Search
  • Follow NativePlanet
Share
» »நஞ்சன்கூடு எனும் அழகிய சுற்றுலாத் தளம்!

நஞ்சன்கூடு எனும் அழகிய சுற்றுலாத் தளம்!

By Udhaya

கடல் மட்டத்திலிருந்து 2155 அடி உயரத்தில் கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சன்கூடு தன் சிறப்பான பண்பாட்டு மற்றும் பாரம்பரிய பின்னணிக்கு புகழ் பெற்றுள்ளது. ஆதியில் கங்க வம்சத்தினரால் ஆளப்பட்ட இந்த நகரம் பின்னர் ஹொய்சள வம்சத்தினராலும் அவர்களைத் தொடர்ந்து மைசூர் உடையார்களாலும் ஆளப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கப்பட்டணாவை ஆண்ட மன்னர்களான ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் இந்த நகரத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்துள்ளனர். இந்த நகரத்தைப் பற்றிதான் நாம் இப்போது காணவிருக்கிறோம்.

நஞ்சுண்டேஸ்வரரின் பெயர்

நஞ்சுண்டேஸ்வரரின் பெயர்

நஞ்சன்கூடு நகரம் பற்றிய சில தகவல்கள் இந்த நகரத்தின் முக்கிய தெய்வமாகிய நஞ்சுண்டேஸ்வரரின் பெயரிலேயே இது நஞ்சன்கூடு என்றழைக்கப்படுகிறது. பூலோகத்திலுள்ள உயிர்களைக் காப்பதற்காக ஆலாகால விஷத்தை அருந்திய சிவபெருமான் இங்கு நஞ்சுண்டேஸ்வர அவதாரமாக குடிகொண்டுள்ளார். மேலும் இந்த நஞ்சன்கூடு ஸ்தலம் தக்ஷிண காசி என்றும் அறியப்படுகிறது. இங்குள்ள நஞ்சுண்டேஸ்வரருக்கு பிணிகளை தீர்க்கும் சக்தி இருப்பதாக ஐதீகம்.

Prof tpms

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

இது தவிர ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி மடம் மற்றும் பரசுராம க்ஷேத்திரம் என்ற இரண்டு ஆன்மிக ஸ்தலங்களும் நஞ்சன்கூடு நகரத்தில் முக்கிய அம்சங்களாக உள்ளன. ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமியின் பிரசித்தமான சிலையை இங்கு நஞ்சன்கூடு மடத்தில் காணலாம்.

Prof tpms

எப்படி செல்வது

எப்படி செல்வது

பெங்களூரிலிருந்து 163 கி.மீ தூரத்திலும் மைசூரிலிருந்து 30 கி.மீ தூரத்திலும் உள்ள இந்த நஞ்சன்கூடு நகரம் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் எளிதில் அடையும்படியாக அமைந்துள்ளது. கோயில் நகரமாக மட்டுமல்லாமல் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பொருளாதார மையமாகவும் இது மாறியுள்ளது.

Suraj

ஸ்ரீகண்டேஸ்வர்

ஸ்ரீகண்டேஸ்வர்

நஞ்சன்கூடு நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்குள்ள முக்கிய அம்சமான நஞ்சுண்டேஸ்வர் கோயிலை தரிசிப்பது முக்கியமாகும். இது ஸ்ரீகண்டேஸ்வர் என்றும் அறியப்படுகிறது. சிவபெருமானுக்கான கோயிலான இது திராவிட சிற்பக்கலை பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.புராணக்கதைகளின்படி யுகம் யுகமாக சிவபெருமான் இந்த திருத்தலத்தில் உறைவதாக நம்பப்படுகிறது. கங்க மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் ஹொய்சள வம்சத்தினரால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்ற மன்னர்களும் இந்த கோயிலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர்.

Prof tpms

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

திப்பு சுல்தானின் யானை ஒன்று நோய்வாய்ப்பட்டபோது இந்த நஞ்சன்கூடு ஸ்தலத்தில் பிராத்தித்ததன் மூலம் குணமடைந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.உள்ளூர் மக்கள் இன்றும் இந்த கோயில் தெய்வத்தின் பிணி தீர்க்கும் சக்தியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நஞ்சுண்டேஸ்வர் கோயில் தேர்த்திருவிழாவின்போது பெருமளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். வருடத்தில் இரண்டு முறை நடத்தப்படும் இந்த தொட்ட ஜாத்ரே திருவிழாவின் போது கணபதி, பார்வதி தேவி, ஸ்ரீகண்டேஷ்வர், சுப்ரமண்யர், சண்டிகேஷ்வரர் ஆகிய கடவுளரின் சிலைகள் ஐந்து வெவ்வேறு தேர்களில் வைக்கப்பட்டு விசேஷ பூஜைக்குப்பின் ஊர்வலமாக எடுத்துவரப்படுகின்றன.

Naveen

 பரசுராம க்ஷேத்திரம்

பரசுராம க்ஷேத்திரம்

நஞ்சன்கூடு நகருக்கு பயணம் செய்யும் பயணிகள் இங்கு அருகிலுள்ள பரசுராம க்ஷேத்திரம் எனும் ஸ்தலத்துக்கும் விஜயம் செய்யலாம். இது கபிலா மற்றும் கௌண்டின்யா ஆறுகள் சங்கமிக்கும் இடமாகும். இங்கு பரசுராமர் தன் தாயின் தலையை துண்டித்த பாவத்தை கழுவி மனச்சாந்தி பெற்றதாக நம்பப்படுகிறது. மேலும் பரசுராமரின் கோடரி சிவனின் தலையில் தவறுதலாக பட்டுவிட்டதால் வருந்திய பரசுராமரிடம் சிவன் தனக்கு இவ்விடத்தில் ஒரு கோயிலைக்கட்டி வழிபடுமாறு உத்தரவிட்டதாக ஐதீகமாய் நம்பப்படுகிறது. பரசுராம க்ஷேத்திரத்துக்கு வருகை தராமல் நஞ்சன்கூடு பயணம் முற்றுப்பெறாது என்று சொல்லும் வகையில் இது ஆன்மீக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Prof tpms

நஞ்சன்கூடு பாலத்தை

நஞ்சன்கூடு பாலத்தை

நஞ்சன்கூடு நகருக்கு பயணம் செய்யும் பயணிகள் இந்த நஞ்சன்கூடு பாலத்தை பார்ப்பது அவசியம். 1735 ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் ரயில் மற்றும் இதர வாகனங்கள் அருகருகே செல்லும்படி இது அமைந்துள்ளது. இந்திய அரசாங்கம் தற்போது இந்த பாலத்தை புராதன சின்னமாக அறிவித்துள்ளது.

Prof tpms

ராகவேந்திரஸ்வாமி மடம்

ராகவேந்திரஸ்வாமி மடம்

நஞ்சன்கூடுக்கு வரும் பயணிகள் இந்த ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி மடத்துக்கும் நேரம் இருந்தால் விஜயம் செய்யலாம். இது பிரதீக சன்னிதி என்றும் அழைக்கப்படுகிறது. வழக்கமாக காணப்படும் பிருந்தாவனத்துக்கு பதிலாக இங்கு ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமியின் சிலையையே இந்த மடத்தில் பார்க்க முடிகிறது. ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமியின் ஒரே ஒரு சிலை வடிவம் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. ஸ்ரீ மடாச்சாரியாரின் ஜீவசமாதிக்குப்பின் ஷீ ராயர மடத்தை சேர்ந்த ஷீ சுஜானந்த தீர்த்தரு இந்த மடத்தின் பொறுப்பில் 1836 -61ம் ஆண்டுகளில் இருந்துள்ளார். பக்தர்கள் இங்குள்ள பஞ்ச பிருந்தாவனத்தையும் பார்க்கலாம். இங்கு சுஜானேந்திர தீர்த்தர், சுபோதேந்திர தீர்த்தர், சுப்ரஜனேந்திர தீர்த்தர், சுஜ்னனேந்திர தீர்த்தர் மற்றும் சுக்ருதீந்திர தீர்த்தர் ஆகிய ஐந்து மடாதிபதிகளின் சமாதிகள் உள்ளன.

Prof tpms

Read more about: travel temple karnataka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X