Search
  • Follow NativePlanet
Share
» »பசும்பொன் கிராமத்துல அப்படி என்னதான் இருக்கு தெரியுமா?

பசும்பொன் கிராமத்துல அப்படி என்னதான் இருக்கு தெரியுமா?

பசும்பொன் கிராமத்துல அப்படி என்னதான் இருக்கு தெரியுமா?

By IamUD

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவரும் அரசியல்வாதியுமான முத்துராமலிங்கனாரின் சொந்த ஊரான பசும்பொன்னுக்கு ஒரு பயணம் செல்வோம். மேலும் அங்கு என்னவெல்லாம் இருக்கிறது என்பதையும், சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்கள், அருகில் செல்லவேண்டிய இடங்கள் குறித்தும் இந்த பதிவில் காண்போம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

எங்கே உள்ளது

எங்கே உள்ளது

ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கிராமம். விருதுநகர், அருப்புக்கோட்டை, சாயல்குடி போன்ற ஊர்களிலிருந்து மிக அருகிலேயே இந்த கிராமம் அமைந்துள்ளது

விழா

விழா

தேவர் ஜெயந்தி என்று அழைக்கப்படும் விழாவானது இங்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் நாள் கொண்டாடப்படுகிறது. தமிழகமெங்கும் இருந்து இந்த விழாவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதும்.

சுற்றியுள்ள இடங்கள்

சுற்றியுள்ள இடங்கள்

பசும்பொன் கிராமத்துக்கு அருகில் நிறைய சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. இவை ஒரு நாளில் சென்று திரும்பும் வகையில் அமைந்துள்ளன.

இந்த ஊரில் பெரும்பாலும் கோவில்களே இருக்கின்றன. பசும்பொன் நினைவிடம் எல்லாரும் காணவேண்டிய ஒரு பகுதி ஆகும். அய்யனார் கோவில், சக்தி மாரியம்மன் கோவில், கோட்டைமேடு ஈஸ்வரி அம்மன் கோவில் ஆகியன இருக்கின்றன.

கமுதி கோட்டை

கமுதி கோட்டை

அழிவின் விளிம்பில் இருக்கும் கமுதி கோட்டை இந்தியாவின் ஒரு வரலாற்று நினைவுச் சின்னமாகும். 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டை மிகவும் சிறப்பு வாய்ந்தது இன்று அழிவின் விளிம்பில் காத்துக்கிடக்கிறது.

தமிழக அரசு தொல்லியல் துறையின் புராதான சின்னம் இது.

உலகப்புகழ் பெற்ற ராமேஸ்வரம்

உலகப்புகழ் பெற்ற ராமேஸ்வரம்

இந்த ஊரிலிருந்து வெகு அருகிலேயே ராமநாதபுரம் அரண்மனை, பாம்பன் பாலம், தனுஷ்கோடி என உலகப்புகழ் பெற்ற இடங்கள் இருக்கின்றன. இங்கு உலகின் பல இடங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

Wiki

 ஆறுமுகக் கோட்டை

ஆறுமுகக் கோட்டை

முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னர் கட்டிய ஆறுமுகக் கோட்டையும் இங்கு மிகப் புகழ் வாய்ந்தது. ஆனால் தற்போது அது கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ளது. அரசு இதைப் பாதுகாக்கவேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் வந்துகொண்டிருக்கின்றன.

உத்திரகோசமங்கை

உத்திரகோசமங்கை


இராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் சிவ பெருமானுக்கான கோவிலான உத்திரகோசமங்கை ஒவ்வொரு வருடமும் சைவப்பிரிவினை சேர்ந்தவர்களை பெருமளவில் வரவழைக்கும் சுற்றுலா தலமாகும். மாணிக்கவாசகரின் வரிகளில் இந்த புகழ் பெற்ற கோவிலை பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்த கோவிலை பரமக்குடி மற்றும் இராமநாதபுரத்திலிருந்து எளிதில் அடைய முடியும்.

Ssriram mt

காந்தமதனா பர்வதம்

காந்தமதனா பர்வதம்


காந்தமதனா பர்வதம் என்பது இராமநாதசுவாமி கோவிலிற்கு வடக்கில் உள்ள சிறிய மலைப்பகுதியாகும். 3 கிமீ தொலைவில், நடந்து சென்று அடையக்கூடிய வகையில் உள்ள இந்த இடம், இராமேஸ்வரத்தின் மிகவும் உயரமான இடமாகும். இந்த மலையின் உச்சியில் ராமர் பாதம் என்றழைக்கப்படும் கோவில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இந்த காந்தமதனா பர்வதம் செல்லும் வழியில் உள்ள ஒரு இரண்டடுக்கு வளாகத்தில், இராமருடைய பாதம் ஒரு சக்கரத்தில் பதிக்கப்பட்டுள்ளது.

Ravichandar

 குருசடை தீவு,

குருசடை தீவு,

மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் இந்த தீவுகள், மண்டபம் பகுதியில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது. மன்னார் வளைகுடாவில் வாழ்க்கையை அனுபவித்திடும் டால்பின்கள் மற்றும் கடற்பசுக்களை இந்த தீவில் உங்களால் காண முடியும். இந்த கடற்பகுதியின் சுற்றுப்புறங்களிலிருந்து பெரிதும் தனித்தன்மையாக மாறுபட்டுள்ள பாலனோக்லோஸ்ஸஸ் என்ற அரிய வகை வாழும் கடற்பாசிகளை இந்த தீவு பெற்றுள்ளது.


Achuudayasanan

 அரியமான் கடற்கரை

அரியமான் கடற்கரை

பாக் நீரிணைப்பின் ஒரு பகுதியில் அமைந்துள்ள அரியமான் கடற்கரை நன்றாக பராமரிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்காக, எப்பொழுதும் சுத்தமாக வைக்கப்பட்டிருக்கும் பிடித்தமான கடற்கரையாகும். சுற்றுலா வருவதை மட்டுமே பொழுது போக்காக கொண்டிருக்கும் இராமேஸ்வரம் பகுதி மக்களில் பெரும்பாலோனோர் அடிக்கடி வந்து செல்லும் கடற்கரையாக இது உள்ளது.

Read more about: travel ramanadhapuram
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X