Search
  • Follow NativePlanet
Share
» »இனி கன்ஃபார்ம் டிக்கெட் இல்லாமலே நீங்கள் ரயிலில் பயணம் செய்யலாம்!

இனி கன்ஃபார்ம் டிக்கெட் இல்லாமலே நீங்கள் ரயிலில் பயணம் செய்யலாம்!

நீண்ட விடுமுறை, பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகைக் காலங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல. ஏற்கனவே அதில் அனுபவம் உள்ளவர்களுக்கு அதனுள் இருக்கும் சிரமம் என்னவென்று நன்கு தெரியும். ஆனால், இனி உறுதி செய்யப்படாத (Conformed) டிக்கெட்டிலேயே நீங்கள் பயணிக்கலாம் என IRCTC அறிவித்துள்ளது! இது பயணிகளிடையே சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைப் பற்றிய விரிவான செய்திகள் இதோ!

சொந்த ஊர்களுக்கு திரும்பும் மக்கள்

சொந்த ஊர்களுக்கு திரும்பும் மக்கள்

சென்னை, மும்பை, பெங்களூர், கொல்கத்தா மற்றும் டெல்லி போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் யாவரும் அந்த ஊர்களை சார்ந்தவர்கள் அல்ல. அனைவருமே வெளியூர் மக்கள் தான்! பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் யாவரும் சொந்த ஊர்களுக்கு திரும்பவது இது மாதிரியான விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் தான்! ஆனால் ஊருக்கு செல்வது அவ்வளவு சாமானியமான விஷயம் இல்லை. ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது கடினம், செய்த டிக்கெட்டுகளும் கூட வெயிட்டிங் லிஸ்டில் தான் இருக்கும். இந்த சூழலில் பொதுமக்களின் வசதிக்காக இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். இப்போது உறுதி செய்யப்படாத (Conformed) டிக்கெட்டிலேயே நீங்கள் பயணிக்கலாம் என IRCTC அறிவித்துள்ளது.

கன்ஃபார்ம் டிக்கெட் இல்லாமலே பயணிக்கலாம்

கன்ஃபார்ம் டிக்கெட் இல்லாமலே பயணிக்கலாம்

நீங்கள் புக் செய்த டிக்கெட், உறுதிப்படுத்தப்படாமல் இருந்தால் கவலை வேண்டாம். நீங்கள் டிக்கெட் சாளரத்தில் (ticket window) வாங்கிய டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதை காண்பித்து நீங்கள் ரயிலில் பயணிக்கலாம். ஆனால் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு இது பொருந்தாது. ஆன்லைனில் டிக்கெட் உறுதி செய்யப்படாவிட்டால் பயணிகள் ரயிலில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். டிக்கெட்டின் விலை திருப்பித் தரப்படும்.

Quick Tatkal இல் டிக்கெட் முன்பதிவு

Quick Tatkal இல் டிக்கெட் முன்பதிவு

இதற்கிடையில், புதிய அங்கீகரிக்கப்பட்ட தட்கல் முன்பதிவு செயலியான Quick Tatkal மூலம் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ஆர்டர் செய்யலாம். ரயில் டிக்கெட்டுகளைப் பெற, ஐஆர்சிடிசியின் பிரீமியம் முன்பதிவு கூட்டாளர்களில் ஒருவரான ரெய்லோஃபியுடன் குயிக் தட்கல் இணைந்துள்ளது. அனைத்து தகவல்களையும் முன்கூட்டியே நிரப்புவதன் மூலம் தட்கல் டிக்கெட்டை விரைவாக பதிவு செய்வதற்கான தனித்துவமான செயல்பாடுகளை இந்த மென்பொருள் கொண்டுள்ளது.

பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள்

பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள்

சாத் மற்றும் தீபாவளியை முன்னிட்டு ஏற்கனவே 179 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, விடுமுறை காலம் முழுவதும் சிறப்பு ரயில்களை இயக்க சில மாநிலங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. உறுதிப்படுத்தப்பட்ட இருக்கையைப் பெற முன்கூட்டியே முன்பதிவு செய்யுங்கள். இல்லையெனில், இருக்கை கிடைப்பது சவாலாக இருக்கும். தட்கல் டிக்கெட்டை வாங்குவது உங்களுக்கு இருக்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் என்றாலும், தற்போது அவ்வாறு செய்வது கடினமாக உள்ளது அதனால் சாளர டிக்கெட்டுகளை (ticket window) சிறந்த தேர்வாக இருக்கும். நீங்களும் இதை உபயோகித்து சென்று வாருங்கள்!

எனவே IRCTC அறிவித்துள்ள புதிய சலுகையை உபயோகிப்படுத்தி இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்து பயணித்திடுங்கள்!

Read more about: irctc travel tips train journey
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X