Search
  • Follow NativePlanet
Share
» »கொல்கத்தாவில் புகைப்படங்கள் எடுப்பதற்கே உருவான இடங்களைப் பாருங்களேன்!

கொல்கத்தாவில் புகைப்படங்கள் எடுப்பதற்கே உருவான இடங்களைப் பாருங்களேன்!

By Udhaya

பொதுவாக நாம் எந்த இடத்துக்கு போனாலும் நம்மை அரியாமலே அந்த நிகழ்வை பதிவு செய்ய நினைப்போம். இப்போதைய டிரெண்டிங்க்கில் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடவே அனைவரும் விரும்புகிறோம். இப்படி கொல்கத்தாவில் புகைப்படங்கள் எடுப்பதற்கென்றே சிறந்த இடங்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

சால்ட் லேக் ஸ்டேடியம்

சால்ட் லேக் ஸ்டேடியம்

இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு சொந்தமான இந்த சால்ட் லேக் ஸ்டேடியம் உலகிலேயே இரண்டாவது பெரிய மைதானமாகும். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறும் இடமாக இது பயன்படுத்தப்படுகிறது. நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள இந்த பிரபல மைதானம் கொல்கத்தாவில் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய அம்சமாகும். இந்த இடத்துக்குச் சென்று புகைப்படம் எடுத்துவிட்டு வருவது மிகவும் நல்ல அனுபவமாக இருக்கும்.

Ramesh NG

ஹௌரா பாலம்

ஹௌரா பாலம்

கல்கொத்தாவின் முக்கிய அடையாளமான ஹௌரா பாலத்தை பார்த்துவிட்டு அதன் பின்னணியில் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளாமல் யாருமே திரும்புவதில்லை. இந்த தொங்குபாலம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1943ம் ஆண்டு கட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை இது பல்வேறு பாலிவுட் ஹாலிவுட் சினிமாக்காட்சிகளிலும் இடம்பெற்று வந்துள்ளது.

Glenn Strong

ஹௌரா பால சந்தை

ஹௌரா பால சந்தை

இந்த ஹௌரா பாலத்துக்கு அருகே அமைந்துள்ள ஒரு சந்தை மிகவும் புகழ் பெற்றது. இங்கு கிடைக்காத பொருள்களே இல்லை எனும் அளவுக்கு மேற்கு வங்கத்திலேயே புகழ்பெற்ற சந்தை இதுவாகும்.

Reuben Strayer

ஈடர்ன் கார்டன்

ஈடர்ன் கார்டன்

கொல்கத்தா நகரத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானம் இது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் பயிற்சியில் ஈடுபடும் களமாகவும் இது தற்போது பயன்படுத்தப்படுகிறது. தீவிர கிரிக்கெட் ஆர்வலர்கள் கொல்கத்தா நகரத்திற்கு விஜயம் செய்யும்போது நிச்சயம் இந்த மைதானத்தை பார்த்து விரும்புவர். அப்போது ஏதேனும் விளையாட்டு போட்டி நடந்துகொண்டிருப்பின் பயணிகளுக்கு அதைவிட மகிழ்ச்சி வெறொன்றுமில்லை.

JokerDurden

 பார்க் ஸ்ட்ரீட்

பார்க் ஸ்ட்ரீட்

கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள குயின்ஸ் பில்டிங்க் இதுவாகும்.

பார்க் ஸ்ட்ரீட் மற்றும் அதை ஒட்டியுள்ள காமக் ஸ்ட்ரீட் ஆகிய இரண்டும் கொல்கத்தா நகரத்தின் நவநாகரிக ஷாப்பிங் பகுதியாகும். இங்கு எல்லா சர்வதேச பிராண்டுகளின் கடைகளும் அமைந்துள்ளன.

இங்குள்ள நடைப்பாதைகளில் பலவிதமான பொருட்களை பேரம் பேசி வாங்கலாம். அலுவல் ரீதியாகவோ சுற்றுலாப்பயணமாகவோ நீங்கள் கொல்கத்தா நகரத்திற்கு விஜயம் செய்யும் பட்சத்தில் இந்த மார்க்கெட் பகுதிக்கு ஒரு முறை வருகை தருவது சிறந்தது. இரவு நேரத்தில் பார்க் ஸ்ட்ரீட் பிரதேசம் முழுதும் ஜொலிக்கும் அழகுடன் காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Christopher Fynn

அலிபூர் ஜூ

அலிபூர் ஜூ

கொல்கத்தாவின் அலிப்பூர் சரணாலயத்தில் ஒரு சுற்றுலாப் பயணிகள் குழு ஈமுவிற்கு உணவூட்டுகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் துவங்கப்பட்ட இந்த அலிபூர் ஜூ எனும் மிருகக்காட்சிசாலை கொல்கத்தா நகரத்தின் சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இந்த பூங்காவின் அழகு புகைப்பட ஆர்வலர்க விரும்பக்கூடிய வகையில் உள்ளது.

மாலை நேர குடும்ப பொழுதுபோக்கிற்கும் இது ஏற்ற இடமாகும். 250 ஆண்டுகள் கடந்து உயிர்வாழும் ஒரு ஆமையை பாதுகாப்பதற்காக சமீபத்தில் இந்த பூங்கா பாராட்டுகளை பெற்றுள்ளது.

Kingshuk Mondal

விக்டோரியா மெமோரியல்

விக்டோரியா மெமோரியல்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை நினைவுறுத்தும் வகையில் தாஜ் மஹாலை ஒத்த தோற்றத்துடன் இந்த விக்டோரியா மெமோரியல் அமைந்துள்ளது. 1921ம் ஆண்டு பொது மக்களுக்கு திறந்துவிடப்பட்ட இந்த மாளிகையில் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினரின் சில அரிய புகைப்படங்கள் காணப்படுகின்றன. அற்புதமான கட்டிடக்கலை அம்சத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த மாளிகையை பார்த்து ரசிப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். ரம்மியமான புல்வெளி வளாகத்தை கொண்டிருப்பதால் ஒரு முக்கியமான பொழுதுபோக்கு ஸ்தலமாக இது பயணிகளை ஈர்க்கிறது.

Neil Ghosh

தலைமை தபால் அலுவலகக்கட்டிடம்

தலைமை தபால் அலுவலகக்கட்டிடம்

ஜெனரல் போஸ்ட் ஆஃபீஸ் என்று அழைக்கப்படும் தலைமை தபால் அலுவலகக்கட்டிடம் கொல்கத்தா நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நகரத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக இந்த கட்டிடம் பிரசித்தி பெற்றுள்ளது. புகைப்படக்கலைஞர்கள் விதவிதமாக இதனை படம் பிடித்துள்ளனர்.

குமிழ் கோபுர அமைப்புடன் வெள்ளை நிறத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் இக்கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். கொல்கத்தா நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாக இது தற்போது புகழுடன் அறியப்படுகிறது.

Manuel Menal

Read more about: travel kolkata india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X