Search
  • Follow NativePlanet
Share
» »ஊட்டி vs கொடைக்கானல் – தமிழகத்தின் அழகான மலைவாசஸ்தலம் எது – சென்னை வாசிகளுக்கு எது பெஸ்ட்?

ஊட்டி vs கொடைக்கானல் – தமிழகத்தின் அழகான மலைவாசஸ்தலம் எது – சென்னை வாசிகளுக்கு எது பெஸ்ட்?

2024 ஆம் ஆண்டில் எந்த மலைவாசஸ்தலத்திற்கு செல்லலாம் என்ற யோசனையா? தமிழ்நாட்டில் உள்ள அழகிய மலைவாசஸ்தலம் என்றாலே அனைவர்க்கும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் மட்டும் தான் நினைவுக்கு வரும். ஆனால் புதுமணத் தம்பதிகளாக தேனிலவுக்கு செல்லவும், நண்பர்களுடன் டூர் போகவும், குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லவும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் இந்த இரண்டு இடங்களில் எது பெஸ்ட் என்று ஒப்பிட்டு பார்ப்போமா?

தமிழ்நாட்டின் அழகான மலைவாசஸ்தலம் எது?

இந்த ஆண்டுக்கான குளிர்காலம் விரைவில் முடியவிருக்கிறது. இது தான் மலைவாசஸ்தலங்களுக்கு செல்ல சரியான நேரம். வெப்பத்தில் இருந்து தப்பித்து குளிர்ந்த காற்று முகத்தில் உரச, இயற்கை காட்சிகளை அனுபவிக்க ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு மக்கள் செல்வார்கள். ஊட்டி அல்லது கொடைக்கானல் எந்த இடத்தை தேர்வு செய்வது என்று நீங்கள் யோசிக்கலாம். இந்த இரண்டுமே இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் பிரபலமான மலைவாசஸ்தலங்கள், இவற்றில் வானிலை, அழகிய இடங்கள், பட்ஜெட் ஆகியவற்றில் எது நமக்கு பெஸ்ட் என்று பார்ப்போமா?

ooty

இரண்டுக்குமான பயண தூரம் ஒன்று தான்

ஊட்டி தமிழ்நாட்டின் நீலகிரி மலைகளிலும், கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைகளிலும் அமைந்துள்ளது. ஊட்டி சென்னையில் இருந்து 569 கிமீ தூரத்திலும், கொடைக்கானல் சென்னையிலிருந்து 520 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து தூரம் என்று பார்த்தால் இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தூரத்தை தான் கொண்டிருக்கின்றன. அதனால் இரண்டுக்குமான பயண நேரம் எப்படியும் 8-9 மணி நேரம் ஆகும்.

ஊட்டி, கொடைக்கானலில் எதுல ஜில்லுன்னு க்ளைமேட்

ஊட்டி அக்டோபர்-பிப்ரவரி கால கட்டத்தில் 5-22 டிகிரி வானிலையிலும், மார்ச்-மே கால கட்டத்தில் 15-30 டிகிரி வானிலையிலும், ஜூன்-செப்டம்பர் கால கட்டத்தில் 12-25 டிகிரி வானிலையிலும் இருக்கும். கொடைக்கானலும் இதே கால கட்டங்களில் ஊட்டி மாதிரியான வானிலையையே எதிர் கொள்கிறது. ஆகையால் இரண்டுமே எப்போதுமே குளிரான வானிலையை வழங்குகிறது எனலாம்.

kodaikanal2

எப்பொழுது செல்வது சிறந்தது?

இரண்டு இடங்களுக்குமே குளிர்காலத்தில் அல்லது கோடை காலத்தில் செல்வதே சிறந்தது. மழை பொழியும் நேரத்தில் அதாவது ஜூன்-செப்டம்பர் கால கட்டத்தில் செல்வது சரியான யோசனை இல்லை. நிலச்சரிவு, அதீத மழை காரணமாக இங்கு செல்வது பாதுகாப்பானது இல்லை.

kodaikanal

இரண்டு இடங்களிலும் உள்ள ஸ்பெஷல் என்னென்ன?

கொடைக்கானலில் நீங்கள் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்

1. கொடைக்கானல் ஏரி

2. க்ரீன் வேலி வியுபாயின்ட்

3. பியர் சோலா நீர்வீழ்ச்சி

4. கோக்கர்ஸ் வாக்

5. டெவில்ஸ் கிட்சன்

6. பிரையன்ட் பார்க்

7. சில்வர் காஸ்கேட் நீர்வீழ்ச்சி

8. கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரி

9. குறிஞ்சி கோயில்

10. பில்லர் ராக்ஸ்

11. தலையாறு நீர்வீழ்ச்சி

12. டால்பின்ஸ் நோஸ்

13. மன்னவனூர்

14. வட்டகனல்

15. பைன் காடுகள்

ooty1

ஊட்டியில் நீங்கள் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்

1. எமரால்டு ஏரி

2. நீலகிரி மலை ரயில்

3. ஊட்டி ரோஸ் கார்டன்

4. பைகாரா நீர்வீழ்ச்சி

5. ஊட்டி ஏரி

6. தாவரவியல் பூங்கா

7. தொட்டபெட்டா சிகரம்

8. செயின்ட் ஸ்டீபன் தேவாலயம்

9. கலஹட்டி நீர்வீழ்ச்சி

10. கோத்தகிரி

11. கெட்டி வேலி வியுபாயின்ட்

12. வேக்ஸ் மியூசியம்

13. அரசு அருங்காட்சியகம்

14. குன்னூர்

15. முகுர்த்தி தேசிய பூங்கா

பயணம், தங்குமிடம், உணவு, நுழைவுக்கட்டணம் என்று பார்க்கும் போது இரண்டுமே ஒரே மாதிரியான செலவுகளை தான் வழங்குகின்றன. இயற்கை அழகு என்று பார்க்கும் போதும் இரண்டுமே சமமாக தான் இருக்கின்றன. ஆகையால் ஊட்டி மற்றும் கொடைக்கானல் இரண்டுமே ஒன்றோடு ஒன்று சளைத்தது இல்லை, இரண்டுமே சமம் தான் மக்களே!

More News

    Read more about: ooty kodaikanal
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+