Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியர்களை கடற்கரையில் அனுமதிக்க முடியாது - பாண்டிச்சேரியில் பரிதவித்த பயணிகள் - InMyTravel 1

இந்தியர்களை கடற்கரையில் அனுமதிக்க முடியாது - பாண்டிச்சேரியில் பரிதவித்த பயணிகள் - InMyTravel 1

இந்தியர்களை கடற்கரையில் அனுமதிக்க முடியாது - பாண்டிச்சேரியில் பரிதவித்த பயணிகள் - InMyTravel 1

By Udhay

சுற்றுலா நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடம் கற்றுத் தந்திருக்கும் தந்துகொண்டுமிருக்கும். அலுவல் பளு தாங்க முடியாமல் வீக்கெண்ட் ரிலாக்ஸ் என்ற பெயரில் விடுமுறையை களிக்க விரைந்து செல்லும்போது ஒரு இடத்தில் உங்களுக்கு பசி. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எதுவும் இல்லை. சில தூரம் நடை பயணித்து சென்றால், அங்கு ஒரு சிலர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஹோட்டலுக்கு அருகே செல்லும்போதே சிலர் வந்து இங்கு உங்களுக்கு அனுமதி இல்லை என்றால்? எப்படி இருக்கும்.. அப்படி பரிதவித்த தமிழர் ஒருவரின் சுற்றுலா கதை இது. வாருங்கள் அந்த சுற்றுலா பகுதியைப் பற்றி பார்க்கலாம்

பாண்டிச்சேரியில் தமிழனுக்கு நோ

பாண்டிச்சேரியில் தமிழனுக்கு நோ


பாண்டிச்சேரி அழகிய கடற்கரைகளையும், அழகான பல இடங்களையும் கொண்டிருக்கும் என்பது நம் இளைஞர்களுக்கு அதன்மீதான காதலை கூட்டிச் செல்கிறது. நாடெங்கிலுமிருந்தும் பாண்டிக்கு மக்கள் முக்கியமாக இளைஞர்கள் சுற்றுலா வருகின்றனர். அவர்களுக்கு பாண்டியில் சுற்றிப் பார்க்க இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படுவதால் தங்கி இருந்து பாண்டிச்சேரியின் அழகை வர்ணித்து செல்வது வழக்கம். அப்படி ஒரு பயணத்தை திட்டமிட்டே இனியனும் பாண்டிச்சேரிக்கு சென்றார். அவர் பெங்களூருவில் தன்னுடன் பணிபுரியும் இரு நண்பர்களையும் அழைத்துச் சென்றார்.

Darshika28

 விடுமுறையில் சுற்றுலா செல்வோம்?

விடுமுறையில் சுற்றுலா செல்வோம்?


வழக்கமாக நமக்கு விடுமுறை என்றால் சுற்றுலாவுக்கு திட்டமிட்டு செல்வது வழக்கம்தானே. அதிலும் இந்த முறை கோவா செல்லலாம் என்று திட்டமிட்டுள்ளனர். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைக் கைதியாகி அந்த திட்டத்தை செயல்படுத்தமுடியா நிலைக்கு தள்ளப்பட, நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி பாண்டிச்சேரிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார் இனியன்.

P Jeganathan

சொந்த ஊரில் சுற்றலாம்

சொந்த ஊரில் சுற்றலாம்

என்னதான் காசு செலவு செய்து அயலூர் சென்று சுற்றுவது சுகம் என்றாலும், அயலூர் கார நண்பர்கள் முன்னிலையில் சொந்த ஊரில் கெத்து காட்டுவது தனி ரகம். இனியனும் அப்படித்தான் தன்னுடன் பணிபுரியும் வேறு மொழி நண்பர்கள் இருவரை பாண்டிச்சேரி அழைத்துச் சென்றிருக்கிறார்.

Soham Banerjee

சொந்த காரில் பயணம்

சொந்த காரில் பயணம்

நண்பர் ஒருவர் சொந்தமாக கார் வைத்திருந்தார். அதை கேட்டுப்பெற்ற இனியனின் நண்பர் தன்னுடன் இனியனையும் மற்றொரு நண்பரையும் கோவா அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தார். சரி அதே திட்டத்தை பாண்டிச்சேரிக்கு மாற்றுவது ஒன்றும் பெரிய விசயம் அல்ல.. அவர்கள் எதிர்பார்த்தது பாண்டிச் சேரியிலும் மலிவுதான் என்று சமாதானம் செய்து அழைத்துச் சென்றார் இனியன். காரில் புறப்பட்டு பாண்டிச்சேரி வந்தடைந்தனர்.

Raghukraman

பெங்களூர் - பாண்டிச்சேரி

பெங்களூர் - பாண்டிச்சேரி


பெங்களூருவிலிருந்து பாண்டிச்சேரி 307 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் பயண நேரம் 7 மணி நேரம் ஆகும். ஆனால் போக்கு வரத்து நெரிசல் குறைவாக இருந்தால் அதைவிட குறைவான நேரத்திலேயே எட்டிவிடலாம்.

கனவுகளுடன் பாண்டிச்சேரி வந்தடைந்தனர்

கனவுகளுடன் பாண்டிச்சேரி வந்தடைந்தனர்


இனியனும் நண்பர்களும் பலவித கனவுகளுடன் பாண்டிச்சேரி வந்தடைந்தனர். மூன்று நாள் பயணம்.. சும்மா அதிரப்போகுது.. செம்மயா என்ஜாய் பண்ணப்போறோம் என்று கருதிய நண்பர்களுக்கு ஒரு விடுதியில் அதிர்ச்சி காத்திருந்தது.

Richard Mortel

தங்கி ஓய்வெடுக்க

தங்கி ஓய்வெடுக்க

மூவரும் தங்கி ஓய்வெடுக்க முடிவு செய்தனர். வரும் வழியிலேயே இரண்டு மூன்று இடங்களில் அசதி காரணமாக வண்டியை நிறுத்தி உணவு நொறுக்குகள் சாப்பிட்டு விட்டு திரும்ப புறப்பட்டனர். எனினும் அவர்களின் அசதி கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. தங்கி ஓய்வெடுக்க முடிவு செய்து, பாண்டிச்சேரியை நெருங்கி இருக்கும் ஒரு பகுதியில் அறை கேட்டு சென்றுள்ளனர். அது கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து கடற்கரை நோக்கி செல்லும் வழியில் ஒரு இடத்தில் அமைந்துள்ள கடலின் பெயரில் வரும் ஒரு விடுதி. அங்கு சென்று பசியாறிவிட்டு, பின் சுற்றிப் பார்க்கலாம் என்று முடிவு செய்தனர்.

Hriprsd

விடுதியில் பவுன்சர்கள்

விடுதியில் பவுன்சர்கள்

வேகாத வெயிலில் காலார நடந்து சென்று அந்த விடுதியில் இடம் இருக்கிறதா என்றுகேட்க நினைத்தனர். முன்னதாக தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு வெளிநாட்டு பெண்மணி சுவை மிகுந்த உணவு ஒன்று நன்கு ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக தெரிந்தது. இவர்களும் பசியின் உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டிருந்தனர்.

Karthik

விடுதியிலிருந்து விரட்டப்பட்டனர்

விடுதியிலிருந்து விரட்டப்பட்டனர்

ஆரோவில்லே வேவ்ஸ் எனும் இடத்துக்கு எதிர் புறத்தில் ஒரு கயிறு வடம் கட்டப்பட்டு அது நேரே சாலையிலிருந்து கடல் வரை பிரிக்கப்பட்டார்போல இருந்தது. அங்கு ஒரு பலகையில் ஏதோ மொழியில் எழுதப்பட்டிருந்தது. அநேகமாக அது பிரஞ்ச் மொழியாக இருந்திருக்கலாம். எங்களில் யாருக்கும் பிரெஞ்ச் தெரியாததால் அதை பொருட்படுத்தவில்லை. உடனே இரு பவுன்சர்கள் வந்தார்கள். எங்களை அலேக்காக தூக்கி வெளியே எறிந்துவிடக் கூடும் என்று மனதில் சில காட்சிகள் ஓடத் துவங்கியது. ஆனால் நடந்தது என்ன?

Rohith D'Souza

உங்களுக்கு அனுமதி இல்லை

உங்களுக்கு அனுமதி இல்லை

இந்த இடத்துக்கு வர உங்களுக்கு அனுமதி இல்லை அந்த குரலில் ஒரு அதிகாரத் தொணி இருந்தது. எங்கள் நிறத்தை வைத்து அவர்கள் எடை போட்டிருக்கலாம் என்று கருதிய நான்.. என் பெயர் இனியன். நாங்கள் ஏன் வரக்கூடாது. நான் தமிழகத்தின் குடிமகன்தான் என்றேன். அவர் மறுபடியும் உங்களுக்கு இங்கே அனுமதி இல்லை என்றே கூறினார்.

அதன் பின் இனியனின் வட நாட்டு நண்பர் இந்தியில் பேச ஆரம்பித்தார். அவர் பேசியதிலிருந்து ஒரு விசயம் மட்டும் புரிந்தது.. திஸ் இஸ் நாட் பார் இன்டியன்ஸ். இன்டியன்ஸ் நாட் அலோட்..

Rohith D'Souza

இந்தியக் குடிமகனுக்கு அனுமதி இல்லை

இந்தியக் குடிமகனுக்கு அனுமதி இல்லை

எங்களுக்கு அன்று தோன்றியது ஒரு இந்தியக் குடிமகனாக நமக்கு இதைவிட அவமானம் எதுவுமில்லை என்று. அதைவிட பெருத்த அவமானம் என்னால் இந்தியில் பேசமுடியவில்லை என்று என் நண்பர் என்னை அவமதித்தது. அவர் பாதுகாவலரிடம் இந்தியில் உரையாடியதும், ஆங்கிலத்தில்தான் பேசினார். நண்பரின் முகம் வாடியது. இது இந்தியா என்றாலும் தமிழகம் என்று ஒருபுறம் பெருமையுடன் கூறினாலும், மறுபுறம் தமிழுக்கே இடமில்லை என்றுதான் அவமானம்.

திஸ் பிலேஸ் இஸ் நாட் பார் இன்டியன்ஸ்...

இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது... இதுபோன்ற பகுதிகள் இந்தியாவில் இருக்கிறதா என்பதே நம்பமுடியாத உண்மையாக இருக்கிறது.

Nelson.G

 பாகுபாடு

பாகுபாடு

நிறவெறி மட்டுமல்ல.. சாதி இன பாகுபாடு இன்னமும் தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறது. இதையெல்லாம் பயணித்தால் மட்டுமே தெரிந்துகொள்ளமுடியும். பயணம் நம் வாழ்க்கையில் எத்தனையே கற்று தருகிறது.. நாம் சுமந்தவற்றை, சுமப்பவற்றை ஒவ்வொரு அசைவிலும் ஏதோ ஒரு உணர்வை கற்றுத் தருகிறது பயணம்..

கற்போம் நம் ஒவ்வொரு பயணத்திலும்...

இதுபோன்ற கட்டுரைகள் அனுபவங்கள் உங்கள் வாழ்க்கையிலும் நடந்திருந்தால் எழுதி அனுப்புங்கள் இந்த மெயில் முகவரிக்கு... [email protected] சிறந்தவற்றைத் தொகுத்து கட்டுரையாக்கி வெளியிடுகிறோம்.

Karthik Easvur

Read more about: travel pondicherry inmytravel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X