Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் ஆன்மா உயிர்ப்பெற்றது இங்கே தான்

இந்தியாவின் ஆன்மா உயிர்ப்பெற்றது இங்கே தான்

By Naveen

சில புகைப்படங்களுக்கு வார்த்தைகளால் செய்யமுடியாத தாக்கத்தை, சொல்லமுடியாத தாக்கத்தை கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு புகைப்படம் தான் இஸ்லாமிய சகோதரர் ஒருவர் கைகளில் செருப்பை பிடித்தபடி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலினுள் சென்று அங்கு அடைக்கலம் அடைந்திருக்கும் மக்களுக்கு உணவளிக்கும் காட்சி ஆகும்.

விடாது பெய்த பெருமழை எத்தனையோ நாசங்களை விளைவித்திருக்கிறது என்றாலும் நமக்குள் இருக்கும் மனித நேயத்தை நாமே உணர்வதற்கு காரணமாகவும் இருந்திருக்கிறது. இந்த புகைப்படம் இந்தியாவின் உண்மையான ஆன்மா புத்துயிர் பெற்றிருக்கிறது என்பதற்கு ஒரு சாட்சியாகும்.

நாம் வஞ்சகத்தால் ஆனவர்கள் இல்லை, நம்முடைய அடையாளங்கள் வேறாக இருந்தாலும் நம் வேர்கள் ஒன்று தான் என்பதை ஆணித்தரமாக உணர்த்தியிருக்கின்றது. இப்படிப்பட்டதொரு அரிய சம்பவம் நிகழ்ந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலை பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

பார்த்தசாரதி கோயில் :

பார்த்தசாரதி கோயில் :

இன்று நாம் பார்க்கும் பார்த்தசாரதி கோயிலுக்கு பின்னே நீண்ட நெடிய வரலாறு புதைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 1500ஆண்டு கால வரலாறு அது. தென் இந்தியாவை ஆண்ட பல சாம்ராஜ்யங்கள் சம்மந்தப்பட்டுள்ள வரலாறு அது. தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

எப்போது கட்டப்பட்டது?:

எப்போது கட்டப்பட்டது?:

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் கட்டப்பட்ட காலம் 8ஆம் நூற்றாண்டு ஆகும். மாமல்லன் முதலாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்ட இக்கோயிலில் விஷ்ணு பகவானின் ஐந்து அவதாரங்களான நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர் ஆகியோரின் சந்நிதிகள் இருக்கின்றன.

தமிழகத்தில் இருக்கும் மிகப்பழமையான கோயில்களுள் ஒன்றான இந்த பார்த்தசாரதி கோயில் 108 திவ்ய தேச கோயில்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

Roberta Romero

பார்த்தசாரதி என்றால் என்ன?:

பார்த்தசாரதி என்றால் என்ன?:

மகாபாரதத்தின் காப்பிய நாயகனான அர்ஜுனனுக்கு 'பார்த்தன்' என்ற பெயரும் உண்டு. அக்காப்பியத்தில் கிருஷ்ணாவதாரமாக இருந்த பெருமாள் இறுதிப்போரின் போது அர்ஜுனனின் சாரதியாக அதாவது தேரோட்டியாக இருந்திருக்கிறார்.

அப்படி பார்த்தனின் சாரதியாக, பார்த்தசாரதி ரூபமாக பெருமாள் இக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறார்.

Hayavadhan

கோயில் வரலாறு:

கோயில் வரலாறு:

எட்டாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னாளில் வந்த சோழ மன்னர்களாலும், 15ஆம் நூற்றாண்டில் வந்த விஜயநகர பேராசை சேர்ந்த மன்னர்களாலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

இக்கோயிலில் இருக்கும் கல்வெட்டுகளிலும், 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் எழுதிய நூல்களிலும் பல்லவ மன்னர்களின் பங்களிப்பை பற்றிய குறிப்புகளை நாம் காணமுடியும்.

Frederick Fiebig

கோயில் அமைப்பு:

கோயில் அமைப்பு:

இக்கோயில் மூலவராக கிருஷ்ண பகவான் உமையாள் ருக்மிணி அம்மையாரோடு காட்சி தருகிறார்.

ஸ்ரீ ராமர், கரிவரதர் என்றழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஆண்டாள், ஆஞ்சநேயர், பன்னிரு ஆழ்வார்கள், ராமானுஜர், மணவாள மாமுனிகள் போன்றோரது சந்நிதிகளும் இக்கோயில் வளாகத்தில் இருக்கின்றன.

Rasnaboy

கோயில் அமைப்பு:

கோயில் அமைப்பு:

இங்கே பார்த்தசாரதி பெருமாளுக்கும், நரசிம்மருக்கும் தனித்தனி கொடி மரங்கள் மற்றும் வாசல்கள் இருக்கின்றன.

பல்லவர்கள், சோழர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்கள் என தென்னிந்தியாவை ஆண்ட மூன்று மிகப்பெரும் சாம்ராஜ்யங்களின் கூட்டு படைப்பாக திராவிட கட்டிடக்கலையின் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாக இக்கோயில் திகழ்கிறது.

Mohan Krishnan

கோயிலின் சிறப்பு:

கோயிலின் சிறப்பு:

மகாபாரத போரில் ஆயுதம் எந்த மாட்டேன் என்று சபதம் மேற்கொண்டு பார்த்தனுக்கு சாரதியாக கிருஷ்ணர் பங்கேற்றதால் இக்கோயிலிலும் மீசையுடன் தனது பிராதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலேயே கிருஷ்ண பகவான் காட்சியளிக்கிறார்.

இப்படியொரு கோலத்தில் கிருஷ்ண பகவானை வேறெங்கும் காணமுடியாது என்பது இக்கோயிலின் பெரும் சிறப்புகளில் ஒன்றாகும்.

Sudhamshu Hebbar

கோயில் பிரசாதம்:

கோயில் பிரசாதம்:

பார்த்தசாரதி கோயிலில் தயிர்சாதம், புளியோதரை, சர்க்கரைப்பொங்கல் மற்றும் வடை ஆகியவை பிராசதமாக வழங்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி சமயத்தில் மட்டும் பார்த்தசாரதி பெருமாளுக்கு திருப்பதி எழுமலையான் போல அலங்காரம் செய்யப்பட்டு அந்த பத்து நாட்கள் திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Sankar.s

கோயில் திருவிழாக்கள்:

கோயில் திருவிழாக்கள்:

சித்திரை மாதம் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கும் ஆனி மாதத்தில் நரசிம்மருக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி மற்றும் சித்திரை மாதம் நடைபெறும்பிரம்மோற்சவ விழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர்.

Ssriram mt

மேலும் விவரங்கள் :

மேலும் விவரங்கள் :

இன்று சமூக ஊடகங்களில் வழியாக பரவிவரும் இந்த புகைப்படங்கள் இந்திய ஆன்மாவின் சாட்சியாக, நாம் வேறுபாடுகளை கடந்த மனிதர்கள் என்பதை உணர்த்துவதாக இருக்கின்றன.

இது நடந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலை பற்றிய மேலும் பல விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+