» »நீலாம்பேரூர் பள்ளி பகவதி அம்மன் கோயில்

நீலாம்பேரூர் பள்ளி பகவதி அம்மன் கோயில்

Written By: Udhaya

நீலாம்பேரூர் பள்ளி பகவதி அம்மன் கோயில் 1700 ஆண்டுகள் பழமையான புத்த கலாச்சாரத்தில் கட்டப்பட்ட கோயில் ஆகும்.

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு கோட்டயத்திலிருந்து எளிதில் சென்றடையலாம்.

நீலாம்பேரூர் பள்ளி பகவதி அம்மன் கோயில்

Sreejithk2000

இந்த கோயிலின் முதன்மை கடவுள் வனதுர்க்கையம்மன் ஆவார். தென்முகத்தில் ஒரு பாம்பு கடவுளின் உருவமும் வரையப்பட்டுள்ளது. இது சக்திவாய்ந்த நாக தெய்வமாக கருதப்படுகிறது.

இந்த கோயிலில் விநாயகர், சிவன், தர்மசாஸ்தா, மகா விஷ்ணு ஆகிய சிலைகள் உள்ளன. தினந்தோறும் இந்த கோயிலில் பூசை நடைபெறுகிறது.

நீலாம்பேரூர் பள்ளி பகவதி அம்மன் கோயில்

Neelamperoor

திருவாங்கூர் மகாராஜ குடும்பத்தினர் தினமும் முதல் பூசையை வழங்குகின்றனர்.

கிபி 250 - 300 களில் இந்த கோயில் கட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது இந்தியாவில் புத்தமதக் கோட்பாடுகள் தலைசிறந்து விளங்கியுள்ளன.

விழாக்கள்

நீலாம்பேரூர் பள்ளி பகவதி அம்மன் கோயில்

Sreejithk2000

இந்த கோயிலில் பூரம் படாயாணி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். இது இந்து மற்றும் புத்தமத முறைகளில் நடத்தப்படும்.

படாயானி என்பது வெற்றிக்கான அறிகுறி. காளி வெற்றி பெற்ற நிகழ்வை விழாவாகக் கொண்டாடுகின்றனர் மக்கள்.

எப்படி செல்லலாம்

நீலாம்பேரூர் பள்ளி பகவதி அம்மன் கோயில்

ஆலப்புழா மாவட்டம் குட்டநாட்டிலிருந்து வெகு சுலபமாக சென்றடையலாம்.

அல்லது கோட்டயத்திலிருந்து அரை மணி நேர பயணத்தில் இந்த கோயிலை அடையலாம்.

Read more about: travel, temple
Please Wait while comments are loading...