங்க..

கிரிஸ் கெய்லின் ஊருக்கு ஒரு சுற்றுலா போகலாம் வாங்க..

By Naveen

பொதுவாக சச்சின்,தோனி, கங்கூலி போன்ற இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு ஆரவாரமான வரவேற்பு கிடைப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஆனால் ஐ.பி.எல் வருகைக்கு பிறகு இந்திய அணிக்காக விளையாடாத இந்தியாவில் மிகப்பிரபலமான வீரராக உருவெடுத்திருக்கிறார் T20 கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் கிரிஸ் கெயில்.

பெங்களூர்வை சேர்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் பெங்களூரின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார் என்றே சொல்லலாம். அப்படி கிரிஸ் கெயிலின் இரண்டாவது சொந்த ஊராக மாறிவிட்ட பேரழகுமிக்க பெங்களூரு நகரை கொஞ்சம் சுற்றிப்பார்க்கலாம் வாருங்கள்.

 UB City mall :

UB City mall :

பெங்களூரு நகரின் மையத்தில் அமைந்திருக்கும் UB City Mall நவீன பெங்களூருவின் தவிர்க்கமுடியாத அடையாளம். தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு சொந்தமான இந்த வணிக வளாகம் ஆடம்பர வாழ்கையின் உச்சம் எனலாம்.

சர்வதேச பிராண்ட் கடைகள் மற்றும் உணவகங்கள், பப்புகள் இங்கே இருக்கின்றன.

Ramesh NG

 UB City mall :

UB City mall :

பெங்களூரு நகரின் அதிமுக்கிய பகுதியில் கப்பன் பார்க் அருகில் இந்த மால் இருக்கிறது. சில ஆயிரங்களையாவது செலவு செய்யும் நிலையில் இருந்தாலே தவிர இங்கே நுழையவே கூடாது.

இங்கிருக்கும் உணவகங்களில் இருவர் சாப்பிட குறைந்தது ரூ.3000 ஆகும். UB Cityயின் மேல் தளத்தில் இருக்கும் பப் பெங்களூருவின் மிகப்பிரபலமான இடங்களில் ஒன்றாகும்.

Ming-yen Hsu

 UB City mall :

UB City mall :

UB Citymallஇன் நுழைவு வாயில் !!

solarisgirl

சிவாஜி நகர்:

சிவாஜி நகர்:

பெங்களூருவில் மாலை நேரத்தில் மிகசுவையான உணவுகள் கிடைக்கும் இடமென்றால் அது சிவாஜி நகர் தான். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் எங்கு பார்த்தாலும் கையேந்தி பவன்களும், ஹோட்டல்களும் இருக்கின்றன.

ஷவர்மா, கபாப், பீப் சில்லி, பரோட்டா போன்றவை உணவுப்பிரியர்களை சுண்டியிழுக்கின்றன.

Abhinay Omkar

சிவாஜி நகர்:

சிவாஜி நகர்:

ரம்ஜான் நேரத்தில் இந்த இடமே ஒரு பெரிய திறந்தவெளி உணவகம் போல காட்சியளிக்கும்.

Abhinay Omkar

கோரமங்களா:

கோரமங்களா:

பெங்களூருவின் மிக யூத்தான பகுதி என்றால் சந்தேகமே இல்லாமல் அது கோரமங்களா தான். St. ஜான்ஸ், ஜோதி நிவாஸ் போன்ற பெங்களூருவின் மிகமுக்கியமான கல்லூரிகள் இங்கே அமைந்திருக்கின்றன.

அதோடு 'Start-up' என்னும் புதிய தொழில்முனைவோருக்கான தலைநகரமாகவும் கோரமங்களா இருக்கிறது.

Ashwin Kumar

கோரமங்களா:

கோரமங்களா:

கோரமங்களாவில் ஒரு பொன் மாலை பொழுதில் !!

Pradeep

எலக்ட்ரானிக் சிட்டி:

எலக்ட்ரானிக் சிட்டி:

2000ங்களில் பெங்களூருவில் ஏற்ப்பட்ட மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக நகருக்கு வெளியே ஐ.டி நிறுவனங்களுக்காகவே பிரத்யேகமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் தான்எலக்ட்ரானிக் சிட்டி ஆகும்.

இங்கே தான் இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

Navaneeth KN

எலக்ட்ரானிக் சிட்டி:

எலக்ட்ரானிக் சிட்டி:

எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள Infosys நிறுவன வளாகத்தின் ஒரு பகுதி !!

Nirmal Natarajan

கப்பன் பார்க்:

கப்பன் பார்க்:

பெங்களூருவுக்கு 'கார்டன் சிட்டி' என்ற பெயருண்டு. கிட்டத்தட்ட ஒவ்வொரு வீதியிலும் தவறாமல் ஒரு பூங்கா இருப்பதே இதற்கு காரணமாகும்.

பெங்களூரு நகரில் மையத்தில் இருக்கும் கப்பன் பார்க் நூற்றாண்டுகள் பழமையானதாகும். பெங்களூருவில் இருக்கும் மிகப்பெரிய பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும்.

John Hoey

கப்பன் பார்க்:

கப்பன் பார்க்:

நகரின் மையத்தில் அமைந்திருக்கும் இந்த பூங்காவில் அதிகாலை நேரத்தில் ஏராளமானவர்கள் நடைபயிற்சி செய்வதற்காக வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

சுத்தமான இயற்கை காற்றை சுவாசித்தபடி இங்கே நேரம் செலவிடுவது நிச்சயம் உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தை அளிக்கும்.

Anoop Kumar

பிரிகேட் ரோடு:

பிரிகேட் ரோடு:

சென்னைக்கு தி.நகர் இருப்பது போல பெங்களூருவின் ஷாப்பிங் மையம் தான் இந்தபிரிகேட் ரோடு ஆகும். மகாத்மா காந்தி சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்தபிரிகேட் ரோட்டில் அனைத்து முன்னணி பிராண்டட் கடைகளும் இருக்கின்றன.

Gopal Vijayaraghavan

பிரிகேட் ரோடு:

பிரிகேட் ரோடு:

பரபரப்பான பிரிகேட் ரோடு !!

Ashwin Kumar

பெங்களூரு:

பெங்களூரு:

அடுத்தமுறை நீங்கள் பெங்களூரு வருவதாக இருந்தால் நிச்சயம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை சுற்றிப்பார்க்க மறந்துவிடாதீர்கள் .

Christine und Hagen Graf

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+