Search
  • Follow NativePlanet
Share
» »வரலாறும் கட்டிடக்கலை மகத்துவமும் நிறைந்த செங்கோட்டையில் ஒருநாள் சுற்றுப்பயணம் செல்லுங்கள்!

வரலாறும் கட்டிடக்கலை மகத்துவமும் நிறைந்த செங்கோட்டையில் ஒருநாள் சுற்றுப்பயணம் செல்லுங்கள்!

370 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட லால் கிலா என்று அழைக்கப்படும் வரலாற்று நிறைந்த செங்கோட்டை முகலாயப் பேரரசின் பெருமையை உங்களுக்கு நினைவூட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் டெல்லியில் சுற்றுலா செல்லும்போது உங்கள் பயணத்திட்டத்தில் ஒரு நாள் முழுவதும் செங்கோட்டையில் செலவிட வேண்டுவது மிகவும் அவசியம்.
டெல்லியில் உள்ள இந்த சிறந்த பாரம்பரிய நினைவுச்சின்னம் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா? டெல்லியில் உள்ள செங்கோட்டையைப் பற்றிய வரலாறு, நேரம், நுழைவு கட்டணம் மற்றும் பிற விவரங்கள் போன்ற நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளன.

red fort history

செங்கோட்டையின் வரலாறு:

செங்கோட்டையானது முகலாய பேரரசர் ஷாஜஹானால் அவரது தலைநகரான ஷாஜஹானாபாத்தின் அரண்மனை கோட்டையாக செயல்படுவதற்காக கட்டப்பட்டது. அவர் தனது தலைநகரை ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு மாற்ற முடிவு செய்தபோது, யமுனை நதிக்கரையருகே கோட்டையை நிறுவினார். 1638 இல் தொடங்கப்பட்ட இந்த பிரமாண்ட கட்டுமானம் 8 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. இந்த கோட்டை முதலில் கிலா-இ-முபாரக் என்று பெயரிடப்பட்டது, அதாவது 'ஆசீர்வதிக்கப்பட்ட கோட்டை' என்று அர்த்தம். மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக இதில் முகலாய பேரசர்களான அவுரங்கசீப், ஜஹந்தர் ஷா, முகமது ஷா மற்றும் 2ஆம் பகதூர் ஷா போன்ற பல ஆட்சியாளர் ஆட்சி செய்தார்கள்.

செங்கோட்டையின் கட்டிடக்கலை சிறப்பு:

255 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோட்டை இஸ்லாமிய, ஹிந்தி, திமுரிட் மற்றும் பாரசீக கட்டிடக்கலைகளின் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டையின் மிகப்பெரிய சுற்றுச்சுவர்கள் முழுவதும் சிவப்பு மணற்கற்களாலும் உள்கட்டமைப்பு பளிங்கு கற்களாலும் ஆனவை, அதனால் தான் இக்கோட்டைக்கு செங்கோட்டை என்ற பெயர் வந்தது. இக்கோட்டை எண்கோண வடிவில் உள்ள அமைப்பு, தோட்ட வடிவமைப்பின் கூறுகள், கோபுரங்கள், கோட்டைகள், பெவிலியன்கள், இரண்டு வாயில்கள் மற்றும் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது.

arichitecture history

இன்றைய செங்கோட்டையின் சிறப்பு:

இன்றைய தினம், செங்கோட்டை டெல்லியில் உள்ள சிறந்த சுற்றுலத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த வரலாற்று நினைவுச்சின்னத்தில் சுதந்திர தினத்தன்று நாட்டின் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். 2007 ஆம் ஆண்டில், இந்த பிரமிக்கவைக்கும் கட்டிடம் அதன் கட்டிடக்கலை சிறப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்காக யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. செங்கோட்டை தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

செங்கோட்டையில் பார்க்க வேண்டிய இடங்கள்:

வரலாற்றுச் சிறப்புமிக்க சலிம்கர் கோட்டைக்கு அடுத்ததாக செங்கோட்டை அமைந்துள்ளது. இந்த இரண்டு கோட்டைகளும் சேர்ந்து செங்கோட்டை வளாகத்தை உருவாக்குகின்றன, அதில் சுற்றிப் பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. லாஹோரி கேட், கோட்டையின் பிரதான நுழைவாயில், டெல்லி கேட், மும்தாஜ் மஹால், செங்கோட்டை தொல்பொருள் அருங்காட்சியகம், ரங் மஹால், காஸ் மஹால், பேரரசரின் அடுக்குமாடி குடியிருப்பு, திவான்-இ-ஆம், பொது பார்வையாளர்கள் அரங்கம், திவான்-இ-காஸ், தனியார் பார்வையாளர் மண்டபம், ஹிரா மஹால், நௌபத் கானா, டிரம் ஹவுஸ், பாவ்லி, தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட படிக்கட்டு கிணறு, மோதி மஸ்ஜித் ஆகியவை இங்கு பார்க்க வேண்டிய இடங்களாகும்.

red fort architecture

செங்கோட்டையின் லைட் அன்ட் சவுண்ட் ஷோ:

செங்கோட்டையின் முக்கிய நிகழ்வு மாலை நேரங்களில் நடைபெறும் லைட் அன்ட் சவுண்ட் ஷோவாகும். இந்தியாவின் சிறந்த லைட் அன்ட் சவுண்ட் ஷோக்களில் முக்கியமானதாக ஒன்றாகக் கருதப்படும் செங்கோட்டையின் லைட் அன்ட் சவுண்ட் ஷோ நினைவுச்சின்னத்தின் வரலாற்றை சுவாரஸ்யமாகவும், கண்களை மயக்கும் விதத்திலும் நம்மை வேறு உலகிற்கு அழைத்து செல்கிறது எனலாம். தினமும் ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த ஷோ, ஹிந்தியில் இரவு 7:30 முதல் 8.30 வரையிலும், ஆங்கிலத்தில் இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரையிலும் நடைபெறுகிறது. பெரியவர்களுக்கான கட்டணம் வார நாட்களில் ரூ.6௦ ஆகவும், வார இறுதி நாட்களில் ரூ.80 ஆகவும், சிறார்களுக்கான கட்டணம் வார நாட்களில் ரூ.2௦ ஆகவும், வார இறுதி நாட்களில் ரூ.30 ஆகவும் வசூலிக்கப்படுகிறது.

செங்கோட்டையை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்:

செங்கோட்டையை சுற்றி பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஸ்ரீ திகம்பர் ஜெயின் லால் மந்திர், கௌரி சங்கர் மந்திர், குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப், ஜமா மஸ்ஜித், சாந்தினி சௌக் சந்தை, ராஜ் காட், இந்தியா கேட், மற்றும் ஹுமாயூனின் கல்லறை ஆகியவை அவற்றில் முதன்மையானதாகும்.

Read more about: red fort agra delhi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X