Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் மிகப் பணக்கார கோயிலைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

உலகின் மிகப் பணக்கார கோயிலைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

சமீப வருடங்களில் இந்தியாவையே அதிர வைத்த சம்பவங்களில் ஒன்று பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள ரகசிய அறைகளில் நடந்த சோதனை தான். கேரளத்தில் உள்ள பிரபலமான கோயில்களில் ஒன்று தான் என்றாலும் மற்ற மாநிலத்தில் உள்ளவர்களும் ஏன் பல வருடங்களாக இக்கோயிலுக்கு சென்று வருபவர்களும் இந்த கோயிலைப்பற்றி தினம் தினம் வெளியான செய்திகளை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

மூட்டை மூட்டையாக தங்கங்களும், விலை மதிப்பிட முடியாத கற்களும், வைர வைடூரியல்களும், பொற்காசுகளும் இந்த கோயிலில் உள்ள ரகசிய அறைகளில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக யாருக்கும் தெரியாமல் இருந்திருக்கின்றன. இவை கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக உலகின் பணக்கார கோயில் என்ற பட்டத்தை திருப்பதியிடம் இருந்து தட்டிப்பறித்த இந்த பத்மநாப சுவாமி கோயிலைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

இந்த பத்மநாப சுவாமி கோயிலானது கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கிறது. இக்கோயிலின் மூலவரான விஷ்ணு பெருமான் அனந்த சயன நிலையில் இருப்பதால் இக்கோயிலானது அனந்த பத்மநாபசுவாமி கோயிலென்றும் அழைக்கப்படுகிறது.

Photo:Manu Jha

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

இந்த கோயிலானது இன்றும் திருவனந்தபுரம் ஆரச பரம்பரையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. 1750ஆம் ஆண்டு திருவிதாங்கூர் அரசரான ராஜா மார்த்தாண்ட வர்மா தன் ராஜ்ஜியம், செல்வம், குடும்பம் என அனைத்தையும் பத்மநாப சுவாமியிக்கு அற்பநிப்பநித்து விட்டார். அதிலிருந்து ராஜ குடும்பத்தினர் 'பத்மனாபதாசர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர்.

Photo:Deepuleander

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

இந்த கோயிலானது திராவிட கட்டிடக்கலை அமைப்பின்படி கட்டப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களில் இருப்பது போன்றே இந்த கோயிலின் வாயிற் கோபுரமும் 7 வரிசைகளை கொண்டதாகவும் கிட்டத்தட்ட 100 அடி உயரமானதாகவும் இருக்கிறது.

Photo:Manveechauhan

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

இந்த கோயிலின் கர்பகிரகமானது ஒரே கல்லில் குடையப்பட்டிருக்கிறது. இதனால் இந்த இடம் 'ஒற்றைக்கல் மண்டபம்' என்று அழைக்கப்படுகிறது.

Photo:Rainer Haessner

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

இந்த கர்பகிரகத்தில் மகா விஷ்ணு தன் இரு மனைவியரான ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவி துணையிருக்க ஏழு தலைகொண்ட நாகமான ஆதிஷேசன் மேல் அனந்த சயன நிலையில் காட்சி தருகிறார்.

Photo:P.K.Niyogi

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

தரிசன நேரம் :

இந்த கோயிலில் அதி காலை 3:30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை குறிப்பிட்ட இடைவேளைகளில் தரிசனம் செய்யலாம். பின் மாலை 5:00 டு 7:20 வரையிலும் இறைவனை தரிசிக்கலாம். தரிசன நேர விவரங்கள் பின் வருமாறு : காலை : 3.30-4.45, 6.30-7.00, 8.30-10.00, 10.30-11.10, 11.45-12.00. மாலை : 5.00-6.15 மற்றும் 6.45-7.20.

Photo: Pranchiyettan

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

கோயிலில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள்:

பெரிய ஹிந்து கோயில்களில் அதன் புனித தன்மையை காக்கும் பொருட்டு கடுமையான விதிமுறைகள் பின்பட்டப்படுகின்றன. இந்த பத்மநாப சுவாமி கோயிலில் நுழைய ஆண்கள் கண்டிப்பாக வேஷ்டியும் பெண்கள் சேலையும் அணிந்திருக்க வேண்டும். போன், கேமரா போன்ற சாதனங்கள் எதுவும் கொண்டு செல்ல கூடாது.

Photo:Ilya Mauter

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

பாதாள அறைகள் :

இந்த கோயிலில் 4 மிகப்பெரிய பாதாள அறைகள் இருக்கின்றன. இவற்றினுள்ளே மதிப்பிடவே முடியாத அளவு தங்கமும், வைர, வைடூரிய கற்களும், மூட்டை மூட்டையாக தங்க காசுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ரைகள் பற்றிய ரகசியம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிலரால் பாதுக்காக்கப்பட்டு வந்திருக்கிறது.

Photo: Flickr

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

கதக்களி :

இந்த கோயிலில் ஆண்டுதோறும் மலையாள மாதங்களான மீனம் மற்றும் துலாம் மாதங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும் திருவிழாக் காலங்களில் கதகளி போன்ற நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Photo:Joseph Lazer

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

கோயில் முத்திரை :

இந்த பத்மநாப சுவாமி கோயில் முத்திரையான வலம்புரி சங்கு முதலில் திருவிதாங்கூர் ராஜ்யத்தின் முத்திரையாகவும் பின்னர் கேரளா அரசின் அரச முத்திரையாகவும் இருந்துள்ளது.

Photo:Rainer Haessner

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

பத்மதீர்த்த குளம் :

ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலின் தெப்பக்குளமான பத்மதீர்த்த குளம்.

Photo:Aravind Sivaraj

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

ஓணவில்லு :

ஓணவில்லு என்று அழைக்கப்படும் இசைக்கருவி. திருவோணம் திருவிழாவின் போது ஓணவில்லு இசைத்து இறைவனுக்கு பாமாலை சார்த்துவது இக்கோயிலின் வழக்கங்களில் ஒன்றாகும்.

Photo:Sugeesh

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் :

இந்த கோயில் அமைந்திருக்கும் திருவனந்தபுரம் நகரைப்பற்றிய தகவல்களை தமிழ்பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Photo:Aravind Sivaraj

Read more about: kerala temples spiritual tour
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X