» »கோவாவின் நைட் கிளப்புகளும், பார்ட்டி கொண்டாட்டங்களும்!

கோவாவின் நைட் கிளப்புகளும், பார்ட்டி கொண்டாட்டங்களும்!

Posted By: Staff

கோவாவின் பாகா கடற்கரையில் உள்ள கஃபே டிட்டோஸ் விடுதியின் தனிப்பெரும் புகழின் காரணமாக அந்த விடுதி அமைந்திருக்கும் சாலையே டிட்டோஸ் சாலை என்று அதன் பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த டிட்டோஸ் சாலையில் எண்ணற்ற பார்களும், இரவு விடுதிகளும் இருந்தாலும் அவற்றுக்கு மத்தியில் ராணித் தேனி போல கம்பீரமாக காட்சியளிப்பது கஃபே டிட்டோஸ் மட்டும்தான்.

இதன் உள்ளே நுழைவதற்கு கட்டணமாக 1500 ரூபாய் வசூலிக்கப்படுவதுடன் சரி, அதன் பிறகு நீங்கள் எவ்வளவு மதுவருந்தினாலும் அதற்காக ஏதும் பணம் செலுத்த வேண்டாம்.

எனினும் சில சமயங்களில் தனிநபர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. இங்கு நட்சத்திர டி.ஜேக்களை கொண்டு பாடல்கள் ஒலிபரப்பப்படுவதால் உங்களின் கொண்டாட்டம் ரெட்டிப்படைவது நிச்சயம்.

Read more about: கோவா