Search
  • Follow NativePlanet
Share
» »நிர்வாண கடற்கரைகள் இந்தியாவிலும் இருக்கு தெரியுமா?

நிர்வாண கடற்கரைகள் இந்தியாவிலும் இருக்கு தெரியுமா?

By

இந்த கட்டுரையில் பிறந்த மேனிக்கு ஆடையில்லாமல் சுதந்திரமாக சுற்றித் திரியும் அழகிய கடற்கரைகள் பற்றி காண்போம். அதிலும் இவை இந்தியாவில் இருக்கும் கடற்கரைகள் என்பது நிச்சயமாக உங்கள் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கும் அல்லவா?

இந்தியா மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் மலையாலும் சூழப்பட்ட மாபெரும் நிலப்பரப்பாகும். இங்கு பல்வேறு வளங்களுடன் கடல் வளமும் மிகுந்து காணப்படுகிறது. இது இந்தியாவின் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கடல் வழி பரிமாற்றங்கள், கனிமங்கள் மூலம் இந்தியாவுக்கு பல வர்த்தகங்கள் நிகழ்கின்றன. அதே மாதிரி, கடற்கரை சுற்றுலாத் தளங்கள் வாயிலாகவும் சிறு அளவு வர்த்தகங்கள் நிகழ்கின்றன. சுற்றுலாப் பயணிகளைப் பொறுத்தவரையில் இந்தியாவின் வெளிப்புற மாநிலங்கள் அனைத்திலும் கடற்கரைகள் மிகுந்த சுற்றுலா அம்சங்களுடன் சிறப்பாக காணமுடிகிறது. எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் அந்த ஐந்து நிர்வாண கடற்கரைகள் எங்கே என்பதுதான் உங்கள் எதிர்பார்ப்பாக இருக்கவேண்டும் என்ன சரிதானே.. வாருங்கள் உங்கள் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல், உடனடியாக அந்த கடற்கரைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

பாரடைஸ் பீச், கோகர்ணா

பாரடைஸ் பீச், கோகர்ணா

கோகர்ணா நகரத்துக்கு அருகிலேயே உள்ள இந்த கடற்கரை பிரசித்தமாக அறியப்படுகிறது. இங்கு பயணிகள் ஒருபுறம் அரபிக்கடலின் அழகையும் மறுபுறம் மேற்குத்தொடர்ச்சி மலையின் அழகையும் பார்த்து ரசிக்கலாம். இங்குதான் இந்தியாவில் பலருக்கும் தெரியாத அழகிய ஆடையில்லா கடற்கரை இருக்கிறது.

Aleksriis

செய்யவேண்டியவை

செய்யவேண்டியவை

உணவகங்கள், நீர் விளையாட்டுகள், சூரியக்குளியல் போன்றவை இந்த பீச்சில் பயணிகளுக்கான அம்சங்களாக உள்ளன. வெறும் இயற்கை அழகோடு வணிக ஆக்கிரமிப்பு மற்றும் இரைச்சல்கள் எதுவும் இல்லாமல் காணப்படுவது இந்த கடற்கரையின் விசேஷமாகும்.

Infoayan

ஏகாந்தமான சூழ்நிலை

ஏகாந்தமான சூழ்நிலை

இயற்கை எழிலுடன் கூடிய சூழலோடு ஆங்காங்கே கயிற்று ஊஞ்சல்கள், இசைக்கருவிகளுடன் பயணிகள் என்று இந்த பிரதேசம் ஏகாந்தமான சூழலைக்கொண்டுள்ளது. கோகர்ணா பீச்சுக்கு பயணிகள் வருடத்தின் எக்காலத்திலும் வருகை தரலாம்.

Nimesh.singh90

ஆடையற்ற சுதந்திரம்

ஆடையற்ற சுதந்திரம்

ஓம் பீச் மற்றும் ஹாஃப் மூன் பீச் இரண்டும் இடையில் ஒரு மலைக்குன்றினால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த குன்றின் மீதிருந்து பார்த்தால் அரபிக்கடலின் அற்புதக்காட்சி கண் முன் விரிகிறது. பாரம்பரிய இந்திய பாணி குடில்கள் அழகாய் இக்கடற்கரையில் காணப்படுகின்றன. இதன் அருகிலேயே இருக்கிறது பாரடைஸ் பீச் எனும் அழகிய பீச். இங்கு ஆடையில்லாமல் சூரிய குளியல் செய்யலாம். ஆனால் ஒரு பிரச்சனை.

Robert Helvie

 எப்படி செல்வது..

எப்படி செல்வது..

இந்த இடத்துக்கு நம்மால் படகு மூலமாக மட்டுமே பயணிக்க முடியும். இது எளிதில் சென்றடையக் கூடிய இடம் என்றாலும், இங்கு அந்த அளவுக்கு பெரும்பாலும் யாரும் செல்வதில்லை. இங்கு வருபவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களாகவும், வெளிநாட்டவர்களாகவும்தான் இருக்கிறார்கள்.

சிறப்புகள்

அழகிய நீல நிற நீர்

தெளிவான நீர் கீழே மணல் தென்படும்

இயற்கையாக சுதந்திரமாக ஆடையின்றி சூரியக் குளியல் செய்யலாம்.

Deepak Patil

ஓம் பீச், கோகர்ணா

ஓம் பீச், கோகர்ணா

கோகர்ணா பகுதியிலேயே பிரசித்தமான கடற்கரை இந்த ஓம் பீச் ஆகும். இங்கு பயணிகள் ஆன்மீகம், மகிழ்ச்சி, ஏகாந்தம் போன்ற எல்லா அம்சங்களையும் அனுபவிக்கலாம்.

Abhinav Gupta

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

ஓம் என்ற குறி (எழுத்து) வடிவில் இந்த கடற்கரை அமைந்துள்ளதால் இது ஓம் பீச் என்று அழைக்கப்படுகிறது. பயணிகள் இங்கு நீர்ச்சறுக்கு, படகுப்பயணம் போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபட வசதி உண்டு.

Saransh Gupta

உணவுகள்

உணவுகள்

அனுபவம் மிக்க பயிற்சியாளர்கள் துணையோடு பயணிகள் இவற்றில் ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு தேநீர் உணவகங்கள் மற்றும் குடில்கள் கடற்கரையை ஒட்டியே அழகாக காணப்படுவது சூழலின் அழகை மேலும் கூட்டுவதாக உள்ளது. இவற்றில் உள்ளூர் உணவு வகைகளை பயணிகள் ருசிக்கலாம்.

Vinodtiwari2608

 ஆடைச் சுதந்திரம்

ஆடைச் சுதந்திரம்

இந்த கடற்கரையும் பாரடைஸ் போல சூரியக்குளியல் செய்வதற்கு ஏற்றதாக அமையும். இதன் அமைப்பு இங்கு பல வெளிநாட்டவர்களை அழைத்து வருகிறது. இங்கு வரும் மக்கள் பெரும்பாலும் சூரியக் குளியல் எடுக்க விரும்புகிறார்கள். நம்மில் நிறைய பேர் சூரிய குளியல் வெளிநாட்டவர்கள் மட்டுமே எடுப்பார்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இங்கு செல்லுங்கள் நம்மவர்களும் சூரியக் குளியல் செய்வார்கள் என்பது தெரியும். கிட்டத்தட்ட இது ஒரு குட்டி கோவா பீச் ஆகும்.

விளையாட்டுகள்

விளையாட்டுகள்

இங்கு நிறைய நீர் விளையாட்டுகள் நடைபெறும். உங்களுக்கு பிடித்தமான விளையாட்டை நீங்கள் பயிற்சியாளர்கள் உதவியுடன் விளையாடலாம். இங்கு சிலர் ஆடையற்ற நிலையில் சுதந்திரமாக சுற்றித்திரிவர். எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள் இவை இந்தியாவில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டவை அல்ல.

Rrevanuri

அகட்டி தீவு, லட்சத்தீவுகள்

அகட்டி தீவு, லட்சத்தீவுகள்

அகட்டி என்று ஆங்கிலத்திலிரும் அகத்தி என்று தமிழிலும் அழைக்கப்படும் தீவு, லட்சத் தீவுகள் கூட்டத்தில் அமைந்துள்ள அருமையான தீவாகும்.

லக்ஷ்வதீப் பகுதியின் நுழைவாயில் என்று அறியப்படும் இந்த அகத்தி தீவிற்கு எப்படியும் நீங்கள் விஜயம் செய்தே ஆக வேண்டியிருக்கும். ஏனெனில் இந்திய நிலப்பகுதியிலிருந்து வரும் சொகுசுப்படகுகள் யாவற்றுக்குமான துறைமுகம் இந்த தீவில்தான் உள்ளது.

The.chhayachitrakar

 மாசு மருவற்ற இயற்கை வனப்பு

மாசு மருவற்ற இயற்கை வனப்பு

தீவில் கால் வைத்தவுடனேயே உங்களை தனது மாசு மருவற்ற இயற்கை வனப்பின்மூலம் இந்த தீவு மயக்கி விடுகிறது. அதற்கப்புறம் ஏதோ ஒரு உல்லாச பரவசம் உங்களை ஆட்கொள்வதை உணர்வீர்கள்.

icultist

சொர்க்கபுரி என்றால் மிகையில்லை

சொர்க்கபுரி என்றால் மிகையில்லை

அகத்தி மற்றும் லக்ஷ்வதீப் சமீப காலமாக கோடை சுற்றுலாவுக்கு ஏற்ற சொர்க்கபுரியாக பிரசித்தமடையத் துவங்கியுள்ளன. எந்த வித வணிக சந்தடிகளும் இல்லாமல் முழுக்க முழுக்க இயற்கையின் தூய்மை மட்டுமே மிளிரும் இந்த தீவுக்கூட்டம் தற்கால நாகரிக தலைமுறையினரை பெரிதும் கவர்ந்திருப்பதில் வியப்பில்லை.

Asssagar

ஹாலிவுட் தீவுகளைப் போல

ஹாலிவுட் தீவுகளைப் போல

வெண்ணிறப்பரப்போடு காட்சியளிக்கும் கடற்கரைகளும், ஸ்படிகம் போன்று தூய்மையுடன் தீவுகளைச்சுற்றிலும் இள நீல நிறத்தில் மின்னும் தரைக்கடல் பகுதிகளும் நம்மை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு செல்கின்றன. ஆனால் இந்த தீவின் ஒரு புறம் இந்தியாவின் பலர் பார்த்திராத ஒரு பகுதியாக இருக்கிறது. இது ஆடையற்ற மக்கள் உலாவும் பகுதியாக அறியப் படுகிறது.

 நோ ஆல்கஹால்

நோ ஆல்கஹால்

தீவின் சூழல் தூய்மை போன்றவற்றை தக்கவைப்பதற்காக இந்த தீவில் மது அருந்த அனுமதிக்கப்படுவதில்லை என்ற நடைமுறை உங்களுக்கு ஒருவேளை வருத்தத்தை தரலாம் அல்லது மகிழ்ச்சியையும் தரலாம். அகத்தி தீவிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள பங்காரம் தீவில் மது அருந்தி மகிழ அனுமதி உண்டு என்பது கூடுதல் தகவல்.

Rupankar Mahanta

 ஓஸ்ரான் பீச், கோவா

ஓஸ்ரான் பீச், கோவா

வாகத்தோர் பீச்சிற்கு வெகு அருகிலேயே கோவாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களான சப்போரா கோட்டையும், அஞ்சுனா கடற்கரையும் இருப்பதால் இந்த இடத்தை எப்போதும் சுற்றுலாப் பயணிகள் மொய்த்துக் கொண்டே இருக்கின்றனர்.

Ozan Kilic

மனதை பறிகொடுப்பது

மனதை பறிகொடுப்பது

இங்கு வரும் பயணிகள் இந்தக் கடற்கரையின் வெள்ளை மணற்பரப்பின் அழகில் தங்கள் மனதை பறிகொடுப்பது நிச்சயம். வாகத்தோர் பீச்சில் எண்ணற்ற உணவகங்களையும், குடில்களையும் நீங்கள் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக பிரிம்ரோஸ் என்ற குடிலில் பரிமாறப்படும் கோவான் உணவு வகைகளும், மற்ற பாரம்பரிய உணவு வகைகளையும் போல வேறெங்கும் நீங்கள் ருசித்திருக்க முடியாது.

Apurvah

இரவு விடுதி

இரவு விடுதி

அதுமட்டுமல்லாமல் இந்தக் கடற்கரையில் உள்ள நைன் பார் என்ற இரவு விடுதியை நீங்கள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது. வாகத்தோர் பீச்சை மாபுஸா நகரிலிருந்து அடையும் வழி முழுக்க வரிசையாக அமைந்திருக்கும் பெரிய பெரிய மாட மாளிகைகளும், போர்த்துகீசிய கட்டிடங்களும் உங்களை அப்படியே சொக்க வைத்து விடும்.

Lobodrl

 ஆடைகளற்ற குளியல் அசத்தும் ஓஸ்ரான் பீச்

ஆடைகளற்ற குளியல் அசத்தும் ஓஸ்ரான் பீச்

இங்குள்ள பீச்களில் ஓஸ்ரான் எனும் அழகிய பீச் பெரும்பாலும் மக்களுக்கு தெரிந்திராத இடமாகும். இந்த கடற்கரை மிகவும் விசேசமானதும் கூட. இந்தியாவின் மிக சிறிய மாநிலமான கோவாவில், இப்படி ஒரு பீச் இருப்பதே பலருக்கு தெரியாது. இங்கு பலர் ஆடையில்லாமல் பிறந்த மேனியில் மகிழ்ச்சியாக குளித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெரும்பாலும் வெளிநாட்டவர்களே. இந்த கடற்கரைக்கு அவ்வளவாக யாரும் செல்லமுடியாது. உங்களுக்கு திறமை இருந்தால் மலைகள் ஏறி, அஞ்சுனா கடற்கரையை கடந்து செல்லுங்கள். மகிழ்ச்சியான எதிர்காலம் காத்திருக்கிறது.

அஞ்சுனா மற்றும் வாகத்தோரை எப்படி அடைவது?

அஞ்சுனா மற்றும் வாகத்தோரை எப்படி அடைவது?

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மாபுஸா அல்லது அஞ்சுனா பீச்சுக்கு வாடகை காரில் வந்து இறங்க வேண்டும். அதன் பிறகு அந்த இடங்களிலிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே வாகத்தோர் பீச் இருக்கிறது. அதேபோல் நீங்கள் கேண்டலிம் மற்றும் பாகா பகுதிகளிருந்து பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்தக் கொண்டு வாகத்தோர் பீச்சை வந்தடையலாம்.

Saad Abdullah

மராரி பீச், ஆலப்புழா

மராரி பீச், ஆலப்புழா

மராரி பீச் ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரைகளில் ஒன்றாகும். பலர் ஆலப்புழா பீச்சை மராரி பீச் என நினைத்துவிடக் கூடம். வேறு எந்த கடற்கரை நகரத்திலும் பார்க்க முடியாத ரம்மியமான கடற்கரை இந்த ‘ஆலெப்பி' பீச் எனப்படும் கடற்கரையாகும்.

Mahendra M

 ஆலப்புழா பீச்சின் அழகு

ஆலப்புழா பீச்சின் அழகு

நகர மையத்திலேயே உள்ள இந்த கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து 1கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது. ஒரு புறம் பரந்து விரிந்த அரபிக்கடலும், மறுபுறம் வரிசையாக காட்சியளிக்கும் பனை மரங்களுமாக கண்கொள்ளா அழகுடன் இந்த கடற்கரை நீண்டு கிடக்கிறது.

Pavan Lulla

 மராரி பீச் எங்குள்ளது

மராரி பீச் எங்குள்ளது

ஆழப்புழாவிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மராரி பீச் எனப்படும் அழகிய கடற்கரை. இக்கடற்கரை சுத்தமான மணற்பாங்கான கடற்கரைப்பகுதி மேலும் வசீகரிக்கக் கூடிய மீனவ குக்கிராமமாகும். அழகிய கிராமமான மாராரிக்குளம், மஞ்சள் மணற்பரப்புடன் எழில் ஓவியமாய் காட்சியளிக்கும் அதன் மாராரி கடற்கரைக்காக மிகவும் புகழ்பெற்றது.

Mahendra M

சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

மாராரிக்குளம் கிராமத்துக்கு நீங்கள் சுற்றுலா வரும் போது கொக்கமங்களம் செயின்ட் அப்போஸ்த்துலே தேவாலயம், அரூர், அருந்தன்கால், பூச்சக்கால், பணவல்லி, வெலோர்வட்டம் போன்ற இடங்களுக்கும் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.

 உண்மையா பொய்யா

உண்மையா பொய்யா

மாராரிக்குளம் கிராமத்திலிருந்து ஒரு கிமீ தூரத்தில் இருக்கும் பீச், ஆடையற்ற சூரியக் குளியல் செய்யும் பீச் என நம்பப்படுகிறது. பலர் அவ்வாறே குறிப்பிடுகின்றனர். ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஒருவேளை நீங்கள் இந்த பீச்சுக்கு சென்றால் மராரி பீச்சில் என்னென்ன இருக்கிறது என்பதை கண்கூட காணலாம். ஆனாலும் வெளிநாட்டு பயணிகள் ஒரு சிலர் இந்த கடற்கரைக்கு வருகை தருகிறார்கள்.

Almost90's

Read more about: travel beaches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X