Search
  • Follow NativePlanet
Share
» »சபரிமலைக்கு போறவங்க பக்கத்துல வேற என்னவெல்லாம் காணலாம் தெரியுமா?

சபரிமலைக்கு போறவங்க பக்கத்துல வேற என்னவெல்லாம் காணலாம் தெரியுமா?

சபரிமலைக்கு போறவங்க பக்கத்துல வேற என்னவெல்லாம் காணலாம் தெரியுமா?

இறைவனின் சொந்த நாடு என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தின் மிகச்சிறிய மாவட்டமாக பத்தனம்திட்டா மாவட்டம் அறியப்படுகிறது. இந்த மாவட்டம் தற்போது கேரளாவின் முக்கிய வணிக மையமாக திகழ்ந்து வருகிறது. இந்த மாவட்டத்தின் பெயர் 'பத்தனம்' மற்றும் 'திட்டா' ஆகிய இரு வார்த்தைகள் சேர்ந்து உருவானது. இதற்கு 'நதியோரத்தில் கொத்தாக அமைந்திருக்கும் பத்து வீடுகள்' என்று பொருள். பத்தனம்திட்டா மாவட்டம் அதன் படகுப் போட்டிகள், ஆலயங்கள் மற்றும் கலாச்சார பயிற்சி மையத்துக்காக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் தென்னிந்தியாவின் அதித பக்தர்கள் செல்லும் சபரி மலை இந்த மாவட்டத்திலேயே அமைந்துள்ளது. இங்கு செல்பவர்கள் இந்த மாவட்டத்தில் வேறு என்னவெல்லாம் காணலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

யாத்ரீக தலைநகரம்

யாத்ரீக தலைநகரம்

இந்தியா முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் சபரிமலை, பத்தனம்திட்டா மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது. இதன் காரணமாக கேரளாவின் யாத்ரீக தலைநகரமாக பத்தனம்திட்டா மாவட்டம் கருதப்படுகிறது.

Praveenp

 கலைகள்

கலைகள்

பத்தனம்திட்டா மாவட்டம் பாரம்பரிய கலைகளுக்காகவும்,கலாச்சாரத்துக்காகவும் வெகுப்பிரபலம். இந்த மாவட்டத்தில் உள்ள கடமநிட்டா தேவி கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் படயணி எனும் சம்பிரதாய நடனத்தை காண ஒவ்வொரு கலா ரசிகர்களின் உள்ளமும் ஏங்கும்.

rajaraman sundaram

கலை மற்றும் சுவரோவியங்கள்

கலை மற்றும் சுவரோவியங்கள்


பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வாஸ்துவித்யா குருகுலம் வாஸ்துக் கலை மற்றும் சுவரோவியங்களை பாதுகாப்பதிலும், அவைகளின் வளர்ச்சியிலும் முன்னோடியாக விளங்கி வருகிறது.

Dvellakat

அரன்முளா கண்ணாடி

அரன்முளா கண்ணாடி

உலோகக் கலவை கொண்டு தயாரிக்கப்படும் உலகப் புகழ்பெற்ற 'அரன்முளா கண்ணாடி' பத்தனம்திட்டா வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரசித்தம். இந்த கண்ணாடியை உருவாக்கும் தொழிற்நுட்பம் குடும்ப ரகசியமாக பாதுகாக்கப்பட்டு இன்று பல சந்ததிகளை தாண்டி அந்த குடும்பத்தை சேர்ந்த கைவினைக்கலைஞர்கள் அதை செய்து வருகின்றனர்.

Rajesh Nair

 ஆன்மீக சுற்றுலா

ஆன்மீக சுற்றுலா


பத்தமனம்திட்டா மாவட்டத்துக்கு நீங்கள் சுற்றுலா வரும் போது ஸ்ரீ வல்லபா கோயில், மலங்கரா ஆர்தோடக்ஸ் தேவாலயம், குடமன் சிலந்தியம்பலம், கவியூர் மஹாதேவா கோயில் போன்ற இடங்களுக்கு கண்டிப்பாக சென்று வர வேண்டும்.

Akhilan

 அரன்முளா பார்த்தசாரதி கோயில்

அரன்முளா பார்த்தசாரதி கோயில்

பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அரன்முளா எனும் சிறிய கிராமத்தில், பம்பை நதிக் கரையில் அரன்முளா பார்த்தசாரதி கோயில் அமைந்திருகிறது. இந்தக் கோயிலின் முதன்மை தெய்வமான பார்த்தசாரதியின் சிலை தன கையில் சுதர்ஷன் சக்கரத்துடன் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

Dvellakat

 கட்டிடக் கலை

கட்டிடக் கலை

இந்தக் கோயில் வட்டவடிவில் கேரள பாரம்பரிய கட்டிடக் கலையில் கட்டப்பட்டிருக்கும் பாங்கு மிகவும் அலாதியானது. அரன்முளா கிராமத்தில் ஓணம் திருவிழாவின் போது நடத்தப்படும் அரன்முளா வல்லம்கலி என்று அழைக்கப்படும் பாம்புப் படகுப் போட்டி இந்தியா முழுவதும் வெகுப்பிரபலம்.

Ramjchandran

அரன்முளா கண்ணாடி

அரன்முளா கண்ணாடி

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் மறக்காமல் வாங்கிச் செல்லும் உலகப் புகழ்பெற்ற அரன்முளா கண்ணாடி, அரன்முளா கிராமத்தின் குன்றாப் புகழுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது.

rajaraman sundaram

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X