» »இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் பீர்மேடு எவ்வளவு அற்புதமான சுற்றுலாத்தலம் தெரியுமா?

இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் பீர்மேடு எவ்வளவு அற்புதமான சுற்றுலாத்தலம் தெரியுமா?

Written By: Staff

கேரளா மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத அற்புதமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று தான் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் பீர்மேடு ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 3002 அடி உயரத்தில் இருக்கும் இந்த மலைவாசஸ்தலத்தில் சுற்றிப்பார்க்க வழக்கமான சுற்றுலாத்தலங்களில் இருப்பதை விடவும் வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. 

பீர்மேடு மாளிகை:  

இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் பீர்மேடு எவ்வளவு அற்புதமான சுற்றுலாத்தலம் தெரியுமா?

Reji Jacob

திருவிதாங்கூர் சமஸ்தான அரசர்களின் கோடை வசிப்பிடமாக இருந்தது தான் இந்த மளிகை ஆகும். இந்த மாளிகைக்கு அருகில் தான் 'பீர் முஹமது' என்ற சூபி துறவியின் சமாதி இருக்கிறது.

அருவிகள்:  

இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் பீர்மேடு எவ்வளவு அற்புதமான சுற்றுலாத்தலம் தெரியுமா?

Anulal 

பீர்மேடு மலையை சுற்றி ஏராளமான அருவிகள் இருக்கின்றன. பீர்மேட்டில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் இருக்கும் வளஞ்சங்கனம் அருவி இங்கிருக்கும் பிரபலமான சுற்றுலாத்தலம் ஆகும். அதுதவிர பாஞ்சாலிமேடு, நல்லதண்ணி அருவி, மேலோரம் போன்றவையும் சுற்றிப்பார்க்க நல்ல இடங்களே. 

ட்ரெக்கிங்:  

இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் பீர்மேடு எவ்வளவு அற்புதமான சுற்றுலாத்தலம் தெரியுமா?

Joby Joseph

பீர்மேடு மலைப்பிரதேசத்தில் டிரெக்கிங் செல்வது சாகசப் பிரியர்களின் மிகவும் விருப்பமான பொழுபோக்கு.இந்த மலைக்குன்றுகளில் நீங்கள் குதிரையேற்றம், மிதிவண்டி பயணம் போன்றவற்றிலும் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.

பீர்மேடு மலைப்பிரதேசத்தில் கல்தோட்டி, வாகமன், கரண்டகபாரா, கிராம்பி, பரந்துபரா, மேமலா போன்ற குன்றுகள் புகழ்பெற்ற டிரெக்கிங் குன்றுகளாக அறியப்படுகின்றன. 

குட்டிக்கணம்:  

இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் பீர்மேடு எவ்வளவு அற்புதமான சுற்றுலாத்தலம் தெரியுமா?

குட்டிக்கணம் குன்றுகள் இங்கிருக்கும் இயற்கையழகு மற்றும் அற்புதமான இதமான வெப்பநிலை நிலவுவதால் தேன் நிலவு வர நல்லதொரு இடமாக இருந்து வருகிறது. அதோடு குட்டிக்கணம் குன்றுகள் நம் மனதுக்கு புத்துணர்ச்சி தரும் ஓரிடமாக இருக்கும் .

Read more about: kerala, idukki, கேரளா