Search
  • Follow NativePlanet
Share
» »ஜம்மு - காஷ்மீரிலுள்ள அரண்மனைகள்

ஜம்மு - காஷ்மீரிலுள்ள அரண்மனைகள்

By Udhaya

இமயமலையின் மடியில் வீற்றிருக்கும் ஜம்மு காஷ்மீர் தன் இயற்கை அழகிற்காக உள்நாட்டிலும் உலகம் முழுவதிலும் அறியப்படும் மாநிலமாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் ஜம்மு ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கிய ஜம்மு காஷ்மீர் ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுடன் தன் எல்லையை பகிர்ந்துகொண்டுள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீருக்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். இயற்கை ஆர்வலர்களையும், சாகசப் பிரியர்களையும் ஒருங்கே மகிழ்விக்கும் இடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது. புகழ்பெற்ற முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் ஜம்மு காஷ்மீரின் அழகில் மயங்கி, பூமியில் சொர்கம் உண்டென்றால் அது இங்குதான் உள்ளது என வர்ணித்தார். பிரம்மாண்டமான மலைத் தொடர்கள், பளிங்கு போன்ற தெளிவான ஓடைகள் கோவில்கள், பனிப்பாறைகள் மற்றும் தோட்டங்கள் ஜம்மு காஷ்மீரின் அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளன.

குன்டிலான்

குன்டிலான்

குன்டிலான் (Quntilon) என்ற பெயரில் பிரபலமாக உள்ள பாரி மஹால், ஸ்ரீ நகரின் சஸ்ம்-இ-ஷாஹி தோட்டங்களுக்கு மேலே அமைந்துள்ள இடமாகும். புகழ் பெற்ற முகலாய பேரரசரான ஷ ஜகானின் மூத்த புதல்வரானா தாரா ஷிகோவினால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இடம் தான் பாரி மஹால். தன்னுடைய சூஃபி ஆசிரியர் முல்லா ஷா படாக்ஷியின் நினைவாக தாரா ஷிகோ, ஒரு அழிந்த புத்த மடாலயத்தின் மீது இந்த இடத்தைக் கட்டினார். ஜோதிடம் மற்றும் வானியல்கலைகளைப் பயிற்றுவிக்கும் கல்வி மையமாகவும் பாரி மஹால் விளங்கி வந்தது. இந்த தோட்டத்தின் முழுமையான நீளம் மற்றும் அகலங்கள் முறையே 122 மீ மற்றும் 62.5 மீ ஆகும். தால் ஏரிக்கு தென்மேற்காக அமைந்திருக்கும் இந்த தோட்டம் 6 தளங்களைக் கொண்டிருக்கிறது. பிற முகலாய தோட்டங்களில் உள்ளதைப் போல அருவிகள் எதுவும் பாரி மஹாலில் இல்லை. இதன் தளங்களில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தொட்டிகளுக்கு பூமிக்கு அடியில் செல்லும் குழாய்களில் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த தோட்டத்தில் ஒரு நீரூற்றும், பழங்கள் மற்றும் பூக்களைத் தாய்கிய புல்வெளிப் பரப்புகளும் அமைந்துள்ளன.

லே அரண்மனை

லே அரண்மனை

லே அரண்மனை 17-ஆம் நூற்றாண்டில் செங்கே நம்க்யால் ராஜாவால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையின் நீள்மாடக்கூடம், திபெத்திலுள்ள லாசா என்ற இடத்தில் உள்ள போடலா அரண்மனை போலவே இருக்கும். டோக்ராவின் அரசப்படைகள் 19-ஆம் நூற்றாண்டில் லடாக்கை கைப்பற்றியபோது, இந்த அரண்மனையில் இருந்த அரச குடும்பம் ஸ்டாக் அரண்மனைக்கு குடிபெயர்ந்தது. இந்த அரண்மனை ஒன்பது அடுக்குகளைக் கொண்டது. இதன் மேல் அடுக்கில் அரச குடும்பத்தினர் குடியிருந்தனர். கீழ் தளத்தில் காப்பக அறைகளும் தொழுவங்களும் உள்ளன. அழிந்து கொண்டிருக்கும் இந்த அரண்மனையை பாதுகாக்க இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி மையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதன் அழகையும், இண்டஸ் பள்ளத்தாக்கு மத்தியில் உள்ள ஸ்டாக் கங்ரி மற்றும் லடாக் மலைத்தொடர்களின் அழகையும் ரசிக்கலாம்.

 ஸ்டாக் அரண்மனை

ஸ்டாக் அரண்மனை

ஸ்டாக் அரண்மனைக்குள் இருக்கும் ஸ்டாக் அரண்மனை அருங்காட்சியத்தில் அரச குடும்பத்தை சேர்ந்த கிரீடங்கள், கலைப் பொருட்கள், விலை மதிப்புள்ள கற்கள், செப்புக் காசுகள், ஆபரணங்கள், வழிப்பாடு கருவிகள், தங்கஸ் அல்லது சமயஞ்சார்ந்த திபெத்தியன் பட்டு ஓவியங்கள் மற்றும் குலச்செல்வங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அருங்காட்சியம் இந்த வட்டாரத்தின் பண்டைய கால கலையையும் பண்பாட்டையும் விளக்குவதாக இருக்கும். அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கும் தங்கஸ், 16-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இதில் புத்தரின் வாழ்க்கை மற்றும் கோட்பாடுகள் தீட்டப்பட்டிருக்கும். இண்டஸ் நதிக்கு மிக அருகாமையில் இருக்கும் இந்த அரண்மனை, இந்த வட்டாரத்தின் ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம். இது கி.பி. 1825-ஆம் ஆண்டு செப்பால் தொண்டுப் அரசரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையிலிருந்து பிரம்மாண்டமாக தெரியும் சூரிய உதயத்தையும் அஸ்த்தமனத்தையும் கண்டு களிக்கலாம். இந்த அரண்மனையை முழுவதுமாக சுற்றிப் பார்க்க 4 முதல் 5 மணி நேரம் ஆகும்.

Shayamal narang

 ஸ்டாக் அரண்மனை

ஸ்டாக் அரண்மனை

ஸ்டாக் அரண்மனை 1825-ஆம் ஆண்டு செச்பல் தொண்டுப் நம்க்யால் என்ற அரசரால் கட்டப்பட்டது. இது இண்டஸ் நதியில் அமைந்த ஒரு நகரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த அரண்மனை நூலகத்தில், பல திபெத்திய புத்திசம் பள்ளிகளால் அங்கீகரிக்கப்பட்ட கங்க்யுர் என்ற புனித எழுத்துக்கள், 108 பகுதிகளாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த அரண்மனையில் தான் அக்காலத்தில் செங்கே நம்க்யால் என்ற அரசரும் அவரை சார்ந்த வம்சாவழியினரும் வாழ்ந்து வந்தனர். பாரம்பரிய மரபுப்படி, அழகிய கட்டிடக்கலையுடன் கட்டப்பட்ட அரண்மனை இது. சூரிய உதயத்தையும், அஸ்த்தமனத்தையும் இந்த அரண்மனை மற்றும் அதன் தோட்டத்திலிருந்து கண்டு ரசிக்கலாம். இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதற்கு மற்றொரு காரணம் இங்கு கொண்டாடப்படும் "ஆண்டு முகமூடி நடன" திருவிழா. இந்நேரத்தில் சுற்றுலாப் பயணிகள், அரச குடும்பத்தை சேர்ந்த அறிய வகை கிரீடங்கள், உடைகள் மற்றும் முக்கிய பொருட்களை காண நேரிடலாம். இந்த அரண்மனையை சுற்றிப் பார்க்க 4-5 மணி நேரமாகும். இந்த அரண்மனையின் உள்ளிருக்கும் ஸ்பிடுக் மடம் கூடுதல் ஈர்ப்புடையதாக இருக்கும். பயணிகள் இங்கு வர ஜீப் அல்லது கார்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

Baldiri

முபாரக் மண்டி அரண்மனை

முபாரக் மண்டி அரண்மனை

முன்னாள் டோக்ரா மன்னர்களின் அரச உறைவிடமான முபாரக் மண்டி அரண்மனை சுற்றுலா பயணிகள் மத்தியில் புகழ்பெற்றதாகும். இந்த அரண்மனை ஐரோப்பிய, பரோக், ராஜஸ்தானி மற்றும் முகலாய கட்டிடக்கலை பாணிகளின் ஒரு தனிப்பட்ட கலவையை வெளிப்படுத்துகிறது. இந்த அரண்மனையின் பிரதம ஈர்ப்பு ஷீஸ் மஹால் வளாகமாகும். முபாரக் மண்டி அரண்மனையின் 'பிங்க் மண்டபத்தில்' அமைந்துள்ள டோக்ரா கலை அருங்காட்சியகம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அழகாக அலங்கரிக்கப்பட்ட அரங்குகள் மற்றும் அரண்மனையின் காலரிகள் பல்வேறு அதிகாரபூர்வமான நிகழ்வுகள் மற்றும் சடங்குகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. அழகிய தோட்டத்தினால் சூழப்பட்ட அரசவர்க்கத்தினராலும், பொது ஜனங்களாலும் பயன்படுத்தப்பட்ட முற்றம், பல்வேறு முக்கியமான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரண்மனை பழைய நகரத்தையும் தாவி ஆற்றின் காட்சியையும் கண் முன் நிறுத்துகிறது. முபாரக் மண்டி அரண்மனை ஒரு வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவிக்கபட்டு இங்கு அரசின் நீதிமன்றங்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

Jehangir

அமர் மஹால்

அமர் மஹால்

டோக்ரா அரசரான ராஜா அமர் மூலம் 1890 ல் கட்டப்பட்டது அமர் மஹால், ஜம்முவின் பிரதம சிறப்புகளில் ஒன்று. இதன் கட்டிட அமைப்பு ஒரு பிரஞ்சு கட்டிட கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய கைவினைஞர்களால் கட்டப்பட்ட இந்த மஹால் பிரஞ்சு நாட்டுபுற கட்டிட கலை பாணியை ஒத்திருக்கிறது. அமர் மஹால் கட்டுவதற்கு செம்மண் கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த காலத்தில், அமர் மஹால் ராயல் குடும்ப உறுப்பினர்கள் குடியிருப்பாக இருந்து வந்துள்ளது. எனினும் இந்த இடமானது பின்னர் ஒரு அருங்காட்சியமாக மாற்றப்பட்டு புத்தகங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், மற்றும் கல்வெட்டுகள் சேகரிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் பிரதான ஈர்ப்பு 'பஹாரி' ஓவியங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆட்சியாளர்களின் ஓவியங்களை கொண்டு அலங்கரிக்கப்பெற்ற இது ‘தர்பார் ஹால்' உள்ளது. 120 கிலோ தங்கத்தினால் செய்யப்பட்ட மகாராஜா ஹரி சிங்கின் அரியணையை இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே காணலாம். சுற்றுலா பயணிகள் அமர் மஹால் அருங்காட்சியகம் உள்ளே அமைந்துள்ள 20,000 புத்தகங்கள் இருப்பு கொண்ட ஒரு நூலகத்தை பார்க்க முடியும். சில சிறப்பு தொகுதிகளை கொண்ட இந்த புத்தகங்கள், ராஜா அமர் சிங் நூலகத்தில் இருந்து கடந்த 50 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்டவை.

Nvvchar

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more