Search
  • Follow NativePlanet
Share
» »மேற்கு வங்க மாநிலத்தின் அழகிய அரண்மனைகள் பற்றி தெரியுமா?

மேற்கு வங்க மாநிலத்தின் அழகிய அரண்மனைகள் பற்றி தெரியுமா?

மேற்கு வங்க மாநிலத்தின் அழகிய அரண்மனைகள் பற்றி தெரியுமா?

By Udhaya

மேற்கு வங்காள மாநிலம் பன்முகத்தன்மை கொண்ட புவியியல் அமைப்பை பெற்றிருக்கிறது. இதன் வடபகுதி இமயமலைப்பகுதியை ஒட்டியதாக உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு சிக்கிம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்துடன் இம்மாநிலம் தனது எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது. கங்கை ஆற்றுப்படுகை இம்மாநிலத்தின் பெரும் நிலப்பரப்பில் பரவியுள்ளது. அதனை ஒட்டி தெற்கே அமைந்துள்ள சுந்தர்பன் காடுகள் பசுமையான இயற்கைச்செழிப்புடன் வீற்றிருக்கின்றன. மேலும் இம்மாநிலத்தை ஒட்டி வடக்கில் நேபாள் மற்றும் பூடான் போன்ற நாடுகளும் கிழக்கில் பங்களாதேஷ் நாடும் அமைந்துள்ளன. எனவே சுற்றுலாப்பயணிகள் விரும்பும் வித்தியாசமான புவியியல் அமைப்பை இம்மாநிலம் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இங்கு இருக்கும் கோட்டைகளையும், அரண்மனைகளையும் பற்றி காணலாம்.

ராஜ்பாரி அரண்மனை

ராஜ்பாரி அரண்மனை


உண்மையான அரச வாழ்க்கையை பார்க்க வேண்டுமெனில் நீங்கள் ராஜ்பாரி அரண்மனைக்கு செல்ல வேண்டும். இந்த அரண்மனை கிருஷ்ணநகரில் இருந்து வெகு தொலைவில் இல்லை. இந்த அரண்மனையின் அமைப்பு ஒரு ராஜஸ்தானி கோதியை உங்களுக்கு நினைவூட்டினாலும் இது அடிப்படையில் ஓடுகள் கொண்டு கட்டப்பட்டுள்ள ஒரு அரண்மனையாகும். இந்த மகாராஜா கிருஷ்ணசந்ரா அரண்மனை கிருஷ்ணநகரைச் சுற்றியுள்ள உண்மையான மற்றும் அழகான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

பிஜோய் சந்த் மஹாதாப்

பிஜோய் சந்த் மஹாதாப்

125 வகையான மரங்களையும் செடிகளையும் உள்ளடக்கிய இந்த அரண்மனையில் உள்ள வனவியல் பூங்கா 1800ல் பிஜோய் சந்த் மஹாதாப் என்பவரால் உருவாக்கப்பட்டது. இங்கு அமர்ந்து கணிணியில் அலுவலக வேலைகளையும், புத்தகங்கள் படிப்பதையும் பலர் விரும்புகிறார்கள்.

Mondal.koustav

ஹசார்டுவாரி அரண்மனை

ஹசார்டுவாரி அரண்மனை


முர்ஷிடபாத்திலுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது ஹசார்டுவாரி அரண்மனை. இந்த அரண்மனையின் பெயருக்கு ஆயிரம் கதவுகள் என்ற அர்த்தமாகும். இங்கே ஆயிரம் கதவுகள் இருப்பதாலேயே இது இப்பெயரை பெற்றது. இந்த வெண்ணிற அரண்மனை அதன் பிரம்மாண்டத்துக்காகவே புகழ் பெற்று விளங்குகிறது. மேலும் இது நகரத்தின் அழகையே அதிகரிக்கும். இந்த அரண்மனையின் முன்னாள் உள்ள புற்தரை 2 கால்பந்து மைதானம் அளவிற்கு பெரியதாக இருக்கும். இதுவும் கூட இந்த அரண்மனையின் கம்பீரத்தை அதிகரிக்கிறது. காலனி வடிவமைப்பில் பிரம்மாண்டமாக உள்ள இந்த அரண்மனையில் மதிய நேரத்தை போக்க இதமானதாக இருக்கும். இந்த அரண்மனையில் பல வகையான கட்டமைப்புகள், சிற்பங்கள் மற்றும் சிறு கோபுரங்களை காணலாம். 1829-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அரண்மனையை பாதுகாக்க இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் பெரிதும் பாடுபடுகிறது. இப்போது இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் அருங்காட்சியகமாகவும் விளங்குகிறது.

குரும்பேரா கோட்டை

குரும்பேரா கோட்டை


குரும்பேரா கோட்டையில் 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயில் ஒன்று உள்ளது. அதோடு இந்த கோயிலுக்கு நேர் பின்னே முகம்மது தாஹீர் என்பவரால் கட்டப்பட்ட மசூதி ஒன்றும் அமைந்துள்ளது. எனவே ஹிந்து, இஸ்லாமிய ஒருமைப்பாட்டை விளக்கும் குரும்பேரா கோட்டைக்கு மத பேதமின்றி நாடு முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்களும், பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் குரும்பேரா கோட்டை சூரிய அஸ்த்தமன காட்சிக்காக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்

Tirthatanay

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X