Search
  • Follow NativePlanet
Share
» »பாம்பன் பாலத்தைப் பற்றி 5 தகவல்கள்!

பாம்பன் பாலத்தைப் பற்றி 5 தகவல்கள்!

By Staff

இந்தியாவில் எத்தனையோ கட்டுமான அற்புதங்கள், கோவில்களாக, வரலாற்றுச் சின்னங்களாக, பிரமாண்ட மாளிகைகளாக நிறைந்திருக்கின்றன. அவற்றிற்குப் பின் எத்தனையோ கதைகள், தகவல்கள் ஒளிந்திருக்கும். அதைத் தேடி தெரிந்து கொள்வதில் ஒரு தனி சந்தோஷம் வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் பிரமாண்ட அடையாளமான‌ பாம்பன் பாலைத்தைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

வரலாற்றுப் பின்னணி

வரலாற்றுப் பின்னணி

இந்தியாவிற்கும் இலங்கைகும் இடையே வணிக பரிவர்த்தனைகளுக்காக ஒரு இணைப்பு வேண்டும் என்று 1870'களில் ஆங்கிலேயர்கள் தீர்மானித்தார்கள். அப்போதே பாலம் கட்டுவதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால, கட்டுமான துவங்கியது 1911'இல்தான். 1914'இல் பாலம் திறக்கப்பட்டது.

Photo Courtesy :Thachan.makan

முதல் கடல்ப் பாலம்

முதல் கடல்ப் பாலம்

இந்தியாவின் முதல் கடல்ப் பாலம் என்ற பெருமை பாம்பன் பாலத்திற்கு உண்டு. மும்பையின் பாந்த்ரா-ஒர்லி கடல் இணைப்பு பாலம் - 2009'இல் திறக்கப்படும் வரை பாம்பன் பாலம்தான் இந்தியாவின் நீண்ட கடல் பாலம். 2 கி.மீ நீளத்தில் இருக்கும் பாம்பன் பாலத்தை மொத்தம் 143 தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன‌.

Photo Courtesy: Picsnapr

நூறாண்டுகளை கடந்து நிற்கும் உறுதி

நூறாண்டுகளை கடந்து நிற்கும் உறுதி

ஒரு பாலம் நூறாண்டுகளை வெற்றிகரமாக கடப்பது சாதாரண விஷயமல்ல. அதிலும் கடல் அரிப்புத்தன்மை அதிகம் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு பாலம் இத்தனை ஆண்டுகள் கடப்பது அதன் பின்னே இருக்கும் அபார உழைப்பையும், தொழில்நுட்பத்தையும் நமக்கு எடுத்து காட்டுகின்றன.

Photo Courtesy :Armstrongvimal

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

பாலத்தின் நடுப்பகுதிகள், சரக்கு கப்பல்கள் போவதற்காக மேலெழுந்து கொள்ளும். பின் கப்பல்கள் சென்றபின் ஒன்றாக சேர்ந்து கொள்ளும். இந்த தொழில்நுட்பத்தை வடிவமைத்தவர் ஜெர்மனிய நாட்டின் பொறியிலாளர் ஸ்கெர்சர். மாதத்திற்கு 10-15 படகுகள், சிறு கப்பல்கள் இந்த பாலத்தின் அடியில் செல்லும்.

Photo Courtesy :Vensatry

புதிய பாலம்

புதிய பாலம்

1988 வரை, ரயில்கள் செல்லும் இந்த ஒரு பாலம் வழியாகத்தான் ராமேஸ்வரத்திற்குச் செல்ல முடியும். 1988'இல்தான் பேருந்துகள் மற்ற வாகனங்கள் செல்ல இதன் அருகில் இன்னொரு பாலம் கட்டப்பட்டது.
2007'இல், இந்த 2 கி.மீ மீட்டர் கேஜ், அகலப்பாதையாக மாற்றப்பட்டது.

Photo Courtesy :Drajay1976

2009'இல், சரக்கு ரயில்கள் செல்வதற்கு ஏற்றதாக மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்திய ரயில்வே, பாம்பன் பாலத்தை, யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களில் சேர்ப்பதற்கு விண்ணப்பத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: pamban rameswaram bridges
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X